சிறப்பு கன்வென்ஷன்
தொடர்புக்கு மா.செல்வரங்கம் ,மாவட்ட செயலர் , 94436 94437
தமிழ்நாட்டின் போரம் சார்பாக மாநிலம் முழுதும் தோழர்களை திரட்டி இன்முகசேவை திட்டம் குறித்த சிறப்பு கன்வென்ஷன் ஒன்றை நடத்துவது என முடிவெடுத்தோம். புதுவை போரம் நமது வேண்டுகோளை ஏற்று நடத்திட முன் வந்திருக்கிறார்கள். சங்கங்களின் பொதுச்செயலர்கள்,CGM,GMகள், மாநில செயலர்கள் உரையாற்ற இருக்கின்றனர். தமிழகத்தின் வருவாய் இலக்கான 2400 கோடி என்பதை அனைவரும் சேர்ந்து எட்டுவது, BSNL எனில் Fault Free service- Immediate Restoration ,retentivity of our esteemed Customers, New connections on demand ,Polite and dignified reception at our CSCs போன்றவற்றிற்கான உந்துதலை நாமும் நிர்வாகமும் ஒருசேர பெற்றிட பாண்டிச்சேரி சிறப்புக் கூட்டம் உதவிடும் வகையில் அமைக்கபடுகிறது. ஜனவரி 19 இந்திய தொழிலாளிவர்க்கத்தின் உச்ச போராட்ட நினவுகளை தரும் நாள்.இளம் தோழர்களான ஞானசேகரன், அஞ்சான், நாகூரான் ஆகியோரை நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் உயிர்ப்பலி கொண்ட நாள். ஆதிக்க வெறிகளையும் அதிகார வெறிகளையும் எதிர்கொண்டு நாட்டின் நலன் காக்கும் போராட்டத்தில், பொதுத்துறை காக்கும் போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் முன்நிற்கும் என உலகிற்கு காட்டிய நாள். ஜனவரி 19 அன்று திரளாக பாண்டிச்சேரியில் காலை 9.30 க்கு கூடுவோம். டெலிகாமின் பொதுத்துறையான BSNL காக்கும் போர் என புரிதலுடன் திரள்வோம்!