தர்ணா முதல் நாள் படம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி புதுச்சேரியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் செவ்வாய்கிழமை (ஜன-6)துவங்கி நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு புதுவை பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். அமைப்பாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், செல்வ ரங்கம் ,மணிகண்ணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

கிராமப்புற சேவையை வழங்குவதால் பிஎஸ்என்எல்லுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடுகட்ட வேண்டும். சேவையை விரைவுபடுத்தவும், மேம்படுத்தவும் புதிய கருவிகளை வாங்க வேண்டும். நிறுவன நலனுக்கு எதிரான கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது. 4 ஜி சேவையை உடனடியாக தொடங்க அனுமதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் சேவையை கட்டாயமாக்க வேண்டும். இலவச அலைக்கற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இன்று தொடங்கிய போராட்டம் 3 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது.