ஞாயிறு, ஏப்ரல் 28, 2013

மிரட்டும் தாதா

மிரட்டும்  தாதா 
கடலூர் தொலைபேசிக் கிளையில் அத்துமீறல்

இன்று காலை தபால் தந்தி ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை தேர்தலுக்கான பிரச்சாரத்திற்க்கு திருப்பாப்புலியூர் தொலைபேசி நிலையம் சென்ற நமது மாவட்ட செயலர் இரா. ஸ்ரீதர் அவர்கள் அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் மாவட்ட சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற பிரச்சார நோட்டீசை ஒட்டியபொழுது அங்கிருந்த தோழர். விநாயகமூர்த்திமாவட்ட செயலரை தள்ளிநோட்டீசை கிழித்தார். அதை தடுக்க முற்பட்ட மாவட்ட செயலரை தாக்கவும் முயற்சி செய்தார். இந்தத் தவறை சுட்டிக்காட்டிய மற்ற தோழர்களின் மீதும்நமது மாவட்ட செயலரின் மீதும்நமது சம்மேளன செயலரின் அறிவுறுத்தலின்படி திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் 9 நபர்களின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மாலை 5.30 மணிக்கு காவல் நிலையத்திற்க்கு விசாரனைக்கு வரும்படி காவல் நிலைய அதிகாரியிடமிருந்து தொலைபேசி மூலம் செய்தி வந்துள்ளது. 
அநியாயத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் மாவட்ட செயலரின் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை நியாயத்தின் பக்கம் நின்று எதிர்கொள்வோம். 
இந்த அநாகரீக செயலை மாவட்ட சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
-       மாவட்ட சங்கம்-கடலூர்                                               


கடலூர் மாவட்ட செயலர் மாவட்டசங்க அறிக்கை ஒட்டும்பொழுது கிளை செயலர் தாக்கிட முயற்சி செய்வது, அறிக்கைகை கிழித்துஎறிவது என்பது எல்லாம் திட்டமிட்ட வன்முறை செயலாகும்.
மற்ற மாவட்டத்தைபற்றி எச்சரிக்கை, தரமற்றவிமர்சனம்,மாநிலசெயலருக்கு எச்சரிக்கை இதுபோன்ற எல்லை மீறிய செயல்
அரங்கேறி வருகிறது. மாநில தாதா நானே என தொடர்ந்து செயல்படுகிறது.
கடலூர் பிரச்சனை அன்று மாலை தோழர்கள் சுமுகமாக பேசி தீர்த்திட முடிவுஎடுத்தனர்.
ஆனால் இதை ஊதிட,மேலும் பெருசாக்கிட, மாநிலம் முழுவதும் கொண்டுசெல்ல திட்டமுடுவது,ஏற்பாடு செய்வது நல்ல செயல் அல்ல.வன்முறை தீர்வு அல்ல.கடந்த கால அனுபவம் உணர்த்திஉள்ளது என்பதை மறக்காமல் இருப்பது நல்லது.அது ஒரு வழி பாதை அல்ல.