புதன், ஏப்ரல் 13, 2016

செய்திகள்

செய்திகள்

 2007ம் ஆண்டு   TTA ஆளெடுப்பில் 
பணி நியமனம் பெற்ற அனைவரையும்   
22/05/2016 நடைபெறவுள்ள JTO போட்டித்தேர்வுக்கு
 தற்காலிகமாக அனுமதிக்குமாறு BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 

2007ம் ஆண்டிற்கான TTA  காலியிடங்களுக்கு தேர்வு பெற்றிருந்த போதிலும், பல தோழர்கள் பயிற்சி முடித்து 01/07/2008க்குப்பின்தான் பணி நியமனம் பெற்றனர். அத்தகைய தோழர்கள் ஆந்திராவில் நீதி மன்றம் சென்றனர். ஆந்திர நீதிமன்றம் அவர்களை தேர்வுக்கு அனுமதிக்குமாறு நிர்வாகத்திற்கு உத்திரவிட்டது. நீதிமன்ற உத்திரவை அனைத்து தோழர்களுக்கும் அமுல்படுத்திட நமது சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. தற்போது அனைவரும் 
தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
===============================================
விதி 8 - RULE 8ன் கீழ் மாற்றலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோழர்கள் தங்களது விருப்ப மாற்றலை ERP மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என CORPORTE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.
===============================================
BSNL அதிகாரிகளுக்கான
POST PAID  செல் இலவச உபயோக அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
B பிரிவு அதிகாரிகள் மாதம் ரூ.700/- வரையிலும்...
A பிரிவு அதிகாரிகள் மாதம் ரூ800/-வரையிலும்...
இலவசமாகப் பேசிக்கொள்ளலாம்.

அனைத்து அதிகாரிகளுக்கும்  STD வசதியும்...
தேசம் முழுவதும் இலவசமாக ஊர்சுற்றும் ROAMING வசதியும் உண்டு...
===============================================
தமிழகத்தில் DELOITTE குழு பரிந்துரைகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. 08/04/2016 அன்று அனைத்து அதிகாரிகள் அமைப்புக்களையும்  மாநில நிர்வாகம் சந்தித்துள்ளது. தற்போதைய 17 SSA  - மாவட்டங்களை 
10 வணிகப்பகுதிகளாக BUSINESS AREAவாக  மாற்றும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. DELOITTE சம்பந்தமாக ஊழியர் சங்கங்களுடன் கலந்தாலோசனை நடைபெறவில்லை. தேர்தலுக்குப்பின் கலந்தாலோசனைக்கூட்டம்  நடைபெறலாம்.