சனி, டிசம்பர் 13, 2014

சிலவரிச் செய்திகள்...

யூனியன் வங்கி 
புரிந்துணர்வு நீட்டிப்பு 
UNION BANK OF INDIA MOU RENEWAL 

BSNL ஊழியர்கள்  கடன் பெறுவதற்காக  
யூனியன் வங்கியுடன் போடப்பட்ட 
புரிந்துணர்வு ஒப்பந்தம் 
03/11/2014 தேதியுடன் முடிவடைந்திருந்தது. 
தற்போது மீண்டும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிலவரிச் செய்திகள்...

தற்போது BSNL ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடாக LIC நிறுவனம் மூலம் GSLI எனப்படும் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீட்டு முறை அமுலில் உள்ளது. தற்போது இந்த திட்டம் 31/07/2014 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அமுல்படுத்தப்படும் எனவும்,  
01/08/2014 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொருந்தாது எனவும் 
LIC கூறியுள்ளது.  IRDA எனப்படும்   ஆயுள் காப்பீட்டு
 ஒழுங்கு முறை ஆணையத்தின் முடிவிற்கிணங்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

01/08/2014க்குப்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு 
புதிய திட்டம் அமுல்படுத்தப்படும்.
===============================================================
BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பதவிகளை நிரப்ப வேண்டும் என்பது ஊழியர்கள் கூட்டமைப்பின் கோரிக்கை. அதன் அடிப்படையில் DIRECTOR (EB) பதவிக்கு திரு.N.K.மேத்தா அவர்களும், DIRECTOR(FINANACE ) பதவிக்கு திருமதி.யோஜனாதாஸ் அவர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்
==============================================================
சென்ற 2013-14 நிதியாண்டில் BSNLக்கு 7000 கோடி நட்டம் ஏற்பட்டாலும் மூன்று மாநிலங்கள் மட்டும் லாபம் ஈட்டியுள்ளன. 
கேரளா 397 கோடியும், 
ஜம்முகாஷ்மீர் 9.37 கோடியும், 
ஒரிசா 5.16 கோடியும் 
லாபம் காட்டியுள்ளதாக இலாக்கா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
==============================================================
10/12/2014 அன்று நடைபெற்ற பதவி பெயர் மாற்றக்குழுக் கூட்டத்தில் முழுமையான முடிவுகள் எடுக்கப்படவில்லை. 
TTA பதவியை JUNIOR ENGINEER என அழைப்பது பற்றியும் 
SR.TOA பதவியை TELECOM ASSOCIATE/ SUERINTENDENT 
என அழைப்பது பற்றியும் 
தங்களுக்குள் பேசி பின் முடிவு சொல்வதாக
 நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

போனஸ் குழுக்கூட்டத்திலும் சாதகமான முடிவு எட்டப்படவில்லை. CDMA சேவை போனசிற்கு  கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது 
என்பது மட்டுமே சாதகமான அம்சம். 

JTO புதிய ஆளெடுப்பு விதிகளுக்கான ஒப்புதல் 
வழக்கம்போல கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

மொத்தத்தில் ஊழியர்கள் பிரச்சினை தீர்வில்..
BSNL நிர்வாகத்தின் வழக்கமான 
கழுவுதலில் நழுவுதல் என்னும் நிலை தொடருகின்றது. 

12122014 கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்
போரம்  சார்பாக  12-12-2014 அன்று நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்  தோழர்  P.காமராஜ்  மாவட்ட செயலர்  NFTE  தலைமையில்  நடைபெற்றது.  தோழர்கள்  ராஜநாயகம்  மாவட்ட செயலர் ,AIBSNLEA, சண்முகசுந்தரம்,மாவட்ட செயலர் ,SNEA, A,சுப்பிரமணியன்,மாவட்ட செயலர்,BSNLEU
மகேஷ்வரன் ,NFTE கொளஞ்சியப்பன்,BSNLEU பெர்லின் இசாக் SNATTA, ஆகியோர்  கோரிக்கைகளை  விளக்கி  உரை  ஆற்றினார்கள் .