வியாழன், அக்டோபர் 16, 2014

Resolution of AIC

அகில இந்திய மாநாடு தீர்மானம்
அக் 10-12 தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய மாநாடு MTNL/BSNL இணைப்பை கடுமையாக கீழ்கண்ட அம்சங்களில் எதிர்க்கிறது.

ü  அ) MTNL/BSNL  இணைப்புக்காக அரசு எந்த நிதி உதவியையும் செய்யாது.
ü  ஆ) பங்கு விற்பனை செய்யப்பட்ட MTNL பங்குகளை திரும்ப பங்குதாரர்களுக்கு  நிதி நிறுவன சட்டம் 2013 அடிப்படையில் வழங்கிட, நிதி வழங்குவது குறித்து எந்த வித உத்திரவாதம் இல்லை.
ü  இ) பிட்ரோட முதல் டிலாய்டி கமிட்டி வரை ஊழியர்கள் அதிகம் என கூறியுள்ளது. மேலும் MTNL 40000 ஊழியர்கள் இணைத்தால் ஏற்படும் ஊதியம் உட்பட செலவுகளுக்கான உத்திரவாதம் இல்லை
ü  ஈ)  M&A  தொலைத்தொடர்பு கொள்கைப்படி 4.4 Mhz அலைக்கற்றை பயன்பட்டிற்க்கு மார்கட் விலை அடிப்படையில் BSNL செலுத்தவேண்டும். எனவே உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம், செலுத்தாமல் விதிவிலக்கு தரவேண்டும்.
ü  உ) இணைப்பு காரணமாக ஊதிய பேச்சு வார்த்தை கடும் சூழலை சந்திக்க நேரிடும். ஓய்வூதியம் ,60% அரசு நிபந்தனை மேலும் நம்மை சிக்கலில் கொண்டுவிடும்.
ü  ஊ) MTNL  இன்று BSNL க்கு இணையாக சம ஓய்வூதியம் பெற்றுவிட்டனர். ஊதியம் கூடுதலாக பெற்று வருவதை இணையாக சம ஊதியம்  BSNL ஊழியர்களுக்கு வழங்கபடுமா? மறுக்கப்படுமா?
ü  எ) பதவி உயர்வு திட்டம்/ஆளேடுப்பு விதிகள்/விடுப்பு/மருத்துவ வசதி/மகளிர் சிறப்பு விடுப்பு ஆகியவைகளில் பல வேறுபாடுகளை களைவது குறித்த எந்த திட்டமும் இல்லை.
ü  ஏ) ஓய்வூதியம் 37-அ விதிகளின்படி தொடர்வது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

ü  போனஸ்:-  DPE விதிகளின்படி 2011,12,13 ஆண்டுகளுக்கு போனஸ் மறுக்கப்பட நியாயமில்லை. பர்பாமன்ஸ் அடிப்படையில் போனஸ் என்பது ஏற்கமுடியாது.  குறைந்தபட்சம் ரூ3,500 போனஸ்  வழங்கவேண்டும். புதிய போனஸ் திட்டம் உருவாக்க வேண்டும்.

ü  ஊதியமாற்றம்:-  DPE/GOI அடிப்ப்டையில் ஊதிய மாற்றம் 10 ஆண்டுகளுக்குள் செய்யலாம் என்பதால் ஊதிய மாற்றம் செய்ய புதிய DPE வழிக்காட்டுதல் வேண்டும். மேலும் 50% IDA வை ஊதியத்துடன் இணைக்கவேண்டும்.

ü  நவம்பர் 27 வேலை நிறுத்தம்:- 30 அம்ச கோரிக்கையை நிர்வாகம் ஏற்க ம்றுத்தால் வேலை நிறுத்தம் தவிர்க்கமுடியாது. வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.

ü  ஓய்வூதியம்:-2000 வேலை நிறுத்தம் அரசு ஓய்வூதியம் பெற உறுதி செய்ததது. விதி116 ன் கீழ் ஓய்வூதியகொடை அமையவேண்டும். 60% மட்டுமே என்ற நிதிதுறை ஜூலை 2006 உத்திரவு ரத்து செய்ய்ப்படவேண்டும்.

ü  டிலாய்ட்டி கமிட்டி:- டிலாய்ட்டி கமிட்டி பரிந்துரைகள் சங்கத்துடன் கலந்து ஆலோசிக்க பட வேண்டும். மாவட்டங்கள் சீரமைப்பு நிறுத்தப்படவேண்டும். இராண்டாவது கேடர் சீரமைப்பு துவக்கி ஊழியர்களை பயிற்சி மூலம்  வியாபார போட்டிக்கு தயார் செய்திட வேண்டும்.

ü  ஒர்க்ஸ் கமிட்டி:- அனைத்து மாவட்டங்களிலும் ஒர்க்ஸ் கமிட்டி முறையாக அமைக்கப்பட்டு கூட்டங்கள் நடத்தப்படவேண்டும். சேவை சம்பந்தமான அனைத்து விவாதிக்கப்படவேண்டும்.

ü  டவர் துணை நிறுவனம்:- டவர் துணை நிறுவனம்: அமைக்க மாநாடு எதிர்ப்பை தெரிவிக்கிறது.ஊழியர்களின் அரசு ஓய்வூதியம், பணிபாதுகாப்பு குறித்த உறுதி ஏதுமில்லை. மேலும் நமது நிறுவனத்திற்க்கு ஊறுவிளைவித்துவிடும்.

ü  வுன்சில்கள் செயல்பாடு:- கவுன்சில்கள் செயல்பாடு பற்றி விவாதித்து அதன் செயல்பாட்டடை,பிரச்சனை தீர்வை, விரைவு படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

ü  ரிவு அடிப்படை பணி:- பரிவு அடிப்படை பணி பிரச்சனையில் காணப்படும் காலதாமதம்,பதவிகள் உருவாக்கம் ,கணக்கீடு முறை, SC/ST ஊழியர்களுக்கு புள்ளிகளில் சலுகை, மற்றும் திட்டத்தை ஒழித்து கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு, ஆகியவற்றை சுட்டிகாட்டி சரி செய்திட கோருகிறது.
ü  மருத்துவபபடி, LTC மீண்டும் வழங்கப்படவேண்டும்.
ü  78.2% கிராக்கிப்படி  இணைப்பு 2007 க்கு முன் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு கேபிண்ட் ஒப்புதல் பெற விரைவான நடவடிக்கையும், 2007 க்கு பின் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாகவும், வழங்கப்படவேண்டும்.

ü  மங்கல்யான் திட்ட விஞ்ஞானிகளை மாநாடு பராட்டுகிறது.