புதன், அக்டோபர் 28, 2015

தலமட்டக்குழு கூட்டம்-27/10/2015

தலமட்டக்குழு கூட்டம்-27/10/2015
தலமட்டக்குழு கூட்டம் 27/10/2015 ல் நடைபெற்றது.
சீனியர் பொதுமேலாளர் தனது உரையில் கருத்தாய்வு கூட்ட்த்திற்க்கு பின்னர் பாசிடிவ் முன்னேற்றம் ஏற்படுள்ளது.சிம் கூடுதலாக விற்கப்பட்டுள்ளது.மேளா நடைபெற்றுள்ளது. லேண்ட் லைன் பெரிய முன்னேற்றமில்லை.வருவாய் கூடியுள்ளது.துண்டிக்கபட்ட பிராட்பேண்ட் இணைப்புகளை திரும்ப பெறுவதில் சுணக்கம் உள்ளது. மாநில அதிகாரிகளின் கூட்டத்தில் பிராட்பேண்ட் பழுதுகள் 60%-70% நீக்கம், வாடிக்கையாளர்களை தக்க வைப்பது, இணைப்புகளை3 நாட்களுக்குள் கொடுப்பது என்பது தேவை.ஊழல் கண்காணிப்பு குறித்து
எந்த நிறுவனம் மிக திறமையற்று இருக்கிறதோ அந்த நிறுவனத்தில் மிக கூடுத்லாக ஊழல் இருக்கும். நமது  நிறுவனம் மேலும் திறமைமிக்கதாக்க,வருமுன் காப்போம் என ஊழல், பழுதுகள் வருமுன் செயல்படுவோம்.
ஊழியர்தரப்பு விவாதித்து முடிவு செய்த பிரச்சனைகளைஊழியர்தரப்பு முன்வைத்தது.நமது மாவட்டம் நல்ல துவக்கத்தை சந்தித்துள்ளது என்ற செய்தி,மேலும் முன்னேற்றத்திற்க்கு உக்கமளித்துள்ளது.பழுது நீக்கம் அதே நாளில் 70% இலக்கு அடைய ஊழியர்தரப்பு பெரும் முயற்சி எடுத்து வருகிறது.முன்னேற்றம் உள்ளது. மழைகால நடவடிக்கை எடுக்க, கார்பொரேட் அலுவலகம் முதல் மாவட்டம் வரை அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் அனைத்து தொலைபேசி நிலையங்களில் உள்ள பேட்டரிகள், இன்ஜின்,/Alternator தயார் நிலையில் வைத்திருப்பது, MDF -4 type - crone tools , test cards, NGN service –க்கு ஜம்பர் முறைபடுத்துதல், கேசியர்/கௌண்டெர் உப்ச் உட்பட சேவை முன்னேற்றம் குறித்து ஆலோசனைகளை ஊழியர்தரப்பு முன்வைத்தது.கூடுதலாக புதிய இணைப்புகளை சாத்தியமான இடங்களில் பெறுவதன் மூலம் மட்டுமே வருவாய் பெருக்க முடியும்.அனைத்துபகுதிகளிலும் ஊழியர்/அதிகார்கள் கூட்டம் நடத்துவது,மேளா மாதம் தோறும் நடத்துவது.,கருத்துகேட்பு கூட்டத்திற்க்கு அவுட்டோர் அதிகாரிகளும் பங்கேற்பு, கூடுதலாக ஊழியர்தரப்பு முன்முயற்சி செய்யும் என உத்திரவாதம் என ஊழியர்தரப்பு கூறியது. தலமட்டக்குழு கூட்டம் முறையான கால அவகாசத்தில் நடத்தவேண்டும்.
1)      புதிய CSC திறப்பு,தற்பொழுது சாத்தியமில்லை,ஊழியர் பயன்பாடு/தேவை குறித்து ஊழியர்தரப்பு விரிவாக விவாதிக்கும்.
2)      சேல்ஸ்/உதான்/ BTS பகுதி விருப்பம்/தேவை அடிப்படையில் மீண்டும் விருப்பம் கோரப்படும்.
3)      மருத்துவகுடும்பம்/HR தனிநபர் குறிப்புகள் மாற்றம் செய்யபடும்.சுற்றறிக்கை வெளியிடப்படும்.
4)      அனைத்து பிரிண்டெர்  பழுதுகள் சரிசெய்யப்படும்.4 புதிய பிரிண்டெர்கள் வழங்கப்படும்.
5)      டூல்ச் விடுபட்ட பகுதிகளுக்கு வழங்கப்படும்,30 ஹேண்ட் செட் 5 வருடமாக வழங்கப்படாத ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
6)      கிளீனிங் பொருட்கள் முறையாக வழங்கப்படும்.
7)      சம்பளபட்டியலை தலமட்ட அதிகாரிகள் வழங்கவேண்டும்.
8)      பழைய AO அலுவலகம் பழுது பார்க்க ஆய்வு செய்யப்படும்.டவுன் பகுதி விரைவில் மாற்றப்படும்
9)      காலி இடங்கள், கட்டிடம் வாடகை பெருக்கம் செய்திட ஊழியர்தரப்பு ஆலொசனைகள் ஏற்பு.
10)   கம்பியூட்டர்/ஸ்கூட்டர் கடன் நிர்வாகம் வழங்க நிதி கோரப்படும்.
11)   ஊழியர்களின் ரகசிய குறிப்பு 2013-14,14-15 காட்டி ஒப்பம் பெறப்படும்.
12)   மாற்று திறனாளி போக்குவரத்து படி பட்டுவாடா செய்யப்பட்டது.
13)   மாநில முடிவுப்படி 50%ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.மீதி வழங்க மாநில நிர்வாக ஒப்புதல் பெறப்படும்.
14)   விதிகளின் படி மருத்துவ வசதி பெறும் குடும்ப உறுப்பினர்கள் சரிபார்ப்பு/நீக்கம்.
15)   கேசியருக்கு புதிய கள்ளநோட்டு அறியும் கருவி வழங்கப்பட்டுள்ளது.
16)   செல் பெயர் மாற்றம் விதிகளுக்கு உட்பட்டு செய்யப்படும்.
17)   சங்க அலுவலகம் தரை , டைல்ஸ் தரையாக மாற்றிட பரிசீலனை.
18)   அனைத்து MDF க்கு  FWP வழங்கபட்டு CUG -ன் இணைக்கப்பட்டுள்ளது.
19)   சங்க அலுவலக கணிப்பொறி, பாராமரிப்பு, ப்ரிண்டெர் குறித்து கடும் விவாதம் நடை பெற்றது நிர்வாகத்தின் பாராபட்ச அணுகுமுறை கண்டித்து ஊழியர்தரப்பு கருத்தை பதிவு செய்திட வலியுறுத்தி செய்யப்பட்ட்து.
20)   சீருடை நிதிகுறித்து விவாதிக்கப்பட்டு,பெற வலியுறுத்தப்பட்டது.
21)   ESS பயிற்சி மீண்டும் 14/11/2015 வழங்கப்படும்,ஊழியர்கள் தவறாது பயிற்சிபெறவேண்டும்.
22)   ஊழியர் தொலைபேசி எண் கையேடு நவ்=2015ல் வழங்கப்படும்.
23)   OKP-  UPS  இணைப்பு கவுண்டருக்கு வழங்கப்பட்டுள்ளது.
24)     TCM  தண்ணீர் பிரச்சனை ஒரு வாரத்திற்க்குள் தீர்க்கப்படும்.
25)   CERTH / CLUNY மருதுவ மனைகள் விரைவில் மருத்துவ வசதிபட்டியலில் இணைப்பு.


P.KAMARAJ ,  LEADER,LJCM                               A.SURAMANIYAN ,SECRETARY , LJCM