புதன், செப்டம்பர் 03, 2014

உண்ணாவிரத போர் ஒத்திவைப்பு

உண்ணாவிரத போர்  ஒத்திவைப்பு 

  • மலைப்பகுதியில் டென்யூர் முடித்த 2 TM தோழர்களுக்கு மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்றொருவருக்கு விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

  • பிரச்னை தீர்விற்கு உதவிய மாநில நிர்வாகத்திற்கும் உத்தரவு பிறப்பித்த மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி.

  • உத்தரவு வெளியானதைக் குறிப்பிட்டு மாநில நிர்வாகம் கொடுத்த வேண்டுகோளை ஏற்று நாளை நடைபெறவிருந்த மாநிலச் செயலரின் உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

பணிக்குழுப்பட்டறை




பயன்மிகு 
பணிக்குழுப்பட்டறை 

02/09/2014 அன்று ஈரோட்டில் பணிக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறை பயன்மிகு வகையில் சிறப்புடன் நடந்தேறியது. 
தோழர்.இலட்சம் தலைமையேற்றிட ஈரோட்டுத் தோழர்கள்.யாசின்,பழனிவேலு 
ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர். 
ஈரோட்டுச்சிந்தனையாளர்  தோழர்.மாலி அவர்கள் சிந்தனையைத்தூண்டும் நல் துவக்கவுரையாற்றினார். 
தோழர்.குமார் இலாக்காவின் இன்றைய 
பிரச்சினைகளை விரிவுபட எடுத்துரைத்தார். 

தனது தந்தையாரின் மறைவையொட்டி நமது CGM கலந்து கொள்ள இயலவில்லை. எனவே கூடுதல் பொறுப்பு வகிக்கும் சென்னைத்தொலைபேசி CGM தனது நம்பிக்கை தரும் 
நல்வாழ்த்துக்களை நமக்குத் தெரிவித்திருந்தார். 

ஈரோட்டுப்பொதுமேலாளர் திரு.வெங்கடசுப்பிரமணியன் 
தனது வாழ்த்துரையில் பணிக்குழுவின் முக்கியத்துவம் 
குறித்து சிறப்புடன் உரையாற்றினார். 

புதுமைச்சிந்தனையாளர் மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்கள்  
நமது தேசத்தில் மக்கள் முதலீடு மங்கி வருவதையும்,  தனியார் முதலீடு தங்கு தடையின்றி பொங்கிப்பெருகுவதையும், இதனைக்கவனத்தில் இருத்தி  தொழிற்சங்கங்கள் செயல்பட வேண்டிய 
அவசியத்தையும் அருமையாக எடுத்துரைத்தார். 

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பணிக்குழு உறுப்பினர்கள் 
தங்களது மாவட்ட அனுபவங்களை எடுத்துரைத்தனர். 

அகில இந்திய அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன், 
அகில இந்தியச்செயலர் தோழர்.ஜெயராமன், 
மூத்த வழிகாட்டிகள் தோழர்கள்.ஜெயபால்,சேது 
ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

மாநிலப்பொருளர். தோழர்.அசோகராஜன் நன்றியுரை நிகழ்த்தினார். 

உதவும் உள்ளங்கள் என்ற அமைப்பினை நடத்தி வரும் ஈரோட்டுத்தோழர்கள் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப்பரிசினை வழங்கியும்,
 மலைவாழ் மாணவர்களின் அடிப்படைத்தேவைகளுக்காக 
நிதி உதவி வழங்கியும் தங்கள் ஈர நெஞ்சினை வெளிப்படுத்தினர். 

BSNL வளர்ச்சிக்காக பணிக்குழுவை செம்மைப்படுத்திடும் 
முயற்சியைத் துவக்கி  வைத்த 
நமது தமிழ் மாநிலச்சங்கத்தை வாழ்த்துவோம். 

மிகச்சிறப்பாக பட்டறையை நடத்தி முடித்த
 ஈரோட்டுத் தோழர்களைப் பாராட்டுவோம்.