வெள்ளி, ஜூன் 15, 2012

வேலை நிறுத்த உடன்பாடு-ஒற்றுமையின் வெற்றி


வேலைநிறுத்த உடன்பாடுக்கு பின்னர் சர்ச்சை,கருத்து வேறுபாடு என்பது ஒரு சாதாரண நிகழ்வு.ஆணால் பெரும்பான்மை ஊழியர்கள் மனநிலையை தெளிவாக புரிந்து கொள்வது சரியானதாக இருக்கும்.
கடந்த 4 ஆண்டுகளாக,போராட்டம் வெறும் எதிர்ப்பு நிலை போராட்டமாக, பேச்சுவார்த்தை, முன்னேற்றம் எதுமின்றி ஊதியபிடித்தம் மட்டுமே என்பதில் ஊழியர்கள் சங்கங்களின் மீது நம்பிகை அற்று இருந்தனர்.ஓற்றுமை காரணமாக இழப்பின்றி, ஒரு உடன்பாடு மூலம் பலன் பெற்றுள்ளது சங்கங்களின் மீது நம்பிகை மீண்டும் மீட்டெடுக்ப்பட்டுள்ளது.
Consolidate gains, Repeal losses, and Fight for the improvement. என்பது தோழர் குப்தாவின் அனுபவபோராட்ட வழிகாட்டுதல். எனவே78.2% கிராக்கிபடிஇணைப்பை,காலதாமதமின்றி உத்திரவு பெறுவதில் முனைப்பை காட்டிடவேண்டும்.
01/04/2013 வரை நமது அலவன்சுகள் மற்றம் இல்லை என்பது போல ITS அதிகாரிகளின் அலவன்சுகள் மற்றம் இல்லை என்பதை விழிப்புடன் உறுதிசெய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட LTC/மருத்துப்படி உட்பட அலவன்சுகள் மற்றம் என்பதை 2013 ல் பெறுவதற்கான உறுதியான திட்டம் தயாரித்து ஒற்றுமையை பலம் படுத்தி போராட வேண்டும்.
இந்த போராட்ட உடன்பாடு வெற்றி சலுகைகள் பறிக்கப்பட்ட சூழ்நிலையில் BSNLநிறுவனத்தின் ஒவ்வோரு தோழனுக்கும், பெருமிதம் கொள்ளகூடியதாகும். பெருமிதம் கொள்ளமுடியாதவர்களை விடுத்து Fight for the improvement என்ற நோக்கத்திற்க்காக,கோரிக்கை மீது ஊழியர்களின் ஒற்றுமையை கட்டவேண்டும். ஊழியர்களின் எதிர்பார்ப்பை,நம்பிக்கை எழுச்சியை, மேம்படுத்தி அரசின்,நிர்வாகத்தின் சூழ்ச்சிகளை முறியடித்து அடுத்தகட்ட முன்னேற்றத்திற்க்கு தயாராவோம்.