சுற்றறிக்கை=3/2015 /28/10/2015
”ஆர்ப்பாட்டம்”
-பிரச்சனை தீர்வு- போராட்டம் ஒத்திவைப்பு
மாவட்ட
துனை பொது மேலாளர் தலைமையில் போராட்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. தீர்வு ஏற்பட்டு
”ஆர்ப்பாட்டம்” போரட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
சங்க
அலுவலகத்திற்க்கு புதிய கணிப்பொறி வழங்கிட மறுக்கப்பட்டது,பயன்பாடில் உள்ள கணிப்பொறி
வழங்கிட ஏற்க்கப்பட்டது.பழுது பராமரிப்பு நிர்வாக பொறுப்பு மறுக்கப்பட்டது. மாநில
சங்கம் மாநில நிர்வாகத்துடன் பிரச்சனை எடுத்து விவாத்திதது.27/10/2015 தல
மட்டக்குழு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம்
உத்திரவாதம் இல்லாத கணிப்பொறி மட்டுமே என நிலை எடுத்தது. உத்திரவாதம் இல்லாத கணிப்பொறி
ஏற்கமாட்டோம். நமது கருத்தை பதிவு செய்ய மறுத்தது. கடும் நிலைக்குபின் பதிவு
செய்யப்பட்ட்து. பிரிண்டர் தர மறுப்பது மாநிலக்குழுவிற்க்கு பரிசீலனைக்கு
அனுப்பட்டது.பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
குறித்த பேச்சுவார்த்தையில் SDE (G) பொறுப்பு என நிர்வாகம் ஏற்றுள்ளது.
செப்பல்
வழங்கிட ஆகஸ்ட் 8ல் உத்திரவு வெளியிட்டும் DE/SDE மட்டங்களில் கண்ணாமூச்சி ஆட்டம்
நடத்தியதை கடும் கண்டனம் தெரிவித்தபின்னர் நவம்பரில் அனைவருக்கும் பட்டுவாடா
செய்திட ஏற்க்கப்பட்டது. தோழர்கள் பட்டுவாடா குறித்துசெய்தியை தெரிவிக்கவேண்டும்.
மிகுதிநேரப்படி
பட்டுவாடா செய்ய வேண்டும் என நிர்வாகத்திற்க்கு கடிதம் அக்8 ல் கடிதம்
கொடுத்தோம்.பிரச்சனையை தீர்வு செய்வதற்க்கு பதிலாக தன்னிச்சையான குறுந்தகவல் மூலம் மட்டுமேC.OFF என மாவட்ட நிர்வாகம் செய்தி அனுப்பி, மிகுதிநேரப்படி உரிமையை
பறித்திட நிலை எடுத்தது. தல மட்ட அதிகாரிகள் அலட்சியம், பொய்தகவல்கள், காரணமாக மிகுதிநேரப்படி
உரிமையை பறித்திட ஏற்க்கமாட்டோம் என மாவட்ட சங்கம் நிலை எடுத்து போராட்ட அறிவிப்பு
கொடுத்து மிகுதிநேரப்படி பணி மறுப்பு செய்வோம் என எச்சரித்து ”ஆர்ப்பாட்டம்” போரட்டம் அறிவித்தோம்.நிர்வாகம் மிகுதிநேரப்படி வழங்கிட ஆவன செய்யப்படும்.
எதிர்காலத்திலும் மிகுதிநேரப்படி பட்டுவாடா தொடரும் என ஏற்றுக்கொண்டது. தொழிற்சங்கத்தை
மறுத்து, தன்னிச்சையான ஊழியர் விரோத நடவடிக்கை அனுமதியோம் என கூறி உள்ளோம்.எதிர்காலத்தில் தன்னிச்சையான
ஊழியர் விரோத போக்கு தொடராத நிலை வேண்டும் .வாழ்த்துக்களுடன்,தோழமையுள்ள,மா.செல்வரஙம்,மாவட்டசெயலர்.