புதன், ஜூன் 29, 2016

7 வது ஊதியக்குழு பரிந்துரைகள் -அமைச்சரவை ஒப்புதல்

7 வது ஊதியக்குழு பரிந்துரைகள்  
-அமைச்சரவை ஒப்புதல் 




ஊழியர் பிரச்சனை தீர்வு கோரி ”ஆர்ப்பாட்டம்”

N F T E B S N L- PUDUCHERRY—SSA
ஊழியர் பிரச்சனை தீர்வு கோரி
ஆர்ப்பாட்டம்
02/07/2016  பொதுமேலாளர் அலுவலகம் முன், மாலை 0530 மணி
ஊழியர் பிரச்சனை தீர்வு குறித்து, ஊழியர் நல்ன் குறித்து ,மாவட்ட நிர்வாகத்திடம்   நல்ல அணுகுமுறை இல்லை. ஊழியர் சங்கங்களை சந்திப்பது ,விவாதிப்பது என்பதே இல்லை,மாநில நிர்வாக அளவில் அனைத்து மட்டங்களிலும் ஊழியர் சந்திப்பு நடைபெறும் பொழுது நமது மாவட்டத்தில் அரிதான ஒன்று என மாறி விட்ட்து,

சீருடை வழஙகுவது, மீதி பேக் வழங்குவது, மிகுதி நேரப்படிபட்டுவாடா மற்றும் பில் தயார் செய்வது, கேபிள் பழுதுகள் 70% ஆன பின்னும் ஊழியர்கள்  கேபிள் பழுது நீக்கவேண்டும்.  என்று கூறி மெத்தனமாக இருப்பது தொடர்கிறது.

புதிய இணைப்பா, கேபிள் பழுதா “எப்படியாவது கொடு”” என்ற ராகம் பாடும் அதிகாரிகள், வாடிக்கையாளார்களை சந்திக்க மறுக்கும் அதிகாரிகள், கடிதம் கொடுப்பேன் என் கொக்கரிக்கும் அதிகாரிகள் என பல தினுசில்  தலமட்ட அதிகாரிக்ள் செயல்பாடு தொடர்கிறது..பக்கத்து செக்சனை பார்த்துக்கொள் என கூறும் அதிகாரிகள் , தனக்கு பக்கத்து செக்சனை சேர்த்து அளித்தால் எட்டி கூட பார்ப்பது இல்லை. ஆனால் நமக்கு உபதேசம் காதை பிளக்கும்.. அவுட்டோரில் தினமும் பணி செய்வது மிக சிரமத்திற்க்கு உள்ளாகியுள்ளது. இது பற்றி பேசினால் சங்கத்திற்க்கு உபதேசம் செய்யும் நிலை. இவை எல்லாம் மாறி நல்ல பணி செய்திட சூழல் உருவாகிட வேண்டும் என் விரும்புகிறோம்
அணுகுமுறை மாற்றம் வேண்டும் !!
மாற்றம் உருவாக்கிடுவோம்!!
நிர்வாகத்திற்க்கு உணர்த்திட திரளுவோம் !!!
அனைவரும் வருக!
29/06/2016                                    தோழமையுடன்.

தோழர் மா.செல்வரங்கம், மாவட்டசெயலர்