புதன், டிசம்பர் 18, 2013

அஞ்சலி தோழியர் K விஜயலட்சுமி

கேவி (COM .K .V ) என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட 
தோழியர் K விஜயலட்சுமி 
இன்று நம்மிடையே இல்லை .
                 

         
          தொழிற்சங்கப் போராளியான தோழியர் K V   இறுதியில் நோயிடனும் கடுமையாகப் போராடி, இன்று (18-12-2013) மாலை தனது போராட்டத்தை முடித்து கொண்டு கால வெளியில் கலந்து விட்டார் .
                  
       சிரித்த முகம், அனைவரையும் அரவணைக்கும் பாங்கு, கொள்கையில் உறுதி, விவாதங்களில் விவேகம், அலுவலக பணிகளில் நேர்த்தி என பன்முக பரிமாணம் கொண்ட அன்புத்  தோழி அவர்.
       
      தொழிற் சங்க இயக்கத்தில் பெண்களைத் திரட்டுவதில் களம் காண்பதில் தனி முத்திரை பதித்த தோழியர், GM அலுவலக கிளை சங்கத்தில் பல பொறுப்புகளையும் , மாவட்ட சங்க நிர்வாகியாகவும் , மாநில சங்க அமைப்புச் செயலராகவும் சிறப்புற பணியாற்றியவர் .

       தோழியரின் மறைவுக்கு நமது கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம் .
                                                                                                        - NFTE 

NCM 23/12/2013

JCM 
தேசியகுழுக்கூட்டம் 
விவாதப்பொருள்

அகில இந்திய JCM 23/12/2013 அன்று டெல்லியில் கூடுகின்றது. மாநிலச்செயலர் தோழர். பட்டாபி அவர்கள் பங்கேற்கின்றார். 
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன.

ஊழியர் தரப்பில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் 

  • RM, GRD பதவிகளில் STAGNATION  தேக்க நிலை தீர்த்தல் 
  • அனைவருக்கும்  போனஸ் வழங்குதல் 
  • 78.2 சத IDA இணைப்பு நிலுவை வழங்குதல்.
  • ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குதல்.
  • 78.2 சத IDA இணைப்புக்கேற்ப அனைத்துப்படிகளும் வழங்குதல்.
  • நாலுகட்டப்பதவி உயர்வை முறைப்படுத்துதல்.
  • SC/ST தோழர்களுக்கு இலாக்காத்தேர்வுக்கான தகுதி மதிப்பெண்களை தளர்த்துதல்.
  • LTC,மருத்துவப்படி மற்றும் LTCயில் விடுப்பை காசாக்கும் வசதிகளை அமுல்படுத்துதல்.
  • BSNLலில் பணி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வகுத்தல்.
  • TM பயிற்சி முடித்து பதவி இல்லாததால் காத்திருப்போருக்கு பதவி உயர்வு வழங்குதல்.

நிர்வாகத்தரப்பில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகள் 

  • மாநில,மாவட்ட மட்ட JCM குழு உருவாக்கத்தில்  உள்ள பிரச்சினைகள் தீர்த்தல்.
  • JCM  மாநில, மாவட்டக்குழு எண்ணிக்கையை முறைப்படுத்துதல்.
  • கருணை அடிப்படை வேலைக்குப்பதிலாக புதிய இழப்பீட்டு முறை உருவாக்குதல். 
  • BSNL நிறுவனத்தின் பணிக்கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்துதல்.

UNION OFFICE OPENING