செவ்வாய், ஜூன் 24, 2014

செய்திகள்

செய்திகள் 

மத்திய அமைச்சரவையின் பணி நியமனக்குழு APPOINTMENT COMMITTEE, BSNLக்கு புதிய CMDயாக  முன்மொழியப்பட்ட தற்போதைய இயக்குனர்(CM) திரு.ஸ்ரீவத்சவா அவர்களின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கவில்லை. எனவே  MTNL போலவே BSNL நிறுவனமும் 
CMD இல்லாத நிறுவனமாக ஜூன் மாதத்திற்குப்பின் 
காட்சி அளிக்கப்போகின்றது.

VIDEOCON தொலைத்தொடர்பு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 
11 சதம் முதல் 38 சதம் வரையிலான 
சம்பள உயர்வு தருவதற்கு முடிவு செய்துள்ளது.

வரக்கூடிய BUDGET  வரவு செலவு அறிக்கையில் தொலைத்தொடர்பு சேவைகள் மேம்பாட்டிற்காக கூடுதலாக 7000 கோடி நிதி உதவி அளிக்குமாறு தொலைத்தொடர்பு அமைச்சர் 
நிதியமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்னும்  5 ஆண்டுகளில் அகன்ற அலைவரிசை BROAD BAND வருமானம் ஏறத்தாழ 8 சதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் தனி இணைப்பில் கிடைக்கும் வருமானம் ARPU குறைந்து வருகின்றது.

போன் மெக்கானிக் இலாக்காத்தேர்வு

போன் மெக்கானிக் 
இலாக்காத்தேர்வு 

தமிழகத்தில் 2013ம் ஆண்டிற்கான போன்மெக்கானிக் 50 சத காலியிடங்களுக்கான  தேர்வு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • தேர்வு நடைபெறும் நாள்: 28/09/2014 
  • காலை 10 - 12.30 - இரண்டரை மணி நேரம் 
  • இரண்டு பிரிவுகள் கொண்ட ஒரு தேர்வுத்தாள் - SECTION -I & SECTION-II 
  • எளிய முறைத்தேர்வு - OBJECTIVE TYPE  
  • 100 மதிப்பெண்கள். 
  • தவறான பதிலுக்கு 25 சத மதிப்பெண் கழிக்கப்படும். NEGATIVE MARKS.
  • பொதுப்பிரிவு தோழர்கள் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 37ம் பெற வேண்டும்.
  • SC/ST தோழர்கள் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 30ம் பெற வேண்டும்.
  • கல்வித்தகுதி: 10ம் வகுப்புத்தேர்ச்சி 
  • தமிழகத்தில் மொத்தக்காலியிடங்கள்: 1413
  • பொதுப்பிரிவு: 1101 - SC-208, ST =104
  • சேலத்தில் மட்டும் காலியிடங்கள் இல்லை..
  • உடல் ஊனமுற்றோர் காலியிடங்கள்: 79
  • வயது: 01/07/2013 அன்று பொதுப்பிரிவு=40  OBC=43 SC=45 ST =45
  • தகுதியுள்ளோர்: TMAN/GRD/RM/TSM தோழர்கள்..

தோழர்களே...
                         போன்மெக்கானிக் தேர்வு நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதுதான். ஆனால் தமிழக நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த தேர்வு அறிவிப்பால் எத்தனை தோழர்கள் பயன் பெறுவார்கள் என்பது பெரும் கேள்விக்குறி. காரணம் RM/GRD பதவிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக்குறைவு. 

சேலத்தில் ஒரு சிறந்த மாநில செயற்குழு !

சேலத்தில் ஒரு சிறந்த மாநில செயற்குழு !

20.06.2014  அன்று   சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு,  தேசியக்கொடியை தோழியர். லைலா பானு அவர்களும் சங்கக்கொடியை தோழர். குன்னூர் இராமசாமி அவர்களும் ஏற்றிய பின்னர் துவங்கியது. தோழர். இலட்சம் அவர்கள் தலைமையேற்றார். தோழர். பாலகுமார்,  தோழர். சென்னக்கேசவன் வரவேற்புரையாற்றினர்.
சம்மேளன அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்கள் தோழர்கள். சேது, ஜெயபால், தமிழ்மணி ஆகியோர்  உணர்ச்சிப்பெருக்கோடு உரையாற்றினர்.
மாநிலச்செயலர் தோழர். பட்டாபி அவர்கள் நாட்டின் நிலை,  நமது சங்கம்,  நிறுவனம் ஆகியன  பற்றி ஒரு சிறந்த உறையாற்றினார். கிளை,  மாவட்ட மாநாடுகளை காலத்தே நடத்த  வேண்டிய அவசியத்தினை எடுத்துரைத்து, நடத்தாத கிளைகள் மற்றும் மாவட்டங்களை விரைவில் நடத்திட பணித்தார்.
தோழர்.ஆர்.கே.,  இன்றைய புதிய சூழலில் தொழிலாளர்கள் ஒற்றுமை காக்கவும், தங்களைச் சுற்றியுள்ள குறுகிய எல்லைகளைத் தகர்த்திடவும் அறைகூவல் விடுத்தார்.
மிக குறுகிய கால அவகாசத்தில், 300-க்கும் மேற்பட்ட தோழர்கள் வந்த போதும் சலிக்காமல் உபசரித்து,   மாநில செயற்குழுவினை வெகு சிறப்பாக நடத்திய  சேலம் தோழர்கள் மாநில சங்கம் மற்றும் அனைத்து மாவட்டங்களின் பாராட்டுக்களை பெற்றனர். 

பாராட்டுக்கள் தோழர்களே !