சனி, மே 04, 2013

செய்திகள்


மாற்றல் வசதி 

அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு  
BSNL  நிர்வாகத்தின் 19/09/2012 தேதிய  உத்திரவுப்படி 
கீழ்க்கண்ட  மட்டங்களில் 
மாற்றல் வசதி  IMMUNITY  TRANSFER அளிக்கப்படுகின்றது.


1. அகில இந்திய  மட்டம் 
    பொதுச்செயலர்  - GENERAL  SECRETARY 
    உதவிப் பொதுச்செயலர் - ASST. GENERAL  SECRETARY 
    பொருளர்  - ALL INDIA TREASURER 

2. மாநில மட்டம் 
    மாநிலச்செயலர்  - CIRCLE SECRETARY 
    மாநில உதவிச் செயலர் - ASST. CIRCLE SECRETARY 
    மாநிலப் பொருளர்  - CIRCLE TREASURER 

3. மாவட்ட மட்டம் 
    மாவட்டச்செயலர் - DISTRICT SECRETARY 
    மாவட்ட  உதவிச்செயலர்  - ASST. DISTRICT SECRETARY 
    மாவட்டப்பொருளர்  - DISTRICT TREASURER 

கிளை மட்ட பொறுப்பாளர்களுக்கு மாற்றல் வசதி இல்லை.
தற்போது நமது சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் 
நமக்கும் இது பொருந்தும்.
உண்மையில் மாற்றல் வசதி IMMUNITY FROM TRANSFER - என்பது 
இருக்கும் இடத்தை விட்டு மாற்றல் செய்யக்கூடாது   என்பதேயாகும். 
ஆனால் நாம் மாற்றல் பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்கின்றோம்.


செய்திகள்



மே 14 குடந்தையில்...
 வாக்களித்தோருக்கு,  வாகை சூட  வைத்தோருக்கு
  நன்றி தெரிவிக்கும் விழா.  
சிறப்பு சிறு விடுப்பு உண்டு.

தமிழகத்தில் JAO தேர்வில் தேறியோருக்கு OFFICIATING  செய்வதற்கு 
விருப்பம் கேட்கப்பட்டுள்ளது.

NFTE  அகில இந்தியத்தலைவர்  தோழர். இஸ்லாம் தலைமையில் டெல்லியில் கூடிய  அனைத்து
சங்க கூட்டத்தில்  BSNLன் மறு சீரமைப்புக்காக அமைக்கப்பட்டுள்ள மந்திரிகள் குழுவிடம்
 ஒரு மனதான கோரிக்கையை சமர்ப்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 78.2 சத IDA இணைப்பை விரைந்து அமுல்படுத்துதல்,  நிறுத்தப்பட்ட மருத்துவப்படி மற்றும் LTCயை மீண்டும் பெறுதல் ஆகியவற்றில் துரித நடவடிக்கை மேற்கொள்ள
முடிவு செய்யப்பட்டுள்ளது.




    காரைக்குடி வலைதளம்-நன்றி

    தோழியர் ரத்னா பணிநிறைவு


    தோழியர் ரத்னா பணிநிறைவு





    தோழியர் ரத்னா சென்னை தொலைபேசி மாவட்டத்தில் 1971 முதல் இலாக்கா பணி/தொழிற்சங்கபணி துவக்கினார்.2013-ஏப்ர30ல் பணிநிறைவு செய்துள்ளார்.நன்றி மிக்க தோழர்கள்/ தோழியர்கள் தோழியர் மாலா தலைமையில் விழா ஏற்பாடு செய்து இருந்தனர்.
    தோழியர் ATR தலைமை ஏற்க, தோழியர் மலர் வரவேற்புரை நிகழ்த்தினார். ரத்தினம் தன்மை,சுடர்,ஆகிய பண்புகளை ஒப்பிட்டு உரை நிகழ்த்தினார்.தோழர்கள் SST,AITUC,RK, JR, வள்ளிநாயகம், நடராஜன், SSK,NK,முர்த்தி,கிருஸ்ணகுமார், இந்திய தேசிய மாதர் சம்மேளனம்,வங்கி ஊழியர் சம்மேளனம்,உட்பட 200 தோழர்கள்,தோழியர்கள்,கலந்து கொண்டனர்.
    தோழர்கள் சேது,சிவசஙரன்,புதுவை காமராஜ்,முரளி,வீரராகவன், மவுலி,அன்பரசன்,வெங்கடெசன்,சம்பத்குமார்,BSNLEU நிர்வாகிகள், BSNLDEU நிர்வாகிகள், என பலரும்,பங்கேற்றனர்.
    42 வருடங்கள் தொழிற்சங்கபணி செய்து  வழிகாட்டியாக இருந்த தோழியர் ரத்னா பணி நிறைவு சிறக்க பலரும் வாழ்த்தினர்.