வெள்ளி, ஏப்ரல் 08, 2016

துரோக படலம்

துரோக  படலம் 
With a hidden agenda to stop payment of Adhoc Bonus to BSNL employees, BSNLEU has gone on agitation for 2 days demanding minimum PLI. But BSNLEU has withdrawn its agitation by gleefully reporting that "The Director (HR) assured BSNLEU that no further action will be taken on this (Bonus) matter, till the 7th Membership Verification is completed."

BSNLEU சங்கம்  தான் பங்கு பெறாத கூட்டத்தில் போனஸ் முடிவுசெய்யக்கூ டாது  என்பதற்காக  மார்ச் 30  கூட்டத்தில்  பங்கேற்கவில்லை. பிரச்சனை  திசை திருப்ப  2 இலக்க  போனஸ்  என  பொய் பிரச்சாரம் NFTE  க்கு  எதிராக  செய்யப்பட்டது.
கெட்டிகாரன் புளுகு  8 நாள்   ஆனால் இவர்கள் புளுகு  5 நாள் தாங்கவில்லை .நிர்வாகம்  பொய் பிரச்சாரம்  செய்யாதே  என கடிதம் 
கொடுத்தது.
போராட்ட அறிவிப்பு  கொடுத்து  பேச்சு வார்த்தையில் போனஸ்  தேர்தல்    முடிவு வரும்  வரை  முடிவு  ஏதும் செய்யக்கூ டாது என நிர்வாகத்திடம் ஒப்பந்தம்  கண்டுள்ளது,
குரங்கிடம்  அறிவுரை கூறிய  குருவி  கூட்டை பிய்த்து எறிந்த  குரங்கு  கதை   போல இவர்கள்   செயல் கண்டு  " ஆகா  என்ன  தொழிற் சங்கம்" 
  என ஊழியர்களை வெட்க்கப்பட  வைத்துள்ளது BSNLEU .
2000  நிறுத்த கால  கருங்காலி தானே இவர்கள் .
 வேறு  என்ன இவர்களிடம் எதிர் பார்க்க 
முடியும்?

தேர்தல் கூட்டங்கள்

தேர்தல்  கூட்டங்கள் 
 சேலம்  மாநகரில்  தேர்தல்  தயாரிப்புக்காக  விரிவடைந்த  செயற்குழு கூட்டம் 0604016 ல்  நடைபெற்றது . மாநில  சங்க நிர்வாகிகள் தோழர்  ராஜா தோழர் ,வெங்கட்ராமன்,உள்ளிட்ட தோழர்கள்  உரையாற்றினார்கள் . தோழர்  காமராஜ்  சிறப்புரையாற் ரினார்..

சென்னை  STR   பராமரிப்பு  பகுதி  தேர்தல்  கூட்டம்  0704016 ல் நடைபெற்றது  தோழர்   சென்னகேசவன் ,.தோழர்  முரளிதரன் ,தோழர்   காமராஜ் சிறப்புரையாற் ரினார்.கள் .

மடல் சொல்லும் உண்மை.. தேர்தல் நடைபெறும் நேரம்..

பொய் சொல்லும் வாய்க்கு..
போஜனம் கிடைக்காது...
போனசும் கிடைக்காது..

மடல் சொல்லும்  உண்மை..

தேர்தல் நடைபெறும் நேரம்..
ஒரு முதன்மைச்சங்கம்
தனது பொறுப்புகளை மறந்து...
பல முறை விவாதிக்கப்பட்ட ஒரு பிரச்சினையை
நிர்வாகத்தின் பரிசீலனையில் உள்ள பிரச்சினையை
கையிலெடுத்து போராட்ட அறிவிப்பு செய்திருப்பது...
முற்றிலும் முரண்பாடான செயலாகும்...

இரண்டு இலக்கத்தில் போனஸ் கொடுப்பதற்கு.,
BSNL  நிர்வாகமும் NFTE சங்கமும்
திரைமறைவில் உடன்பாடு போட்டுள்ளன
என்று கூறப்படும் குற்றச்சாட்டு
மிக மிக அபத்தமானது.. ஆதாரமற்றது...
இத்தகைய அபத்தமான குற்றச்சாட்டுக்களை
நாங்கள் தீவிரமாக கவனத்தில் கொள்கிறோம்...
மேலும் இத்தகைய..
தரம் தாழ்ந்த வார்த்தைகளைத் தவிர்த்து வாழ
தங்களுக்கு அறிவுரை செய்கிறோம்...

BSNLEU சங்கம்
போனஸ் பேச்சுவார்த்தையில்...
கலந்து கொள்ளாதபோது...
இரண்டு இலக்கத்தில் போனஸ் 
கொடுக்கப்பட முடிவாகிவிட்டது என  
எவ்வாறு கூற முடிந்தது?...

இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது...
இத்தகைய புறம்பான செய்தியை..
ஊழியர் மத்தியில் பரப்பியதின் மூலம்..
நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது...


எனவே இத்தகைய
உண்மைக்குப் புறம்பான செய்திகளை
மக்கள் மத்தியில் கொண்டு செல்லும்
தவறான செயல்களை தவிர்க்க வேண்டுமாய்
மீண்டும் நாங்கள் அறிவுறுத்துகின்றோம்...

இருந்தபோதும்...
போனஸ் விவகாரத்தில்...
இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
என்பதை நாங்கள் தெரியப்படுத்த  விரும்புகின்றோம்...

தற்போது நாம் அனைவரின் குறிக்கோள்
7வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலை
அமைதியுடன் நடத்தி  முடிக்க வேண்டும் என்பதேயாகும்...
மாறாக இன்றையத் தேவை...
போராடுவதும் பொய்களைப் புனைவதும்  அல்ல...
உங்களைத் திருத்திக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம்...

தோழர்களே...
மேலே கண்ட மடல்..
தோழர்கள்.C.சிங்கோ... இஸ்லாமோ...
அன்புத்தோழர் அபிமன்யுவிற்கு எழுதிய மடல் அல்ல...

BSNL நிர்வாகம் 06/04/2016 அன்று..
பொய் சொல்லலாகாது...
புறம் சொல்லலாகாது..
போராட்டப் புலி வேடம் கூடாது...
என்று அறிவுறுத்தி  
BSNLEU  சங்கத்திற்கு எழுதிய மடல்...

நிர்வாகம் சொன்னது
ஒரு புறம் இருக்கட்டும்...
இவர்களது நாடகத்தைக் கண்டு...
ஊழியர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்...


பொய் சொல்லும் வாய்க்கு  போஜனம் கிடைக்காது...
புறம் கூறும் சங்கத்திற்கு...அங்கீகாரம் கிடைக்காது...