வியாழன், ஜனவரி 01, 2015

மனித வள திட்டம் பரிந்துரைகள்

மனித வள திட்டம் பரிந்துரைகள்
மத்திய சங்கத்திற்க்கு தோழர் பட்டாபி முன்வைத்தகருத்துகள். மேலும் மாவட்டத்தோழர்கள் தங்கள் கருத்து ஏதுமிருந்தால் மத்திய சங்கத்திற்க்கு தெரிவிக்கலாம்..
அகில இந்திய அளவில் மனித வள திட்டம் பரிந்துரைகள் உள்ளன.மாநில, மாவட்ட அளவில் திட்டபரிந்துரைகள் வேண்டும்.பின்னர்தான் நாம் முழுமையாக பரிசீலித்து ஊழியர்களை மாற்றுபணிக்கு திட்டமிடமுடியும். திட்ட,சாதக,பாதகங்களை அறியமுடியும்.
 நிறுவனத்தின் இன்றைய உற்பத்தி, சந்தை தேவைக்காக மாற்றம் செய்வதை யாரும் மறுக்க முடியாது.
வாடிக்கையாளர் சேவைமையம், சேல்ஸ்,மார்க்கட்டிங், பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சரிசெய்திடவேண்டும்.
கூடுதல்/பற்றாக்குறை என ஊழியர்களை இடமாற்றம் நிர்வாக உரிமை - யாகிவிடக்கூடாது. ஊழியர்,நிர்வாகம் இணைந்து முடிவு செய்திட வேண்டும்.
மாற்றலுக்கு ஈடு அல்லது ஒரு வருட மாற்றல் இருக்கவேண்டும்.
சீரமைப்பு என்றாலே ஊழியர் குறைப்பு மட்டுமே.எனவே பணிபாதுகாப்பு உரிமை தொடரவேண்டும். JTO ஆளெடுப்பு விதிகளைகூட மாற்ற மறுக்கும்  நிலை ,அரசு இயக்குனர்களின் பிடிவாத தன்மையை வெளிப்படுத்துகிறது.
கூடுதல் ஊழியர்களை நியமிக்க ஊழியர்தரப்புகோரிவருகிறது.விருப்ப ஓய்வுதிட்டம் ஏற்கமுடியாது. விருப்ப ஓய்வுதிட்டம் பங்குவிற்பனைக்கு முன்னோடியாக இருக்கும்.2000 போராட்ட ஒப்பந்தம் அதன் அம்சங்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
டிலாய்ட்டி பரிந்துரைகளை ஊழியர்தரப்பு எதிர்க்கிறது.ஏரியா திட்டம் நமது சேவை,வாடிக்கையாளர்  திருப்தி, ஆகியவற்றுக்கு துணையாக இருக்காது. மாவட்ட அமைப்பு வாடிக்கையாளர்,ஊழியர்கள், என அனைவரயும் பிணைப்புடன் வைத்துள்ளது. பூகோள ரீதியில் சேவைக்கு அருகே
அமையபெற்றுள்ளது.
தலை கனத்து,கால் சிறுத்துஎன்பது போல அதிகாரிகள், ஊழியர்கள் எண்ணிக்கை1,98,223 லிருந்து 94,138 ஆக குறைக்கும்திட்டம். BCG  திட்டம்1,86,500 என்பதைவிட மிக மிக குறைவு.
TTA கேடர்களை சரியானை இடத்தில் பொருத்தவில்லை.19691 TTA க்களை BCG24,000 ஆக உயர்த்திட பரிந்துரைத்தது.30,000 ஆக உயர்த்துவது சரியானது.11,000 ஊழியர்கள் வெளியிலிருந்தும், போட்டிதேர்வு விதிதளர்வு மூலம் TM களை உயர்த்திட வேண்டும்.
Sr.TOA-ERP - அமுலாக்கத்திற்க்கு பிறகு 9000 பேர் மட்டுமேதேவை.30,000 பேர் பயிற்சி மூலம் ,6 மாத்த்திற்க்கு ஒருமுறை பணிஓய்வு உட்பட காலியான பதவிகளில்.நிரப்பப்படவேண்டும். Sr.TOA என்றால் Sr.TOA (G) மட்டுமா அல்லது அனைத்து Sr.TOA உண்டா என்பதை விளக்கம்வேண்டும்.
TM/RM 88000 TM /30000 RM என 1,18,000 ஊழியர்களை பரிந்துரைத்தது.
இன்று மொத்தம் 117025 ஊழியர்கள் ஊள்ளனர்.ஆனால் இவர்கள் 72000 TM ஆக குறைப்பது 45000 ஊழியர்களை உபரியாகிவிடும்
30000,மற்ற கேடர்கள் 1500 மட்டுமே பரிந்துரைக்கப்படுள்ளது.அவைஎதுஎன கேடர் வாரியாக விளக்கம்வேண்டும்.
சில விளக்கஙகள் கோரி...
75000 ஊழியர்கள் உபரி என்றால் பின் விளைவுகள் என்ன? உபரியாக வைத்திருக்கவேண்டிய அவசியம், ஊதிய செலவினம் குறித்த திட்டம் என்ன?
அரசிமிருந்து ஊழியர்கள் உபரிக்கு நிதிஉதவி பெறப்படுமா?
இதுவரை உருவக்கப்பட்ட பதவிகள் கேடர் வாரியாக எவ்வளவு? எவ்வாறு பராமரிக்கப்படுகிறது.
ஊழியர்கள் உபரியானல் வெறுமாற்றுபணி உண்டா?
JTO/SDE இணைப்பில் JTO நிலை உயர்த்தபடுமா?
பங்குவிற்பனை திட்டம் ஏதுஉண்டா? அதற்க்காக ஊழியர் எண்ணிக்கை குறைத்து காட்ட படுமா?