திங்கள், ஜூன் 27, 2016

மத்திய அரசு ஊழியர்கள் 33 லட்சம் வேலை நிறுத்தம் ஜூலை 11/2016


மத்திய அரசு  ஊழியர்கள் 33 லட்சம் 
வேலை நிறுத்தம்  ஜூலை 11/2016

ஊதிய கமிஷன்  பரிந்துரைகளில் 1968 க்கு பின் மிகமோசமான ஊதிய  நிர்ணயம் ,ரயில்வே  பணிகளை  தனியாருக்கு தாரை வார்க்கும் 
நடைமுறைகள் , என பல்வேறு  பாதக பரிந்துரைகளை  நிராகரித்து ,மாற்றம் கோரி 
போராட உள்ள மத்திய அரசு  ஊழியர்களை 
ஆதரித்து  ஜூலை 6 ம் தேதி ஆர்ப்பாட்டம் 
நடத்திட  மாநிலசங்கம்  கோரி உள்ளது.
ஆர்ப்பாட்டம்  சக்தி மிக்கதாக  நடத்துவோம் . 

வேலூர் மாநில மாநாடு ஜூலை 21,22./2016

  வேலூர்  5  வது மாநில  மாநாடு  ஜூலை  21,22./2016
மது   சங்கத்தின் ஆகப் பெரும்  மாவட்டம்,
7 உறுப்பினர் தேர்தலில்  தொடர் 
வெற்றி  பெற்ற மாவட்டம்,
இணைய தள செய்திகளில் நம்பகத்தனமை,,முன்னோடி,
அ இ  சங்கத்திற்கு துணை நிற்கும்
 நம்பிக்கை  துணை,
மாநில சங்கத்தின் நெருக்கடியான  தருணங்களில்
உறுதிப்பாட்டை காட்டி
,சங்க செயல்பாட்டிற்கு ஊறு செய்யும்
கொள்கைகளை,  தோலுரித்து 
 மாநில சங்கம்  காத்த  மாவட்டசங்கம் ,
 மாநாட்டு சிறக்க , மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
உரிமை கோரும்  நாம் நமது பங்கினை  செலுத்துவோம்.
நிதி கொடுப்போம், மாநாடு சிறக்க செயலாற்றுவோம் . 






புதன், ஜூன் 22, 2016

தோழர் அழகிரி பணிஓய்வு

              தோழர்  அழகிரி  பணிஓய்வு பாராட்டுவிழா 

TTA பதவிகளுக்கு வெளியார் ஆளெடுப்பு

TTA பதவிகளுக்கு  வெளியார் ஆளெடுப்பு 
 நமது நிறுவனத்தில்  TTA பதவிகளுக்கு  வெளியார் ஆளெடுப்பு 2700 பதவிகளுக்கு  கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க  கடைசி  நாள்  10/08/2016
தேர்வு நாள்   25/09/2016
தமிழ்நாடு  காலியிடங்கள்  198 சென்னை 80

திங்கள், மே 30, 2016

pattabi 60




பணி  ஓய்வு  தோழர்  பட்டாபி  31-05-2016
சோதனையான  தருணத்தில் மாநில  செயலராக பொறுப்பு  ஏற்று,  நிதானம் ,சங்கம் மட்டுமே முன்னுரிமை,தோழர்களை  பொறுப்பு வழங்கி உயர்த்துதல்  ,அரவணைத்து  செல்லுதல்,சங்க ஒற்றுமை,தொழிலாளர்கள்  ஒற்றுமை ,மத்திய  சங்கத்திற்கு உறுதுணை செயல்பாடு, தனிநபர் விமர்சனம்  தவிர்ப்பு,,சகிப்புத்தன்மை , தோழமை ,எல்லையற்ற உபசரிப்பு, கரிசனம்  என..... கூறி  சென்றாலும் அது பட்டாபி  என்ற ஓய்வறியா  செயல் மறவனுக்கு  வார்த்தைகள்  ஈடாகாது .

ஞாயிறு, மே 29, 2016

NEWS

NFTE , TEPU மற்றும் SEWA சங்கங்கள் இணைந்து 
NATIONAL FORUM OF BSNL WORKERS 
NFBW என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தோழர்.சுப்புராமன்  TEPU  - தலைவராகவும் 
தோழர்.C.சிங் NFTE  - ஒருங்கிணைப்பாளராகவும் 
தோழர்.PN.பெருமாள்  - SEWA  துணை ஒருங்கிணைப்பாளராகவும் 
NFBW  அமைப்பின் பொறுப்பாளர்களாக  செயல்படுவார்கள்.


நமது NFTE  சங்கத்தின் 
தேசிய செயற்குழுக்கூட்டம்  கூடி முடிவெடுக்கும்வரை 
JAC மற்றும் ஏனைய FORUMகளில் 
NFTE  பங்கேற்பதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

NFBW  செயல்பாடு சிறக்க நமது வாழ்த்துக்கள்.

----------------------
தலைமைப்பண்பில்...
தலைசிறந்த...
தமிழ் மாநிலச்சங்கத்தின்..

தமிழ் மாநில மாநாடு

ஜூலை 21 & 22  - வேலூர்

கொடி உயர்த்திடுவோம்...
கோட்டையில் கூடிடுவோம்

நமது NFTE சங்கத்தின் 
மத்திய செயற்குழு ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 
டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும்
 மாநிலச்செயலர்கள்  மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.