வியாழன், மார்ச் 10, 2016

மார்ச் - 10 அகில இந்திய எதிர்ப்பு தினம்

மார்ச்  - 10
-: கோரிக்கைகள்  :-
மத்திய அரசே...

  • விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து...
  • வேலைவாய்ப்பை உருவாக்கு...
  • தொழிலாளர் சட்டங்களை அமுல்படுத்து...
  • தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்து...
  • குறைந்த பட்சக்கூலி மாதம் 15000 வழங்கு...
  • குறைந்த பட்ச ஓய்வூதியம்  மாதம் 3000 வழங்கு...
  • பொதுத்துறை பங்கு விற்பனையை நிறுத்து...
  • குத்தகைத் தொழிலாளர் முறையை ரத்து செய்...
  • போனஸ் உச்சவரம்பை நீக்கு...
  • பணிக்கொடையை உயர்த்து...
  • தொழிற்சங்கப் பதிவை 45 நாட்களுக்குள்  அமுல்படுத்து...
  • புதிய தொழிலாளர் விரோத சட்டங்களைக் கைவிடு...
  • இரயில்வே, ஆயுள் காப்பீடு மற்றும் இராணுவத்துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காதே...


தோழர்களே...
செப்டம்பர் வேலை நிறுத்தம் 
செவிடன் காதில் ஊதிய சங்கு...
கேளாக்காதினரின்... செவிப்பறை அதிர... 
தொடர்ந்து  முழங்குவோம்...
இணைந்து போராடுவோம்... வாரீர்...

அகில இந்திய எதிர்ப்பு தினம் 

புதன், பிப்ரவரி 24, 2016

ஊதிய இழப்பு

ஊதிய இழப்பு 

01/01/2007க்குப்பின் BSNLலில் பணி நிரந்தரம் பெற்ற 

TTA தோழர்களுக்கு அவர்களது ஊதிய இழப்பைச்

 சரிக்கட்ட ஒரு கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை

 நமது சங்கத்தின் முயற்சியால் வழங்கப்பட்டது.
 
ஆனால் மற்ற பகுதி ஊழியர்களுக்கு இது 

மறுக்கப்பட்டது. மற்றவர்களுக்கும் ஆண்டு 

உயர்வுத்தொகை வழங்கக்கோரி   

நிர்வாகத்தை நமது சங்கம் வலியுறுத்தி வந்தது. 

தற்போது BSNL நிர்வாகக்குழு  01/01/2007 முதல்

 07/05/2010 வரை பணி நியமனம் பெற்ற

மற்ற பகுதி ஊழியர்களுக்கும் ஒரு ஆண்டு

உயர்வுத்தொகை வழங்குவதற்கு பரிந்துரை

 செய்துள்ளது. 

BSNL வாரியத்தின் ஒப்புதலுக்குப்பின் இது 

அமுல்படுத்தப்படும். 

01/01/2007க்குப்பின் TTA தவிர  மற்ற பதவிகளில்
 
பணி நியமனம் இல்லாததால் 

கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற 

தோழர்கள் இச்சலுகையை அனுபவிப்பார்கள்.

செவ்வாய், பிப்ரவரி 23, 2016

தேர்தல் பிரச்சார துவக்க விழா

 தேர்தல்   பிரச்சார  துவக்க விழா  
 25/02/2016-கோவை 


PROGRAMMES

AITUC  41வது அகில இந்திய மாநாடு 
கோவையில் 25/02/2016 முதல் 28/02/2016 வரை 
நடைபெறுகின்றது.

NFTE விரிவடைந்த மத்திய செயற்குழு 
மார்ச் 1 மற்றும் 2 தேதிகளில்
 பாட்னாவில் நடைபெறுகின்றது.

மத்திய தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் 
அகில இந்திய எதிர்ப்பு நாள் 
மார்ச் 10 அன்று நடைபெறுகின்றது.

34வது  JCM  தேசியக்குழுக்கூட்டம் 
மார்ச் 10 அன்று நடைபெறுகின்றது.

தமிழகத்தேர்தல் பிரச்சாரத்துவக்க விழா 
சேலத்தில் மார்ச் 15 அன்று நடைபெறுகின்றது.

காரைக்குடியில் தேர்தல் பிரச்சாரத்துவக்க விழா 
மார்ச் 22 அன்று நடைபெறுகின்றது. 
அகில இந்தியத்தலைவர் 
தோழர்.இஸ்லாம் சிறப்புரையாற்றுகிறார்.

திங்கள், பிப்ரவரி 22, 2016

TEPU அகில இந்திய சங்கத்தின் மாநாடு

 TEPU  அகில இந்திய சங்கத்தின்  மாநாடு  21,22/02/2016 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.
 அ இ செயலர் தோழர் சந்தேஸ்வர் சிங் , ஆர்.கே ர
R.பட்டாபி,  மதிவாணன், SSG,காமராஜ்,ஜெயராமன் ,சுப்பராயன்,குமார், ஆகியோர்  பொது அரங்கில்  கலந்து கொண்டனர். தோழர்  ஆர்கே, தோழர்சி சிங்  வாழ்த்துரை  வழங்கினர்.

கீழ்க்கண்ட  தோழர் கள்  நிர்வாகிகளாக  தேர்ந்தடுக்கப்பட்டனர்.

தோழர். பாணி  கிரஹி  தலைவராகவும்,

தோழர்:​- செல்லப்பாண்டியன்  ,செயல்  தலைவராகவும்,
தோழர்:- சுப்புராமன்  செயலராகவும்,
தோழர்:​  விஜயகுமர்ர்  இணை  செயலராகவும்,
தோழர் கண்ணதாசன் , கரு ர்  ,பொருலராகவும் , தேர்ந்தடுக்கபட்டனர்,
அனைவருக்கும் வாழ்த்துக்கள் .