செவ்வாய், ஜூன் 24, 2014

போன் மெக்கானிக் இலாக்காத்தேர்வு

போன் மெக்கானிக் 
இலாக்காத்தேர்வு 

தமிழகத்தில் 2013ம் ஆண்டிற்கான போன்மெக்கானிக் 50 சத காலியிடங்களுக்கான  தேர்வு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • தேர்வு நடைபெறும் நாள்: 28/09/2014 
  • காலை 10 - 12.30 - இரண்டரை மணி நேரம் 
  • இரண்டு பிரிவுகள் கொண்ட ஒரு தேர்வுத்தாள் - SECTION -I & SECTION-II 
  • எளிய முறைத்தேர்வு - OBJECTIVE TYPE  
  • 100 மதிப்பெண்கள். 
  • தவறான பதிலுக்கு 25 சத மதிப்பெண் கழிக்கப்படும். NEGATIVE MARKS.
  • பொதுப்பிரிவு தோழர்கள் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 37ம் பெற வேண்டும்.
  • SC/ST தோழர்கள் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 30ம் பெற வேண்டும்.
  • கல்வித்தகுதி: 10ம் வகுப்புத்தேர்ச்சி 
  • தமிழகத்தில் மொத்தக்காலியிடங்கள்: 1413
  • பொதுப்பிரிவு: 1101 - SC-208, ST =104
  • சேலத்தில் மட்டும் காலியிடங்கள் இல்லை..
  • உடல் ஊனமுற்றோர் காலியிடங்கள்: 79
  • வயது: 01/07/2013 அன்று பொதுப்பிரிவு=40  OBC=43 SC=45 ST =45
  • தகுதியுள்ளோர்: TMAN/GRD/RM/TSM தோழர்கள்..

தோழர்களே...
                         போன்மெக்கானிக் தேர்வு நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதுதான். ஆனால் தமிழக நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த தேர்வு அறிவிப்பால் எத்தனை தோழர்கள் பயன் பெறுவார்கள் என்பது பெரும் கேள்விக்குறி. காரணம் RM/GRD பதவிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக்குறைவு. 

சேலத்தில் ஒரு சிறந்த மாநில செயற்குழு !

சேலத்தில் ஒரு சிறந்த மாநில செயற்குழு !

20.06.2014  அன்று   சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு,  தேசியக்கொடியை தோழியர். லைலா பானு அவர்களும் சங்கக்கொடியை தோழர். குன்னூர் இராமசாமி அவர்களும் ஏற்றிய பின்னர் துவங்கியது. தோழர். இலட்சம் அவர்கள் தலைமையேற்றார். தோழர். பாலகுமார்,  தோழர். சென்னக்கேசவன் வரவேற்புரையாற்றினர்.
சம்மேளன அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்கள் தோழர்கள். சேது, ஜெயபால், தமிழ்மணி ஆகியோர்  உணர்ச்சிப்பெருக்கோடு உரையாற்றினர்.
மாநிலச்செயலர் தோழர். பட்டாபி அவர்கள் நாட்டின் நிலை,  நமது சங்கம்,  நிறுவனம் ஆகியன  பற்றி ஒரு சிறந்த உறையாற்றினார். கிளை,  மாவட்ட மாநாடுகளை காலத்தே நடத்த  வேண்டிய அவசியத்தினை எடுத்துரைத்து, நடத்தாத கிளைகள் மற்றும் மாவட்டங்களை விரைவில் நடத்திட பணித்தார்.
தோழர்.ஆர்.கே.,  இன்றைய புதிய சூழலில் தொழிலாளர்கள் ஒற்றுமை காக்கவும், தங்களைச் சுற்றியுள்ள குறுகிய எல்லைகளைத் தகர்த்திடவும் அறைகூவல் விடுத்தார்.
மிக குறுகிய கால அவகாசத்தில், 300-க்கும் மேற்பட்ட தோழர்கள் வந்த போதும் சலிக்காமல் உபசரித்து,   மாநில செயற்குழுவினை வெகு சிறப்பாக நடத்திய  சேலம் தோழர்கள் மாநில சங்கம் மற்றும் அனைத்து மாவட்டங்களின் பாராட்டுக்களை பெற்றனர். 

பாராட்டுக்கள் தோழர்களே !

வெள்ளி, ஜூன் 13, 2014

சொசைட்டி செய்திகள்



12/06/2014 அன்று  நடைபெற்ற  முதல் இயக்குனர்  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் 

வட்டி விகிதம் 1% குறைத்து 14.5% ஆக  உள்ளது.01/07/2014 முதல்  அமுலாகும் .

தேர்தலுக்கு  முன்னர் 1%  குறைக்கப்பட்டது.

ஊழியர்களுக்கு ரூ 417 ம் மாதம்(5 லடசம்) குறைக்கப்படும்.

கல்வி கடன் ரூ 10,000 வழங்கப்படும்.

கட்டடம்  கட்டிட்ட நடவடிக்கை  துவக்கப்படும்.

தமிழ் மாநில செயற்குழு - சேலம்

தோழர்.விச்சாரே

ஜூன் 12
தோழர்.விச்சாரே 
நினைவு தினம் 
NFTEன்  அகத்தியன் 
உருவத்தில் அகத்தியன்..
உள்ளத்தில்  உயர்ந்தவன்.. 
தோழர்கள்..
எண்ணத்தில் நிறைந்தவன்..

செயலில் அயரா தேனீ ...
சொல்லில் தனி பாணி...
எளிய தேர்வு மூலம் 
எத்தனையோ எளியோர்களை...
இளநிலை கணக்கு அதிகாரியாக்கிய 
எழுத்தர் இனத்தின் தலைவன்...

வீழ்ந்தது.. NFTE.. என்னும் எக்காளம் மாற்றி 
எழுந்தது...NFTE ..என இரும்பூதெய்த வைத்த..
வீழாத்தலைவன்.. 
விச்சாரே.. நினைவு போற்றுவோம்...

இரங்கல்

இரங்கல் 

NFTE அகில இந்தியத்தலைவர் 
தோழர்.இஸ்லாம் அகமது 
அவர்களின் துணைவியார் 

திருமதி.ரஷிதா பேகம்
அவர்கள் உடல்நலக்குறைவால் 
இன்று 12/06/2014 இயற்கை எய்தினார் 
என்ற செய்தி கேட்டு துயர் கொள்கின்றோம்.

நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.
சமீபத்தில்தான் தோழர்.இஸ்லாம் அவர்களின் புதல்வி
 உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். 

அடுத்தடுத்த சோகங்களை சந்தித்த 
தோழர்.இஸ்லாம் அவர்களின் துயரத்தில் 
நாமும் பங்கு பெறுவோம்.

புதன், ஜூன் 04, 2014

செய்திகள்

செய்திகள் 

DOT காலத்தில் பதவி உயர்வு பெற்று BSNL உருவான  01/10/2000க்குப்பின் தங்களது ஆண்டு உயர்வுத்தொகை தேதிக்கு பதவி உயர்வு பெற விருப்பம் தெரிவித்தவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டு வந்தது. 
கடந்த அகில இந்திய JCMல் இது விவாதிக்கப்பட்டு  நிர்வாகத்தால் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதனால் உண்டாகும் நிலுவைப்பிடித்தத்தையும் நிறுத்தி வைக்க நிர்வாகம் இசைந்தது. ஆனால் JCM MINUTES கூட்டக்குறிப்பில் இது பற்றிக்குறிப்பிடப்படவில்லை. 
எனவே இது பற்றித்தலையிட மத்திய சங்கத்தை
 தமிழ் மாநில சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது

JTO/TTA  தோழர்கள் தொடுத்த வழக்கில் சென்னை CAT  வழங்கிய தீர்ப்பை எதிர்த்து BSNL நிர்வாகம் மேல் முறையீடு செய்ய வேண்டும் 
என BSNLEU சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

2014 முதல் காலாண்டில் இந்தியா 28 மில்லியனுக்கும் அதிகமான செல்போன் இணைப்புக்களைக் கொடுத்து சாதனை புரிந்துள்ளது. உலகில் வேறெங்கும் 3 மாதங்களில் இவ்வளவு இணைப்புக்கள் கொடுக்கப்பட்டதில்லை. இதே காலத்தில் சீனாவில் 19 மில்லியன் இணைப்புக்களே கொடுக்கப்பட்டுள்ளன.

 BSNL வாடிக்கையாளர்கள் INTERNET  வலைப்பின்னல் வசதி இல்லாமலே தங்களது செல்போனில் முகநூல் என்னும் facebookஐ பயன்படுத்தும் வசதி தேசத்தின் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும். இதற்காக BSNL U2opia நிறுவனத்துடன் 
ஒப்பந்தம் செய்துள்ளது. 

ஏப்ரல்  2014ல் பணி நிறைவு பெற வேண்டிய தற்போதைய BSNL CMD திரு.உபாத்யாய் அவர்களின் பதவிக்காலம் 
ஜூன் 2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Monday, 2 June 2014

BRPSE 
பொதுத்துறை விசாரிப்பு வாரியம் 

நலிவடைந்து வரும் பொதுத்துறைகளைக் கண்காணிக்கும்
BRPSE என்னும் பொதுத்துறை மறுசீரமைப்பு வாரியம் 

BSNLன் நட்டத்திற்கான காரணங்கள் 
BSNLன் செயல்பாடுகளை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் 
BSNLன் தற்போதைய நிதி நிலை, அமைப்பு நிலை மற்றும் செயல்பாடு 
BSNLன் வருங்காலம் பற்றிய பார்வை 
BSNLன் சீரமைப்பு சம்பந்தமாக  BRPSE செய்ய வேண்டிய உதவிகள் 
ஆகியவை பற்றி  DOTயிடம் விசாரித்துள்ளது.

BSNLன் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை குறித்து 21/12/2010லும் 29/11/2012லும் இருமுறை BSNL நிர்வாகத்தை அழைத்து BRPSE விசாரித்தது. தற்போது மூன்றாவது விசாரிப்பாகும். 

இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை BSNLஐ விசாரிக்க மட்டுமே செய்யும்  பொதுத்துறை மறுசீரமைப்பு வாரியம் தனது பெயரை பொதுத்துறை விசாரிப்பு வாரியம் என மாற்றிக்கொள்வது சாலச்சிறந்தது.

Sunday, 1 June 2014

செய்திகள் 

நமது வழக்கமான மிக முக்கிய 9 கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தக்கோரி புதிய அமைச்சரிடம் அனைத்து சங்கங்களின் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஏப்ரல் 1 நம் எல்லோருக்குமே ஏமாற்றமாக இருந்தது. காரணம் எப்போது ஏறும் விலைவாசிப்படி இம்முறை குறைந்ததுதான். தற்போது விலைவாசிப்புள்ளிகள் கூடியுள்ளதால் 01/07/2014 முதல் கிடைக்க வேண்டிய IDA குறைந்த பட்சம் 2 சதத்திற்கு மேல் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

JTO/JAO தேர்வு எழுதுவதற்கான சேவைக்காலத்தை ஏற்கனவே ஒத்துக்கொண்டபடி 5 ஆண்டுகளாக மாற்றி உத்திரவு வழங்கக்கோரி நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

பதவிப்பெயர் மாற்றக்குழு  DESIGNATION COMMITTEE ஜூன் இறுதியில் கூடி பதவிகளுக்கான பெயரை இறுதி செய்யலாம்.

BSNL ஊழியர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.200/- அளவில் பேசுவதற்கான இலவச SIM வழங்குவதற்கான உத்திரவு விரைவில் வெளியிடப்படலாம்.

மத்திய அரசைப்போலவே ஓய்வு பெற்ற தோழர்களுக்கு புற நோயாளி சிகிச்சைக்காக பணமாக கொடுப்பது பற்றி BSNL நிர்வாகம் ஆலோசித்து வருகின்றது.