செய்திகள்
DOT காலத்தில் பதவி உயர்வு பெற்று BSNL உருவான 01/10/2000க்குப்பின் தங்களது ஆண்டு உயர்வுத்தொகை தேதிக்கு பதவி உயர்வு பெற விருப்பம் தெரிவித்தவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டு வந்தது.
கடந்த அகில இந்திய JCMல் இது விவாதிக்கப்பட்டு நிர்வாகத்தால் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதனால் உண்டாகும் நிலுவைப்பிடித்தத்தையும் நிறுத்தி வைக்க நிர்வாகம் இசைந்தது. ஆனால் JCM MINUTES கூட்டக்குறிப்பில் இது பற்றிக்குறிப்பிடப்படவில்லை.
எனவே இது பற்றித்தலையிட மத்திய சங்கத்தை
தமிழ் மாநில சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
JTO/TTA தோழர்கள் தொடுத்த வழக்கில் சென்னை CAT வழங்கிய தீர்ப்பை எதிர்த்து BSNL நிர்வாகம் மேல் முறையீடு செய்ய வேண்டும்
என BSNLEU சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
2014 முதல் காலாண்டில் இந்தியா 28 மில்லியனுக்கும் அதிகமான செல்போன் இணைப்புக்களைக் கொடுத்து சாதனை புரிந்துள்ளது. உலகில் வேறெங்கும் 3 மாதங்களில் இவ்வளவு இணைப்புக்கள் கொடுக்கப்பட்டதில்லை. இதே காலத்தில் சீனாவில் 19 மில்லியன் இணைப்புக்களே கொடுக்கப்பட்டுள்ளன.
BSNL வாடிக்கையாளர்கள் INTERNET வலைப்பின்னல் வசதி இல்லாமலே தங்களது செல்போனில் முகநூல் என்னும் facebookஐ பயன்படுத்தும் வசதி தேசத்தின் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும். இதற்காக BSNL U2opia நிறுவனத்துடன்
ஒப்பந்தம் செய்துள்ளது.
ஏப்ரல் 2014ல் பணி நிறைவு பெற வேண்டிய தற்போதைய BSNL CMD திரு.உபாத்யாய் அவர்களின் பதவிக்காலம்
ஜூன் 2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Monday, 2 June 2014
BRPSE
பொதுத்துறை விசாரிப்பு வாரியம்
நலிவடைந்து வரும் பொதுத்துறைகளைக் கண்காணிக்கும்
BRPSE என்னும் பொதுத்துறை மறுசீரமைப்பு வாரியம்
BSNLன் செயல்பாடுகளை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
BSNLன் தற்போதைய நிதி நிலை, அமைப்பு நிலை மற்றும் செயல்பாடு
BSNLன் வருங்காலம் பற்றிய பார்வை
BSNLன் சீரமைப்பு சம்பந்தமாக BRPSE செய்ய வேண்டிய உதவிகள்
ஆகியவை பற்றி DOTயிடம் விசாரித்துள்ளது.
BSNLன் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை குறித்து 21/12/2010லும் 29/11/2012லும் இருமுறை BSNL நிர்வாகத்தை அழைத்து BRPSE விசாரித்தது. தற்போது மூன்றாவது விசாரிப்பாகும்.
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை BSNLஐ விசாரிக்க மட்டுமே செய்யும் பொதுத்துறை மறுசீரமைப்பு வாரியம் தனது பெயரை பொதுத்துறை விசாரிப்பு வாரியம் என மாற்றிக்கொள்வது சாலச்சிறந்தது.
Sunday, 1 June 2014
செய்திகள்
நமது வழக்கமான மிக முக்கிய 9 கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தக்கோரி புதிய அமைச்சரிடம் அனைத்து சங்கங்களின் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஏப்ரல் 1 நம் எல்லோருக்குமே ஏமாற்றமாக இருந்தது. காரணம் எப்போது ஏறும் விலைவாசிப்படி இம்முறை குறைந்ததுதான். தற்போது விலைவாசிப்புள்ளிகள் கூடியுள்ளதால் 01/07/2014 முதல் கிடைக்க வேண்டிய IDA குறைந்த பட்சம் 2 சதத்திற்கு மேல் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
JTO/JAO தேர்வு எழுதுவதற்கான சேவைக்காலத்தை ஏற்கனவே ஒத்துக்கொண்டபடி 5 ஆண்டுகளாக மாற்றி உத்திரவு வழங்கக்கோரி நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
பதவிப்பெயர் மாற்றக்குழு DESIGNATION COMMITTEE ஜூன் இறுதியில் கூடி பதவிகளுக்கான பெயரை இறுதி செய்யலாம்.
BSNL ஊழியர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.200/- அளவில் பேசுவதற்கான இலவச SIM வழங்குவதற்கான உத்திரவு விரைவில் வெளியிடப்படலாம்.
மத்திய அரசைப்போலவே ஓய்வு பெற்ற தோழர்களுக்கு புற நோயாளி சிகிச்சைக்காக பணமாக கொடுப்பது பற்றி BSNL நிர்வாகம் ஆலோசித்து வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக