வெள்ளி, ஜூன் 13, 2014

தோழர்.விச்சாரே

ஜூன் 12
தோழர்.விச்சாரே 
நினைவு தினம் 
NFTEன்  அகத்தியன் 
உருவத்தில் அகத்தியன்..
உள்ளத்தில்  உயர்ந்தவன்.. 
தோழர்கள்..
எண்ணத்தில் நிறைந்தவன்..

செயலில் அயரா தேனீ ...
சொல்லில் தனி பாணி...
எளிய தேர்வு மூலம் 
எத்தனையோ எளியோர்களை...
இளநிலை கணக்கு அதிகாரியாக்கிய 
எழுத்தர் இனத்தின் தலைவன்...

வீழ்ந்தது.. NFTE.. என்னும் எக்காளம் மாற்றி 
எழுந்தது...NFTE ..என இரும்பூதெய்த வைத்த..
வீழாத்தலைவன்.. 
விச்சாரே.. நினைவு போற்றுவோம்...

இரங்கல்

இரங்கல் 

NFTE அகில இந்தியத்தலைவர் 
தோழர்.இஸ்லாம் அகமது 
அவர்களின் துணைவியார் 

திருமதி.ரஷிதா பேகம்
அவர்கள் உடல்நலக்குறைவால் 
இன்று 12/06/2014 இயற்கை எய்தினார் 
என்ற செய்தி கேட்டு துயர் கொள்கின்றோம்.

நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.
சமீபத்தில்தான் தோழர்.இஸ்லாம் அவர்களின் புதல்வி
 உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். 

அடுத்தடுத்த சோகங்களை சந்தித்த 
தோழர்.இஸ்லாம் அவர்களின் துயரத்தில் 
நாமும் பங்கு பெறுவோம்.

புதன், ஜூன் 04, 2014

செய்திகள்

செய்திகள் 

DOT காலத்தில் பதவி உயர்வு பெற்று BSNL உருவான  01/10/2000க்குப்பின் தங்களது ஆண்டு உயர்வுத்தொகை தேதிக்கு பதவி உயர்வு பெற விருப்பம் தெரிவித்தவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டு வந்தது. 
கடந்த அகில இந்திய JCMல் இது விவாதிக்கப்பட்டு  நிர்வாகத்தால் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதனால் உண்டாகும் நிலுவைப்பிடித்தத்தையும் நிறுத்தி வைக்க நிர்வாகம் இசைந்தது. ஆனால் JCM MINUTES கூட்டக்குறிப்பில் இது பற்றிக்குறிப்பிடப்படவில்லை. 
எனவே இது பற்றித்தலையிட மத்திய சங்கத்தை
 தமிழ் மாநில சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது

JTO/TTA  தோழர்கள் தொடுத்த வழக்கில் சென்னை CAT  வழங்கிய தீர்ப்பை எதிர்த்து BSNL நிர்வாகம் மேல் முறையீடு செய்ய வேண்டும் 
என BSNLEU சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

2014 முதல் காலாண்டில் இந்தியா 28 மில்லியனுக்கும் அதிகமான செல்போன் இணைப்புக்களைக் கொடுத்து சாதனை புரிந்துள்ளது. உலகில் வேறெங்கும் 3 மாதங்களில் இவ்வளவு இணைப்புக்கள் கொடுக்கப்பட்டதில்லை. இதே காலத்தில் சீனாவில் 19 மில்லியன் இணைப்புக்களே கொடுக்கப்பட்டுள்ளன.

 BSNL வாடிக்கையாளர்கள் INTERNET  வலைப்பின்னல் வசதி இல்லாமலே தங்களது செல்போனில் முகநூல் என்னும் facebookஐ பயன்படுத்தும் வசதி தேசத்தின் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும். இதற்காக BSNL U2opia நிறுவனத்துடன் 
ஒப்பந்தம் செய்துள்ளது. 

ஏப்ரல்  2014ல் பணி நிறைவு பெற வேண்டிய தற்போதைய BSNL CMD திரு.உபாத்யாய் அவர்களின் பதவிக்காலம் 
ஜூன் 2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Monday, 2 June 2014

BRPSE 
பொதுத்துறை விசாரிப்பு வாரியம் 

நலிவடைந்து வரும் பொதுத்துறைகளைக் கண்காணிக்கும்
BRPSE என்னும் பொதுத்துறை மறுசீரமைப்பு வாரியம் 

BSNLன் நட்டத்திற்கான காரணங்கள் 
BSNLன் செயல்பாடுகளை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் 
BSNLன் தற்போதைய நிதி நிலை, அமைப்பு நிலை மற்றும் செயல்பாடு 
BSNLன் வருங்காலம் பற்றிய பார்வை 
BSNLன் சீரமைப்பு சம்பந்தமாக  BRPSE செய்ய வேண்டிய உதவிகள் 
ஆகியவை பற்றி  DOTயிடம் விசாரித்துள்ளது.

BSNLன் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை குறித்து 21/12/2010லும் 29/11/2012லும் இருமுறை BSNL நிர்வாகத்தை அழைத்து BRPSE விசாரித்தது. தற்போது மூன்றாவது விசாரிப்பாகும். 

இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை BSNLஐ விசாரிக்க மட்டுமே செய்யும்  பொதுத்துறை மறுசீரமைப்பு வாரியம் தனது பெயரை பொதுத்துறை விசாரிப்பு வாரியம் என மாற்றிக்கொள்வது சாலச்சிறந்தது.

Sunday, 1 June 2014

செய்திகள் 

நமது வழக்கமான மிக முக்கிய 9 கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தக்கோரி புதிய அமைச்சரிடம் அனைத்து சங்கங்களின் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஏப்ரல் 1 நம் எல்லோருக்குமே ஏமாற்றமாக இருந்தது. காரணம் எப்போது ஏறும் விலைவாசிப்படி இம்முறை குறைந்ததுதான். தற்போது விலைவாசிப்புள்ளிகள் கூடியுள்ளதால் 01/07/2014 முதல் கிடைக்க வேண்டிய IDA குறைந்த பட்சம் 2 சதத்திற்கு மேல் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

JTO/JAO தேர்வு எழுதுவதற்கான சேவைக்காலத்தை ஏற்கனவே ஒத்துக்கொண்டபடி 5 ஆண்டுகளாக மாற்றி உத்திரவு வழங்கக்கோரி நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

பதவிப்பெயர் மாற்றக்குழு  DESIGNATION COMMITTEE ஜூன் இறுதியில் கூடி பதவிகளுக்கான பெயரை இறுதி செய்யலாம்.

BSNL ஊழியர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.200/- அளவில் பேசுவதற்கான இலவச SIM வழங்குவதற்கான உத்திரவு விரைவில் வெளியிடப்படலாம்.

மத்திய அரசைப்போலவே ஓய்வு பெற்ற தோழர்களுக்கு புற நோயாளி சிகிச்சைக்காக பணமாக கொடுப்பது பற்றி BSNL நிர்வாகம் ஆலோசித்து வருகின்றது. 

ஞாயிறு, ஜூன் 01, 2014

சேலம் - மாவட்டச்செயற்குழு

சேலம் - மாவட்டச்செயற்குழு 
சேலம்  
மாவட்டச்செயற்குழு 


நாள்: 05-06-2014 - வியாழக்கிழமை 
நேரம்: காலை  10 மணி முதல்  
இடம்: கார்காத்த வேளாளர் சமூக மண்டபம் - சேலம்

தலைமை: தோழர். S.சின்னசாமி, மாவட்டத் தலைவர் 

-:விவாதப்பொருள்:-

  • அமைப்பு நிலை 
  • RGB தேர்தல் - ஒரு பார்வை 
  • மாநில செயற்குழு - சேலம் 
  • ஜபல்பூர் - அகில இந்திய மாநாடு 
  • கவுன்சில் - ஒர்க்ஸ் கமிட்டிக்கான பிரச்சனைகள் 
  • ஊழியர் பிரச்சனைகள் - தீர்வு 
  • புதிய உறுப்பினர் சேர்க்கை 
  • ஒலிக்கதிர் பொன்விழா - நன்கொடை விபரம்
  • பணி நிறைவு பாராட்டு விழா 
  • கிளை மாநாடு மற்றும் மாவட்ட மாநாடு 
  • ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் 
  • இன்னபிற தலைவர் அனுமதியுடன்  

- பங்கேற்பு தோழர்கள் -

வாழ்த்துரை: 
  
தோழர்.  M.சுப்பிரமணியன்  
தொழிற்சங்க தலைவர் - சேலம்

  தோழர்.  P.ராஜா   
மாநில துணைத் தலைவர் - சேலம்

தோழர்.  K.மணி  
மாவட்ட செயலர் - தருமபுரி 

தோழர்.  A.சண்முக சுந்தரம்   
மாநில உதவி செயலர்  - TMTCLU - சேலம்

கருத்துரை:  
  
தோழர்.  H.நூருல்லா  
மாநிலத் தலைவர் - சேலம்

  தோழர்.  P.சென்னகேசவன்   
மாநில உதவி செயலர் - வேலூர் 

தோழர்.  P.காமராஜ் 
மாவட்ட செயலர் - புதுச்சேரி 

  சிறப்புரை:  
  
தோழர்.  R.பட்டாபிராமன்   
மாநில செயலர்  - சென்னை 

  கிளைச்செயலர்கள் 
மாவட்டச்சங்க நிர்வாகிகள் 
JCM உறுப்பினர்கள் 
பணிக்குழு உறுப்பினர்கள் 
சேமநலநிதி உறுப்பினர்கள்
மற்றும் முன்னணி தோழர், தோழியர்கள்   
தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

தோழமையுடன்... 

NFTE  மாவட்டச்சங்கம் 
சேலம்.

சனி, மே 31, 2014

தோழர் செல்வம்பணி ஓய்வு பாராட்டு விழா



கடலூரில்  NFTE மாவட்ட தலைவர்/TMTCLU மாநில செயலர் தோழர் செல்வம் மற்றும் தோழியர் ரேவதி ஆகியோரின் பணி ஓய்வு பாராட்டு விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. விழாவிற்கு தோழர்கள் சிரில் அறக்கட்டளை பொறுப்பாளர் சீனிவாசன் மற்றும் துரை தலைமை வகித்தனர்.தோழர் ஸ்ரீதர் மாவட்டசெயலர் முன்னிலை வகித்தார்.  தோழர்  ரவிச்சந்திரன்வரவேற்ப்புரைநிகழ்த்தினார்.தோழர்கள் தமிழ்மணி,கடலூர் ரகு,சம்மேளன செயலர் ஜெயராமன்,மாநில அமைப்பு செயலர் அன்பழகன்,DGM (F),DGM (CFA ),DGM (CM ),BSNLEU தலைவர்கள்,மதுரை சேது,TMTCLU மாநில பொருளர் குடந்தை விஜய்
பாண்டி காமராஜ்,மாநிலதுணைசெயலர் கோவை ராபட்ஸ்,மாநிலசெயலர்தோழர்பட்டாபி,
அன்புத்தலைவர்R.Kஆகியோர்கள்கலந்து
கொண்டனர்.நமது மாவட்டத்திலிருந்து தோழர்கள் ஆரூர்சிவா, கூடூர் குணா,TMTCLU மாவட்ட தலைவர் தோழர் நாடி, TMTCLU தஞ்சை பகுதி தோழர் பொம்மையன்,தோழர் நடராஜன் ஆகியோர்கள்கலந்துகொண்டனர்.கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட தோழர்களும் 
தோழியர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர் ,,,







சனி, மே 24, 2014

அகில இந்திய மாநாடு

அகில இந்திய  மாநாடு

அகில இந்திய  மாநாடு வரும்  அக்டோபர் 10 முதல் 

13 வரை  ஜபல்பூரில்  நடைபெற  உள்ளது .