புதன், செப்டம்பர் 11, 2013

BSNL/MTNL சீரமைப்புக்குழு

BSNL/MTNL  சீரமைப்புக்குழு 

நிதியமைச்சர் திரு.ப. சிதம்பரம் தலைமையிலான BSNL/MTNL சீரமைப்புக்குழு 12/09/2013 அன்று கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இம்முறை 
BSNLலில் ஒருலட்சம் பேருக்கும் 
MTNLலில் 20ஆயிரம் பேருக்கும் விருப்ப ஒய்வு அளிப்பது 

MTNL ஓய்வூதிய சுமைக்காக 5925 கோடி நிதியுதவி பெறுவது 

2010ல் 4G சேவைக்காக தண்டமாக கட்டிய 
ஏறத்தாழ 23000 கோடி  BWA பணத்தை திரும்ப பெறுவது..

8900 கோடி நட்டத்தை சந்தித்துள்ள BSNL,
5000 கோடி நட்டத்தை சந்தித்துள்ள MTNL 
ஆகிய அரசு நிறுவனங்களை நட்டத்தில் இருந்து மீட்பது...

போன்ற மிக முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒவ்வொரு முறையும் பல எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்றது. 
ஆயினும் உருப்படியான காரியங்கள் எதுவும் நடந்தபாடில்லை. 

மந்திரிகள் கூட்டம் நடக்கின்றது என்ற செய்தியை கேட்டு கேட்டு  
கவிஞர். மீராவின் 
கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் 
கவிதை வரிகளே நினைவுக்கு வருகின்றன.

ஆனாலும் காத்திருப்போம்..
பெட்ரோல் டீசல் வெங்காயம் விலை இறங்கும்..
BSNL/MTNL நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன்..

நன்றி  காரைக்குடி 

ஞாயிறு, செப்டம்பர் 08, 2013

மாவட்ட செயற்குழு

மாவட்ட செயற்குழு
நாள்:-11/09/2013 புதன் காலை10 மணி-சங்க அலுவலகம்
தலைமை:தோழர்:அ.மகேஸ்வரன்,மாவட்டத்தலைவர்,
ஆய்படு பொருள்
வைப்பு நிதி-குறித்து முடிவு
பிரச்சனைகள்
இதரதலைவர் அனுமதியுடன்
1200 மணி-தோழர்.கோபி-பணிஓய்வு பாராட்டுவிழா

நமது மத்திய,மாநிலசங்க வேண்டுகோளின்
 அடிப்படையில்78.2% தீர்வுபெற்றதற்க்காக 

ரூ200/ பெற்று அனுப்பிட கோரி உள்ளது.
அனைவரும் வழங்கிட வேண்டுகிறோம்
அனைவரும் வருக!
தோழமையடன்,

ப.காமராஜ், மாவட்டசெயலர்

திங்கள், செப்டம்பர் 02, 2013

TTA POSTINGS

நமது  தோழர்கள்  A.D.சுப்பிரமணியன்,-IMPCS ,S.பசுபதி -பாஹுர் ,விஜயராகவன் -STR-அருண்  -திருக்கனூர்  பகுதிக்கு TTA ஆக  நியமிக்கப்பட்டுள்ளனர் .வாழ்த்துகிறோம்


சனி, ஆகஸ்ட் 31, 2013

பணி ஒய் வு

புதுவை தோழர் K. கோபி,TM, அவர்கள் பணி ஒய் வு 31/08/2013 முதல் பெற்றுள்ளார் அவரை  வாழ்த்தி வழியனுப்புவோம் 

புதன், ஆகஸ்ட் 28, 2013

ஆகஸ்ட் 28,1963மார்ட்டின் லூதர் கிங் போராட்ட அறை கூவல்

காந்திய  வழியில்  கருப்பர்களுக்கான  உரிமையை  பெற  போராடிய  மார்ட்டின் லூதர் கிங்  போராட்ட அறை கூவல்  50 வது ஆண்டு  நினைவு  நாள்
ஆகஸ்ட் 28,1963