தமிழ் மாநிலச்சங்க அலுவலகத்திறப்புவிழா 15/07/2013 அன்று சிறப்பு அழைப்பாளர் தோழர். ஜெயபால் அவர்களின் தலைமையிலே எளிமையாக இனிமையாக நடைபெற்றது.முதன்மைப்பொதுமேலாளர் முதல் உதவிப்பொதுமேலாளர் வரை அனைத்து அதிகாரிகளும்அதிகாரிகள் சங்கங்கள் தொட்டு ஊழியர் சங்கங்கள் வரை அனைத்து சங்கத்தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.சங்க அலுவலகம் NFTEஐ வலுவாக்கிட BSNLஐ வளமாக்கிட தனது பங்கை செலுத்திட வாழ்த்துகின்றோம் .பணி ஓய்வு இதில் பிரச்சனையாக இல்லை என்பதில் நல்ல அம்சம் .
செவ்வாய், ஜூலை 16, 2013
வியாழன், ஜூலை 04, 2013
திங்கள், ஜூலை 01, 2013
தூத்துக்குடி கிளை மாநாடுகள்
தூத்துக்குடி கிளை மாநாடுகள்
தூத்துக்குடி மாவட்டம் பொதுமேலாளர் அலுவலகம் , தொலைபேசி நிலயைம் ஆகிய கிளைகளின் மாநாடு 30/06/2013 அன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் பொதுமேலாளர் அலுவலகம் , தொலைபேசி நிலயைம் ஆகிய கிளைகளின் மாநாடு 30/06/2013 அன்று நடைபெற்றது.
பொதுமேலாளர் அலுவலக கிளை யில் ஒருமனதாகாவும்,தொலைபேசி நிலயை கிளையில் போட்டியும் இருந்தது .மாவட்டசெயலர் கிளையில் தொடர்ந்து மாநிலசெயலரை வசை பாடிய கலா செல்வனை கிளை தோழர்கள் நிராகரித்து (19 வாக்குகள்) மரியதாஸ் அவர்களை (33 வாக்குகள் )அளித்து வெற்றி பெற செய்துள்ளனர் இரு கிளை களும் மாநிலசங்கத்தை
குறை கூறும் அணியை நிராகரித்து ள்ளனர்.
இது தொடரும் .....
சனி, ஜூன் 29, 2013
பணி ஓய்வு
பணி ஓய்வு –வாழ்த்துகிறோம்
நமது
உறுப்பினர்கள் தோழர்.நா.முனுசாமி,SSS
தோழர்.R.கணேசன்,R.M. தோழியர்.மீனாம்பாள்,R.M. உட்பட 9 ஊழியர்கள் பணி ஓய்வு பெறஉள்ளனர்–அனைவரையும்வாழ்த்துகிறோம்
புதன், ஜூன் 26, 2013
சிலர் எண்ணங்கள் ,சிலர் வசவுகள்
சிலர் எண்ணங்கள் ,சிலர் வசவுகள்
மாநில செயற்குழு கூட்டத் திற்க்கு முன் 24 ம் தேதியே சன்னிதானம் சென்று முறைப்படி பெறவேண்டிய கட்டளைகள் பெறப்பட்டு அதன் வழியே மாநில செயற்குழு கூட்டம் துவங்கிய முதலே tuned அலைவரிசை ஒலிக்க துவங்கியது .மாநில செயற்குழு கூட்டம் நடைபெறாமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டது .இந்த முயற்சி செயற்குழு உறுப்பினர்கள் உறுதியினால் தடுக்கப்பட்டது.எந்த பிரச்சனையையும் பேசலாம் என அழைக்கபட்டபின்னரும் மறுத்து
பின்னர் பேசி அலைவரிசை உத்திரவு அடிப்படையில் வெளிநடப்பு நடைபெற்றது.
தோழர்களை ,மீண்டும் மீண்டும் பலமுறை வேண்டியும் மேல் ஒப்புதல் கிடைக்காத நிலையில் வெளியேறினர் . பலமுறை வேண்டியும் உணவு
அருந்த மறுத்து அவர்களது நிகழ்ச்சி நிரலை ஒளிபரப்பினர் .
கடலூர் தோழர் ஸ்ரீதர் மீது வசவுரை மட்டுமே வாழ்த்துரையாக மாநில செயற்குழு கூட்டத் திற்க்கு கிடைத்தது பாக்கியமே ?
ஒருதலை விசுவாசம் காரணமாக அடுத்தவருக்கு மட்டுமே உபதேசம் என்பது விசுவாச விமர்சனம் . அவர் மன்னித்தாலும் ,மன்னிக்காமல் விட்டாலும் நாம் அவரது விசுவாச விமர்சனத்தை ஏற்ப்பதில்லை -
ஆமேன் !
தமிழ் மாநிலச்சங்கசெயற்குழு
தமிழ் மாநிலச்சங்கத்தின் செயற்குழு வேலூரில் 25.06.2013 காலை 10.30 மணிக்கு மாநிலத்தலைவர் தோழர்.நூருல்லா தலைமையில் துவங்கியது. கொடியேற்றம் முடிந்து ஆய்படுபொருள் ஏற்புக்கு வைக்கப்பட்ட பின், ஏற்கப்பட்ட
ஆய்படு பொருளினைப்பற்றி மாநிலச்செயலர் சுருக்கமாக விளக்கி விவாதத்தினை துவக்கிவைத்தார். உடனடியாக சில தோழர்கள் எழுந்து ஓய்வு பெற்றவர்கள் தொழிற்சங்க பதவிகளில் இருக்கக்கூடாது என்று கூறி,
சிறப்பு பிரதிநிதிகளாக மதுரை மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட தோழர்கள் சேது, ஜெயபால் ஆகியோரை உடனடியாக பதவி நீக்கம் செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைப்பற்றி அமைப்பு நிலையில் விவாதிக்கலாம் என்று தலைவரும் மாநிலச்செயலரும் கூறிய பின்னரும் இது தொடர்ந்தது. அதன் பின்னர் தோழர் செல்வசுப்ரமணியம் பேசினார். திரும்பவும் சிறப்பு பிரதிநிதிகள் பிரச்னையை எழுப்பி பணி ஓய்வுபெற்ற இருவரை அப்போதே பதவி நீக்கம் செய்ய வேண்டி 13 தோழர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களை உள்ளே வருமாறு அழைக்கச்சென்ற குழுவிடம் மேலும் சிலரை சிறப்பு
பிரதிநிதிகளாக சேர்த்தால் தாங்கள் உள்ளே வருவதாக ஒரு சிலர்
கூறினர். திடீரென வந்த ஒரு தொலைபேசி அழைப்புக்குப் பின் அந்த 13 தோழர்களும் மண்டபத்தை விட்டு 1.30க்கு சென்றுவிட்டனர்.
அதன் பின், தடையின்றி ஆய்படு பொருளினை ஒட்டிய விவாதம் தொடர்ந்தது. நடந்து முடிந்த ஆறாவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல், ஜூன் 12 வேலை நிறுத்தம், 78.2 சத
கிராக்கிப்படி இணைப்பு, 2007 - க்குப்பின் பணியில் சேர்ந்த ஊழியருக்கு அதன் பலனை கிடைக்கச்செய்வது, கிராக்கிப்படி இணைப்பினால் எழுந்துள்ள ஊதியத்தில் தேக்கம், 78.2-ஐ ஒய்வூதியர்களுக்கும்
விஸ்தரித்து உத்தரவு, மாநிலக்கவுன்சில், மாவட்டக்கவுன்சில் நியமனங்கள், JTO தேர்வில் பாட வரையறைக்கு வெளியிலிருந்து கேள்விகள், சேலம், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களின் TTA தேர்வு முடிவுகள், BSNL / MTNL மீதான அமைச்சர்கள்
குழு, போனஸ், மகளிர் பிரச்ச்னைகள், அலவன்சுகள், அமைப்பு விதிகளுக்கு முரணாக மாநிலத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், வலைதள அவதூறு, மாநிலச்செயலர் கிளையின் ex-officio
delegate என்பதை மறந்து அவருக்கு அறிவிப்போ தகவலோ இன்றி கிளை மாநாடுகளை நடத்தும் போக்கு ஆகியன பற்றி நீண்ட விவாதங்களுக்குப்
பின் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
மாலையில், மேல்மட்டச்செய்திகளையும், ஜூன் 12 வேலைநிறுத்த
அறிவிப்பு, அதன் மீதான தீர்வு, கிராக்கிப்படி இணைப்பு ஆகியன பற்றி விரிவாகப்பேசுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சம்மேளனச்செயலர் தோழர் ஜெயராமன் கடலூர் மாவட்ட பிரச்னைகளை மட்டுமே பேசினார். கடலூர் மாவட்ட மாநாட்டை ஒட்டி எழுந்துள்ள பிரச்னைகளை ஆய்வு செய்ய மாநிலச்சங்கம் ஒரு ஆய்வுக்குழு அமைக்க வேண்டும் என்று கூறி அவர் உரையினை முடித்துக்கொண்டார்.இரவு 9.15 வரை மாநில செயற்குழு நடைபெற்று வெற்றிகரமாக முடிந்தது. பயனுள்ள, ஆக்கபூர்வமான ஒரு செயற்குழுவினை நடத்த வேலூர் மாவட்டசங்கத்திற்கு வாய்ப்பளித்த மாநிலச்சங்கத்திற்கு நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
வெள்ளி, ஜூன் 21, 2013
மாநிலசெயற்குழு—25/06/2013
மாநிலசெயற்குழுகூட்டம்
25/06/2013
வேலூர்,ஆற்காடு ரோடு, KGN
மண்டபத்தில்
நடைபெறும்.அனைவரும் வருக!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
