தமிழ் மாநிலச்சங்கத்தின் செயற்குழு வேலூரில் 25.06.2013 காலை 10.30 மணிக்கு மாநிலத்தலைவர் தோழர்.நூருல்லா தலைமையில் துவங்கியது. கொடியேற்றம் முடிந்து ஆய்படுபொருள் ஏற்புக்கு வைக்கப்பட்ட பின், ஏற்கப்பட்ட
ஆய்படு பொருளினைப்பற்றி மாநிலச்செயலர் சுருக்கமாக விளக்கி விவாதத்தினை துவக்கிவைத்தார். உடனடியாக சில தோழர்கள் எழுந்து ஓய்வு பெற்றவர்கள் தொழிற்சங்க பதவிகளில் இருக்கக்கூடாது என்று கூறி,
சிறப்பு பிரதிநிதிகளாக மதுரை மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட தோழர்கள் சேது, ஜெயபால் ஆகியோரை உடனடியாக பதவி நீக்கம் செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைப்பற்றி அமைப்பு நிலையில் விவாதிக்கலாம் என்று தலைவரும் மாநிலச்செயலரும் கூறிய பின்னரும் இது தொடர்ந்தது. அதன் பின்னர் தோழர் செல்வசுப்ரமணியம் பேசினார். திரும்பவும் சிறப்பு பிரதிநிதிகள் பிரச்னையை எழுப்பி பணி ஓய்வுபெற்ற இருவரை அப்போதே பதவி நீக்கம் செய்ய வேண்டி 13 தோழர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களை உள்ளே வருமாறு அழைக்கச்சென்ற குழுவிடம் மேலும் சிலரை சிறப்பு
பிரதிநிதிகளாக சேர்த்தால் தாங்கள் உள்ளே வருவதாக ஒரு சிலர்
கூறினர். திடீரென வந்த ஒரு தொலைபேசி அழைப்புக்குப் பின் அந்த 13 தோழர்களும் மண்டபத்தை விட்டு 1.30க்கு சென்றுவிட்டனர்.
அதன் பின், தடையின்றி ஆய்படு பொருளினை ஒட்டிய விவாதம் தொடர்ந்தது. நடந்து முடிந்த ஆறாவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல், ஜூன் 12 வேலை நிறுத்தம், 78.2 சத
கிராக்கிப்படி இணைப்பு, 2007 - க்குப்பின் பணியில் சேர்ந்த ஊழியருக்கு அதன் பலனை கிடைக்கச்செய்வது, கிராக்கிப்படி இணைப்பினால் எழுந்துள்ள ஊதியத்தில் தேக்கம், 78.2-ஐ ஒய்வூதியர்களுக்கும்
விஸ்தரித்து உத்தரவு, மாநிலக்கவுன்சில், மாவட்டக்கவுன்சில் நியமனங்கள், JTO தேர்வில் பாட வரையறைக்கு வெளியிலிருந்து கேள்விகள், சேலம், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களின் TTA தேர்வு முடிவுகள், BSNL / MTNL மீதான அமைச்சர்கள்
குழு, போனஸ், மகளிர் பிரச்ச்னைகள், அலவன்சுகள், அமைப்பு விதிகளுக்கு முரணாக மாநிலத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், வலைதள அவதூறு, மாநிலச்செயலர் கிளையின் ex-officio
delegate என்பதை மறந்து அவருக்கு அறிவிப்போ தகவலோ இன்றி கிளை மாநாடுகளை நடத்தும் போக்கு ஆகியன பற்றி நீண்ட விவாதங்களுக்குப்
பின் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
மாலையில், மேல்மட்டச்செய்திகளையும், ஜூன் 12 வேலைநிறுத்த
அறிவிப்பு, அதன் மீதான தீர்வு, கிராக்கிப்படி இணைப்பு ஆகியன பற்றி விரிவாகப்பேசுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சம்மேளனச்செயலர் தோழர் ஜெயராமன் கடலூர் மாவட்ட பிரச்னைகளை மட்டுமே பேசினார். கடலூர் மாவட்ட மாநாட்டை ஒட்டி எழுந்துள்ள பிரச்னைகளை ஆய்வு செய்ய மாநிலச்சங்கம் ஒரு ஆய்வுக்குழு அமைக்க வேண்டும் என்று கூறி அவர் உரையினை முடித்துக்கொண்டார்.இரவு 9.15 வரை மாநில செயற்குழு நடைபெற்று வெற்றிகரமாக முடிந்தது. பயனுள்ள, ஆக்கபூர்வமான ஒரு செயற்குழுவினை நடத்த வேலூர் மாவட்டசங்கத்திற்கு வாய்ப்பளித்த மாநிலச்சங்கத்திற்கு நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக