சனி, அக்டோபர் 21, 2017

vijayawada NEC


தேசீய செயற்குழு – விஜயவாடா 12,13-10-2017

ஆந்திரா, தெலங்கானா பிரிந்தபின் ஆந்திர மாநில தலைநகரான “விஜயவாடா” வெற்றி நகரத்தில் மத்திய சங்கத்தின் தேசீய செயற்குழு கூட்டம் 2017 அக்டோபர் 12, 13 தேதிகளில் நடைபெற்றது. தேசீயக் கொடியை தோழர் இஸ்லாம், சம்மேளனக் கொடியை தோழர் சந்தேஷ்வர்சிங் உயர்த்திட செயற்குழு துவங்கியது., ஆந்திர மாநிலச் செயலர் தோழர் சந்திரசேகர்ராவ், தோழர் சந்தேஷ்வர்சிங் வரவேற்புரை நிகழ்த்தினர். அகில இந்திய தலைவர்கள், மாநிலச் செயலர்கள் கௌரவிக்கப்பட்டனர். தோழமை கூட்டணி சங்க தலைவர்கள் தோழர் சுப்புராமன் (TEPU),  தோழர் என்.டி,ராம் (SEWA BSNL) வாழ்த்துரை வழங்கினர். தமிழ் மாநிலத்தில் இருந்து தோழர்கள் பட்டாபி, கோபாலகிருஷ்ணன், மாநிலச் செயலர் நடராஜன்,  STR மாநிலச் செயலர் ஆர்.அன்பழகன் உரையாற்றினார்கள். 600க்கும் மேற்பட்ட தோழர்களின் அரங்கு நிறைந்த பங்கேற்பு, சுவையான உணவு, தங்குமிடம், வசதியான ஏற்பாடுகள் என மிகச் சிறப்பான முன்னோடியான தேசீய செயற்குழுவாக அமைந்தது.
பல்வேறு தீர்மானங்கள்,நிறைவேற்றப்பட்டன. மார்ச் மாதத்தில் பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரத்தில் நமது அகில இந்திய மாநாடு சிறப்புற நடத்திட முடிவு செய்யப்பட்டது. அமைப்பு விதிகளின்படி 50 பேருக்கு ஒரு சார்பாளர் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டச்செயலர்கள் மாநாடு பங்கேற்புக்காக திட்டமிட வேண்டும். மாநிலச் சங்கம் உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் சார்பாளர்கள் எண்ணிக்கையை அறிவிக்கும். மாவட்ட செயலர்கள் அதற்கு ஏற்றவாறு திட்டமிடவேண்டும்.
நவம்பர் 9, 10, 11 டெல்லி தர்ணாவில் பெருமளவிலான ஊழியர்களை கலந்து கொள்ளும் வண்ணம் திட்டமிட வேண்டும்.
தமிழ் மாநில சங்கம் சார்பாக தோழர்கள் ஸ்ரீதர், இளங்கோவன், கடலூர், அழகிரி, குடந்தை விஜய் ஆரோக்கியராஜ், STR பகுதி தோழர்கள் சுந்தர்பாபு, மோகன்குமார், என்.கே.,CTTC  முரளி,  சீனிவாசன்,  சக்திவேல்,தோழியர்.ஆஷாராணி.. உள்ளிட்ட 13 தோழர்கள் பங்கேற்றனர்.வெற்றி தரும் விஜயவாடா தேசீய செயற்குழு ஊதிய மாற்ற இருதரப்பு பேச்சுவார்த்தை துவக்கிட,,ஊதிய மாற்றம் பெற்றிட ஒன்றுபட்ட போராட்டத்திற்கு வழிகாட்டியாக திகழும்.

தேசீய செயற்குழுவில் தலைவர்கள் உரை

தோழர் சுப்புராமன், பொதுச் செயலர், TEPU
தோழர் குப்தாவிடமிருந்து ஒற்றுமை பாடத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் சிறந்த குணம் என்பது மறக்க முடியாது ஒன்று. ஒற்றுமைக்கு எதிராக நாம் ஒருபோதும் செயல்பட்டதில்லை. 27.10.2017 வேலை நிறுத்தத்தை ஒத்திவைத்து ஒன்றுபட்டு நடத்தலாம் என்ற நமது கூட்டணி ஆலோசனை நிராகரிக்கப்பட்டது. இன்று அதே ஆலோசனை அனைத்து சங்க கூட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது. நமது கூட்டணி சங்கத்தின் தனித்துவம் இழந்துவிடக் கூடாது. தோழர்கள் சந்தேஷ்வர் சிங், இஸ்லாம், என்.டி.ராம் உள்ளிட்ட தலைவர்களும் ஒன்றுபட்டு செயல்பட்டு வருகிறோம். அனைவருக்கும் கட்சி அடையாளம் உண்டு. ஆனால் எங்கள் கட்சித் தலைவர் கலைஞர் ஆட்சியில் நான் இருந்தாலும் கோரிக்கைகளுக்காக,, உழைக்கும் வர்க்கத்திற்காக போராட தயங்கக்கூடாது என்ற ஆலோசனையை தாங்கி நிற்கிறோம். அடையாளத்தைவிட வர்க்க நலன், ஒற்றுமை, போராட்டம் ஆகியவற்றறை நாம் முன்நிறுத்துவோம். ஊழியர் நலன் காப்போம் என வாழ்த்துரை வழங்கினார்.
தோழர் என்.டி.ராம்பொதுச்செயலர், SEWA BSNL
எங்கள் சங்கத்திற்கு இரு கடமைகள், பொறுப்புகள் உள்ளன. ஷிசி/ஷிஜி ஊழியர்களின் நலன் காப்பது, பொதுவான பிரச்சனைகளில் ஊழியர் நலன் காப்பது என்பது ஆகும். எங்கள் சங்கத்தின் சுயமரியாதை பாதிக்கப்படாத ஒற்றுமை போராட்டத்தை முன்னிறுத்துவதில் எந்தவித தயக்கமும் கிடையாது. ஷிசி/ஷிஜி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து நிர்வாகத்துடன் விவாதித்து தீர்த்து வருகிறோம். அகில இந்திய அளவில் தோழர்கள் சந்தேஷ்வர்சிங், சுப்புராமன் இஸ்லாம் ஆகியோருடன் எங்கள் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. மாநிலங்கள், மாவட்டங்களிலும் வலுவான கூட்டணி ஒற்றுமையைக் கட்டிட வேண்டும். இங்கு வந்துள்ள மாநிலச் செயலர்கள், அகில இந்திய நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனக் கூறி செயற்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தோழர் எஸ்.எஸ்.கோபாலகிருஷ்ணன்,சம்மேள்ன செயலர்.
தோழர் பட்டாபி முன்வைத்த கருத்துக்களை, ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற கமிட்டி அமைக்கப்பட வலியுறுத்துகிறேன். போனஸ் குறித்து மத்திய அரசின் உத்தரவை ரூ.7,000த்தை வலியுறுத்திட வேண்டும். 2019 உறுப்பினர் சரிபார்ப்புக்காக சங்க அமைப்பை பலப்படுத்திட வேண்டும். BSNLEU பல்வேறு பிரச்சனை தோற்று இருந்தாலும், அமைப்பு காரணமாக,கூட்டணி காரணமாக வெற்றி பெறுகிறது. நமது கூட்டணியை வலுப்படுத்தி, விரிவாக்கிட வேண்டும். DPE வழிகாட்டுதல் இல்லாமல் BSNLEU  7.07.2017 வேலைநிறுத்தம் செய்தது.. அனைத்து சங்க வேலைநிறுத்த முடிவு DPE வழிகாட்டுதல் உத்தரவு வருமுன் செய்தால் சரியாக இருக்குமா? கடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது BSNLEU  செய்த நிர்பந்தம் குறித்து நாம் அறிவோம். எனவே 2019 சரிபார்ப்பு தேர்தலுக்கு அமைப்பை பலப்படுத்திட திட்டமிட்டு செயல்படுவோம்.

தேசீய செயற்குழுவில் மாநிலச் செயலர் உரை
மாநிலச் செயலர் தோழர் கே.நடராஜன் உரையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்திட்ட ஆந்திர மாநிலச் செயலர் மற்றும் தோழர்களை பாராட்டினார். மாநில சங்கம் 4,400 உறுப்பினர்களுடன் தமிழகத்தில் முதல் சங்கமாகவும், NFTE  சங்கத்தில் முதன்மை மாநில சங்கமாகவும் உள்ளது. செயல்பாட்டிலும் தமிழகம் முன்நிற்கிறது. 2019 உறுப்பினர் சரிபார்ப்புக்கு மற்ற சங்கங்களையும் கூட்டணி சங்கமாக ஆக்கிட வேண்டும்.
காரைக்குடி மாவட்ட செயலர் தோழர் வி.மாரி அவர்களின் LONG STAY  மாற்றல் உத்தரவை மாற்றல் சங்க விதிவிலக்கு உத்தரவு அடிப்படையில் ரத்து செய்து உத்தரவை பெற்றுத் தந்த மத்திய சங்கத்தைப் பாராட்டினார்.ஊதிய மாற்றத்தில் ஊழியர்களின் ஊதிய நிலைகளை மாற்றிட இருதரப்பு கமிட்டி அமைக்க வேண்டும். லாப நிபந்தனை முற்றாக நீக்கி 15 % நிர்ணயம் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான போராட்ட திட்டங்களை அனைத்து சங்கங்களுடன் கலந்து வெற்றிகரமாக்கிடுவோம். சென்னையில் அமைச்சரை சந்தித்து மனு அளித்தது. EARN MORE GET MORE  என அமைச்சர் கூறியதை எடுத்துரைத்தார். போனஸ் தீபாவளிக்குமுன் பெற்றுத்தர மத்திய சங்கத்தை வலியுறுத்தினார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் LJCM  நடத்திட பல்வேறு முட்டுக்கட்டைகள் நிலவி வருவதை சுட்டிக்காட்டி மாதாந்திர பேட்டி பெற்றுத்தர வேண்டும். ஓர்க்ஸ் கமிட்டி, சேமநல நிதி கூட்டங்களில் நடத்திட சுணக்கம் உள்ளதை சுட்டிக்காட்டினார். CSC தனியார்வசம் ஒப்படைப்பை எதிர்த்து CGM  அவர்களை சந்தித்தபோது தமிழகத்தில் CSC  தனியார்வசம் ஒப்படைக்கப்படாது. உத்தரவு வந்தால் சங்கங்களை கலந்து ஆலோசிக்கப்படும் என உறுதி கூறியுள்ளார்.டவர் நிறுவன அமைப்பை ஏற்காமல் கடுமையாக போராட வேண்டும். தமிழகத்தில் இருந்து நவம்பர் டெல்லி தர்ணாவில் பெருமளவில் பங்கேற்ற திட்டமிடப்பட்டுள்ளதை எடுத்துக் கூறினார். தமிழகத்தின் பிரச்சனைகளை தீர்த்துவரும் மத்திய சங்கத்திற்கு நன்றி கூறி உரையை முடித்தார்.

தேசீய செயற்குழுவில் தோழர் பட்டாபி உரை
மிகச் சிறப்பாக செயற்குழுவை நடத்திவரும் ஆந்திர தோழர்களை பாராட்டுகிறேன். இன்றைக்கு மிகப்பெரிய அளவில் கார்ப்பரேட் செல் நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டி, போரை நடத்தி வருகிறது. டேட்டா மட்டுமே செல் சேவையில் ஆயில் ஆக இருக்கும் என ஜியோ முகோஷ் அம்பானி கூறி வருகிறார். ரூ.4 லட்சம் கோடி வருவாயை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெற்றுள்ளன. ஏர்டெல் வருவாய் ரூ.95,000 கோடி, கடன் ரூ.91,000 கோடி. ஙிஷிழிலி வருவாய் ரூ.28,000 கோடி, கடன் ரூ.3,000 கோடி மட்டுமே வைத்துள்ளது. எந்தவித கடனும் இல்லாமல் 2 லட்சம் ஊழியர்களின் குடும்பத்தை வாழ்வாதாரமாக விளங்குகிறது. ஏர்டெல் வெறும் 20,000 ஊழியர்களுக்கு பணி வழங்கி வருகிறது. சமூக பொறுப்புடன் விளங்கும் ஙிஷிழிலி அதிகாரிகளுக்கு 3 வது ஊதியக்குழு (சதீஷ் சந்திரா கமிட்டி) மூலம் புதிய ஊதிய விகிகத்தில் நிர்ணயம் செய்யப்பட போராடி வருகிறோம்.. ஆனால் ஊழியர்களுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் புதிய விகிதங்கள் உருவாக்கப்பட வேண்டும். 3வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு நேரிடையாக ஊதிய மாற்றம் செய்துவிட முடியாது.
நிலக்கரித்துறையில் அமைச்சரவை விதிவிலக்கு காரணமாக நட்டமடைந்த நிறுவனங்களையும் இணைத்து 01.01.2017 முதல் அதிகாரிகளுக்கு ஊதிய மாற்றம் வழங்கப்பட உள்ளது.  ஊழியர்களுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் 20 சதம் ஊதிய நிர்ணயம் வழங்க ஒப்பந்தம் பெற்றுள்ளனர். பாராளுமன்ற நிலைக்குழு BSNL/MTNL க்கு புத்தாக்கம் செய்திட கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளது. BSNL நிறுவனம் புத்தாக்கத்திற்கு நடவடிக்கைகளை பட்டியலிட்டு பதில் அளித்துள்ளது. MTNL மூடிவிட பரிந்துரைக்கப்படுள்ளத்து.DPE  29.10.2015 வழிகாட்டுதல் அடிப்படையில் நலிவடையும் நிலையில் உள்ள பொதுத்துறைகளை மூடுவது அல்லது புத்தாக்கம் செய்வது என கூறியுள்ளது. . BSNL விற்பது என்பது முடிவை குறித்து NFTE சங்கம் கடும் ஆட்சேபத்தை எழுப்பியபோது, தற்போது விற்கும் உத்தேசம் இல்லை நிதி ஆயோக் என  பதில் கூறியுள்ளது. நமது சங்கத்தின் முயற்சியால் விற்கும் பட்டியலில் தற்போது NFTE இடம் பெறவில்லை. BSNLEU  அகில இந்திய மாநாட்டை திருப்திபடுத்துவதற்காக டிசம்பர்2017ல் ஒரு நிர்வாகக் கமிட்டி ,ஊதிய மாற்றம் குறித்து விவாதிக்க நியமிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஏதும் நடைபெறவில்லை. DPE  வழிகாட்டுதல் ஊழியர்களுக்கு வெளியிடப்பட்ட பின்புதான் விவாதிக்க முடியும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுவரை கமிட்டியை ஊழியர் தரப்பையும் உள்ளடக்கி கூட்டம் நடத்திட வலியுறுத்திடவில்லை. எனவே 3 வது ஊதியக்கமிட்டி ஊழியர்களுக்கானது அல்ல. ஊழியர்களுக்கான ஊதிய பேச்சுவார்த்தை கமிட்டி ஊழியர் தரப்புடன்  இரு தரப்பு பேச்சுவார்த்தை துவக்கிட வேண்டும்.

2006 வரை ஊதிய மாற்றத்தில் நட்டமடைந்த பொதுத்துறை அதன் செலவை ஈடுகட்டும் வகையில் அதன் RESOURCE வழிவகை காட்டப்பட்டால்  ஊதிய மாற்றம் செய்திடஅனுமதிக்கப்படும். 2007 முதல் லாபம் காட்டாத நிறுவனங்கள் ஊதிய மாற்றம் செய்திட அனுமதிக்கப்படவில்லை. 63 பொதுத்துறை நிறுவனங்கள் 2007 ஊதிய மாற்றம் செய்யப்படவில்லை. BSNLலில் 2016-17, 2017-18, 2018-19 ஆண்டுகளுக்கு 28 மாதங்கள் CASH FLOW ரூ.6,800 கோடியாகவும், ஊதிய மாற்றம் வழங்கினால் ரூ.6,300 கோடி செலவாகவும் இருக்கும் என மதிப்பிட்டு ஊதிய மாற்றம் வழங்கிட BSNL நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
ஊதியம் பேச்சுவார்த்தையில் தேக்கநிலை ஊதியம், ஓய்வூதியம் பங்களிப்பு, அடிப்படை ஊதியம் அடிப்படையில் இருந்திட வேண்டும் என கோர வேண்டும். அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் ஒற்றுமை போராட்டத்தை வரவேற்கும் வேளையில் 2 வது ஊதிய மாற்றத்தில் ஊழியர்களின் விடுபட்ட  பிரச்சனைகள் என்ன? என்பதை தெளிவாக ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
22.10.2017ல் ஹைதராபத்தில் நடைபெற உள்ள பொதுத்துறை சங்கங்களின் மாநாட்டில் ஊதியம் வழங்கும் சக்தி, DPE  நிபந்தனை லாபத்துடன் இணைப்பு ஆகியவற்றை முற்றாக நீக்கும் வகையில் தீர்மானம் எடுத்திட வேண்டும்.  AFFORDABILITY / PBTநிபந்தனையை  நீக்கிட தனியாகவோ அல்லது பொதுத்துறை அனைத்துக்கும் DPE நிபந்தனை நீக்கிடவோ போராட வேண்டும்.
BSNL  போர்டு ஊதிய மாற்றத்தின் மீது விவாதத்தை ஒத்தி வைத்துள்ளது. சென்றமுறை  கிராக்கிப்படி IDA 68.8% இருந்தது. ஆனால் இதுவரை மிஞிகி 119.5% உயர்த்தப்பட்ட பின்னும் மிஞிகி இணைப்பு ஏதுமில்லை. IDA யை இணைத்திட கோர வேண்டும்.
டவர் நிறுவனம் குறித்து கேபினட் முடிவு எடுத்தபின் போராடி ரத்து செய்தால் நல்லது. இல்லை என்றால் வெறும் எதிர்ப்பை பதிவு செய்யாமல் ஊழியர்களின் பல்வேறு அச்சங்களை, தனியாருக்கு செல்லாமல் இருக்கும் உத்தரவாதம், ஊழியர்களின் பிரச்சனைகள், சொத்துமீது BSNL க்கான முழுஉரிமை ஆகியவற்றின்மீது ஆக்கபூர்வமான கோரிக்கைகள், பேச்சுவார்த்தை, போராட்டம் நடத்திட வேண்டும்.
இறுதியாக மீண்டும் ஊழியர்களுக்கான ஊதிய பேச்சுவார்த்தை கமிட்டி அமைப்பது, இருதரப்பு பேச்சுவார்த்தை, அனைவரையும் ஒன்றுபடுத்தி விவாதிப்பது, பாதக அம்சங்களை களைவது என்பதை முக்கியப் பிரச்சனையாக விவாதித்து முடிவு எடுத்திட வேண்டிக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக