செவ்வாய், ஜூன் 13, 2017

ஜூன் 14 கவன ஈர்ப்பு நாள்

NATIONAL FORUM OF BSNL UNIONS  AND ASSOCIATIONS
NATIONAL FORUM OF BSNL UNIONS  AND ASSOCIATIONS  கூட்டம் டெல்லியில் 24/05/2017 அன்று நடைபெற்றது.NFTE-BSNL,TEPU,SEWA BSNL, மற்றும் BTEU கலந்து கொண்டனர்.
ஊதிய மாற்றத்தில் நிலவி வரும் கடும் காலதாமதம் ஊழியர் மத்தியில் அதிருப்தி,கோபம், ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது. DPE/DOT திட்டமிட்டு BSNL நிர்வாகத்தை பேச்சுவார்த்தை நடத்திட அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.பேச்சு வார்த்தை நடத்திட ஊழியர் தரப்பையும் உள்ளடக்கிய கூட்டு கமிட்டி அமைத்திடவும்,15% ஊதிய நிர்ணயம் செய்திட BSNL க்கு வழிகாட்டிடவும் DPE/DOT யை வலியுறுத்திட கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் ஜூன்14 ல் நடத்திடமுடிவு செய்துள்ளது.
ஊதிய மாற்றம் செய்திட அமைச்சரை சந்தித்து நேரம் ஒதுக்கிட சிறப்பு அலுவலர் முன்னாள் DOT  செயலர் A.N. ராய் அவர்களை சந்தித்து கடிதம் வழங்கி அமைச்சரின் தலையிட்டை கோரப்பட்டுள்ளது..பிரதமர் அவர்களுக்கும்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற DPE வழிகாட்டுத்லை வெளியிடக் கோரி மத்திய சங்கங்கள் நிர்பந்தம் அரசுக்கு கொடுத்திட வேண்டுகோள் விடுத்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
12/05/2017ல் அமைச்சரவை செயலர் கூட்டிய கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகள் ,தகவல்கள் சாதகமாக இல்லை என கூறப்படுகிறது. நமது நிறுவனத்திற்க்கு விதிவிலக்கு அளிக்கும் பரிந்துரகள் ஏதுமில்லை.விதிவிலக்கு பெற்று ஊதிய மாற்றம் பெற்றிட கடும் போராட்டம் அவசியம் என்பதை எடுத்துக்கூறி ஊழியர்களை போராட்டத்திற்க்கு திரட்டிட தயாரிப்பு பணிகளை செய்திட வேண்டும்.
அனைத்து கூட்டணி சங்கங்களுடன் இணைந்து

ஜூன் 14 கவன ஈர்ப்பு நாள்

ஆர்ப்பாட்டத்தை

 வெற்றிகரமாக்குவோம்.

வாழ்த்துக்களுடன்,  தோழமையுள்ள

K.நடராஜன்,          K..கிருஷ்ணன்     T.முத்துகிருஷ்ணன்   M.பாலகிருஷ்ணன்

NFTE-BSNL மாநிலசெயலர்    TEPU மாநிலசெயலர்    SEWA-BSNLமாநிலசெயலர்     PEWA மாநிலசெயலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக