புதன், ஜூலை 06, 2016

78.2

78.2
முயற்சி... திருவினையானது..

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக...
 நமது ஓய்வு பெற்ற மூத்த தோழர்கள் போராடி வந்த 
78.2 சத IDA  இணைப்பிற்கு மத்திய அமைச்சரவை
05/07/2016 அன்று  ஒப்புதல் அளித்துள்ளது. 

01/01/2007 முதல் 09/06/2013 வரை 
ஓய்வு பெற்ற தோழர்களும் .. மரணமுற்ற ஊழியர்களின் வாரிசுகளுமாக...
ஏறத்தாழ 118500  ஓய்வூதியர்கள்  இந்தப்பலனை அடைவர். 

இதனால் அரசுக்கு ஏறத்தாழ 155 கோடி ரூபாய் ஆண்டுக்கு செலவாகும். 10/06/2013லிருந்து  நிலுவையாக 290 கோடி வழங்கப்படும். 

மேலும்  01/10/2000க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களின் 
ஓய்வூதிய செலவை அரசே ஏற்கும் என்றும் 
அதில் BSNLக்கு தொடர்பில்லை என்றும்... 
01/10/2000க்குப் பின் ஓய்வு பெற்றவர்களின்
 ஓய்வூதியச்செலவும் அரசிற்கே பாத்தியப்பட்டது என்றும்... 
BSNL தனது பங்களிப்பை FR -116ன்படி செலுத்த வேண்டும் எனவும் 
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் நிதி அமைச்சகம் நமக்கு ஏற்படுத்திய
 60:40 பங்களிப்பு  என்ற பத்தாண்டு  அநீதி களையப்பட்டுள்ளது.

BSNL உருவாக்கத்தின்போது அரசு அளித்த உறுதிமொழியை 
தற்போதைய அரசு நிறைவேற்றும் நோக்கிலும், பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும்...
 மத்திய அமைச்சரவை  இம்முடிவை 
எட்டியுள்ளதாக  அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

ஓய்வூதியத்தை உறுதி செய்தது NFTE.
ஓய்வூதியம் நிலைத்திட தொடர்ந்து போராடியது  NFTE. 
60:40 பிரச்சினையில்  ஆரம்பம் முதல்  எதிர்க்குரல் கொடுத்த  
ஓய்வூதியத்தின் தந்தை தோழர் குப்தாவை 
நாம் நெஞ்சார நினைவு கூர்கிறோம்.

சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக...
 78.2  பிரச்சினையில் தொடர்ந்து போராடி 
வெற்றி பெற்ற AIBSNLPWA ஓய்வூதியர் சங்கத்திற்கு 
நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக