வெள்ளி, ஏப்ரல் 01, 2016

PLI போனஸ்

PLI போனஸ் : ஊழியர்களின்உரிமையையும்
ஊழியர்களின் மரியாதையையும் நிலைநாட்டிட நமதுபோராட்டம்
மார்ச் 30, 2016 ல் போனஸ் குழுக் கூட்டம் நடைபெற்றது.  நமதுசங்க பிரதிநிதியாக தோழர் இஸ்லாம் கலந்து கொண்டார்.  ஊழியர்களின்நலனுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட சங்கத்தின் ---  பிரச்சனையைவெற்றிகரமாகத் தீர்த்து எப்படியேனும் ஊழியருக்குப் போனஸ் பெற்றுத்தருவதைக் கொள்கையாகக் கொண்ட சங்கத்தின் --  வர்க்க உணர்வின்வெளிப்பாடாய் NFTE தோழர் இஸ்லாம் கலந்து கொண்டார்.
          ஆண்டாண்டு காலமாய் அனுபவித்த போனஸ் உரிமை கடந்தசில ஆண்டுகளாய் கை நழுவிப் போனது.  காரணம் இலாபத்தோடுஇணைந்த புது போனஸ் பார்மூலாவை BSNLEU சங்கம் கொண்டுவந்ததின்விளைவுஉரிமை இழப்பு.  இழந்த உரிமையை மீட்டெடுப்பதில் எத்தனைமுன்னுரிமைத் தந்திருக்க வேண்டும்?  ஆனால் போனஸ் குழுக்கூட்டத்தில் BSNLEU சங்கப் பிரதிநிதி கலந்து கொள்ளவில்லைஊழியர்களுக்குக் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்ற அவசரப்படாதுதங்கள் வசதிக்கு முக்கியத்துவம் தந்து கூட்டத்தை BSNLEU சங்கம்புறக்கணித்துள்ளது.
நேற்றுவரைஒரு பின்னணி
           “ PLI பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணுங்கள்லாபத்தோடுஇணைந்த தற்போதுள்ள பார்முலாவை மாற்றுங்கள்BSNLEU சங்கம் ஊதியமாற்ற ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்ட PMS அடிப்படையை மாற்றுங்கள்என்பதை நாம் நிர்வாகத்திடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம்இதனைசாதிப்பது கடினமானதுதான் என்றாலும் முடியாததல்லNFTE சங்கம், --தனது நெடிய அனுபவத்தில் கைவரப்பெற்ற பேச்சுவார்த்தை திறமையால் --- இதற்கு முந்தைய போனஸ் குழுக் கூட்டத்தில் BSNLEU சங்கத்தையும்நிர்வாகத்தையும் கருத்து ஒருமைப்பாட்டுக்குக் கொண்டுவந்தது.  
          உற்பத்தி அடிப்படையில் போனஸ் என்பதை ஏற்க டைரக்டர் (HRதிரு ராய் அறிவுரை தந்தார்.  ஆனால்நிர்வாகம் அதனை ஏற்க மறுத்துBSNLEU சங்கம் ஒப்புக்கொண்ட PMS அடிப்படையை பிடித்துக்கொண்டுஅடமாய் நிற்கிறது.  நிர்வாகத்தின் இந்த நிலைபாட்டை  NFTE சங்கம்முற்றாக நிராகரிக்கிறதுஏனெனில் PMS அடிப்படை என்பதுஅதிகாரிகளுக்குச் சொல்லப்பட்டது தானே தவிர ஊழியர்களுக்கானதுஅல்ல
          நிர்வாகம் சில KPI முக்கிய அளவீடு இன்டிகேடர்களையும் ,DOT_BSNL ன் புரிந்துணர்வு ஒப்பந்த இலக்கு அளவுகளையும்பரிசீலனைக்காகச் சுற்றுக்கு விட்டுள்ளதுNFTE சங்கம் இப்பிரச்சனையில்வருமான அளவீடுகளை இணைப்பதைக் கடுமையாக எதிர்க்கிறது.  மேலும்நாம் இரண்டு விஷயங்களைக் கோரியுள்ளோம்.  ஒன்றுFair /பரவாயில்லை என்பதான ஒரு அளவீடு இருக்க வேண்டும்இரண்டாவதாககுறைந்தபட்ச போனஸ் தொகையை அறிவிக்க வேண்டும்.
          உற்பத்தி நன்று / பரவாயில்லை என்பதற்கு குறைவாகப்போகும் நிலைவந்தாலும் குறைந்தபட்ச போனஸ் என்பதை NFTE சங்கம்வற்புறுத்துவதாலேயே பிரச்சனைத் தீர்வில் முட்டுக்கட்டைஏற்பட்டுள்ளதாக நிர்வாகமும் BSNLEU சங்கமும் ஒன்றாகக் கருதுகின்றன .JAC கூட்டு இயக்க அமைப்பில் “குறைந்தபட்ச போனஸ் என்பது இல்லாமல்BSNLEU சங்கம்  கையெழுத்திடாது  என BSNLEU சங்கம்  உறுதிமொழிஅளித்தது.  ஆனால் அதே BSNLEU சங்கம்குறைந்தபட்ச போனஸ்என்பதை NFTE சங்கம் வற்புறுத்தத் தேவையில்லை என  நம்மிடம்வாதாடுகிறது.
தொடர்ந்து விவாதிக்க NFTE சங்கம் ஒப்புக் கொண்டது.  ஆனால் போனஸ்குழுக் கூட்டங்கள் தாமதிக்கப்பட்டனமற்றவர்களின் சித்துவிளையாடல்களை அறியாதவர்களா நாம்எனவே தான் அதனைமுறியடிக்கபுது பார்முலா இறுதி செய்யப்படும் வரையில் அட்ஹாக்போனஸ் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.
          அட்ஹாக் போனஸ் கோரிக்கை எழுப்ப ஒப்புக் கொண்ட BSNLEUசங்கம்அட்ஹாக் போனஸாக ஒரு மாத சம்பளம் தர வேண்டுமெனகுயுத்தியாக கேட்டு குறுக்குசால் ஓட்டி விளையாடியது.. எலி எட்டு முழம்வேட்டி ஏன் கட்டுகிறது தெரியுமாNFTE சங்கம் அங்கீகாரம் பெற்றபின்எங்கே PLI ? எங்கே போனஸ் என்ற ஒரு கடுமையான வாதத்தை /பிரச்சாரத்தை முன்வைக்க BSNLEU சங்கம் விரும்புகிறதுதன்னால்முடியாது என்றால் யாராலும் முடியாது.. முடியவே முடியாது… .. என்றநினைப்பு அந்த சங்கத்திற்கு
          தனது முதல் எதிரி நிர்வாகம் என்று நினைக்க வேண்டிய BSNLEU சங்கம்மாறாக , NFTE சங்கத்தை முதல் எதிரியாக படம்பிடித்துக் காட்ட நினைக்கிறது.  தான்தான் பெரிய சங்கம் என்றபோதையால் ஏற்பட்ட பாதிப்பின் விளைவு இது BSNLEU சங்கத்தின் இந்தமனோநிலை சரிபார்ப்புத் தேர்தலுக்குப்பின் உடனடித் தேவையானஒன்றுபட்ட இயக்கம் கட்டுவதற்கு மிகப் பெரிய சேதத்தை விளைவிக்கப்போகிறது என்பதே நமது கவலையாக உள்ளது.
          தேசியக் குழுக் கூட்டத்தில் சங்கங்களின் இந்த வேறுபட்டஅணுகுமுறையைச் சுட்டிக்காட்டி டைரக்டர் HR  பேச முற்பட்ட இரண்டுசங்கத் தலைவர்களுமே அவரது கருத்தை எதிர்த்துக் குரல் எழுப்பி எங்கள்கோரிக்கையில் வேறுபாடு ஏதும் இல்லைநாங்கள் அட்ஹாக் போனஸ்கோருகிறோம் என்றோம்.
          ஊழியர்களின் சுயமரியாதைக்கு உறுநேரா வண்ணம் போனஸ்உரிமையை திரும்ப வழங்கு என NFTE சங்கம் தொடர்ந்து நிர்வாகத்தைவலியுறுத்தி வருகிறது.
நேற்றைய கூட்டம்
          நமது தொடர் முயற்சிகளுக்குப் பின் நிர்வாகத்திற்கு போனஸ்கமிட்டியைக் கூட்டுவதைத் தவிர வேறு வழியில்லாது போனதுபோனஸ்கமிட்டிக் கூட்டமும் மார்ச் 30 ம் தேதி கூடியதுஊழியர்களின் நலனுக்குப்பொறுப்பேற்கக் கூடிய பொறுப்பு வாய்ந்த  எந்த சங்கமும் புறக்கணிப்புஎன்ற ஒற்றை எதிர்நிலை நிலைபாட்டால் மட்டுமே திருப்தியை ஏற்படுத்திவிட முடியாது.. மாறாக விவாதங்களின் போது சந்திக்கக் கூடிய எந்தஇக்கட்டான வாதங்களையும் நேர்மையாக எதிர்கொண்டு உழைப்பாளிகளின்கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படாத வகையில் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதில்தான் சங்கத்தின் மாண்பு அடங்கியிருக்கிறது
மூன்று இலக்கத்தில் 2014 – 15 க்கு போனஸ் தர நாங்கள் தயார் எனநிர்வாகம் கூறுகிறதுஆனால் அது வருமான அளவீட்டு அடிப்படையில் --MOU புரிந்துணர்வு ஒப்பந்த இலக்கின் அடிப்படையில் --.மட்டுமே அமையமுடியும்MOU இலக்கிற்கு மேல் திரட்டப்படும் வருமானத்தின்கோடிகளோடு இணைத்தே போனஸ் அமையும் என்பது நிர்வாகத்தின்நிலைபாடு.
DOT-BSNL MOU அடிப்படையில் 14-15 ஆண்டிற்கு  Excellent என்பதற்கானவருமான அளவீடு    31395 கோடியாகும் Very Good என்பதற்கு  29900கோடியாகும் .     Good என்பதற்கு   28405 கோடியும்   Fair என்பதற்கு  26985 கோடியும்      Poor/ மோசம் என்பதற்கு  25636  கோடியும்அளவீடாக அமையும்
கம்பெனியின் தணிக்கை செய்யப்பட்ட உண்மையான வருமானம்ரூபாய் 28645 கோடியாகும்.
ஒப்பீடுகள்
கம்பெனியின் இந்த உண்மையான வருமானமான ரூபாய் 28,645கோடியை அளவீடுகளோடு பொருத்திப் பார்க்கலாம்.  மோசம் என்றஅளவோடு ஒப்பிட்டால்  [ 28,645 (--) 25,636 ] ரூபாய் 3009 கோடிஅதிகம்அதே போன்று Fair என்ற பரவாயில்லை என்ற அளவீட்டின்அடிப்படையில் ரூபாய் 1660 கோடி கூடுதலாகும்நன்று என்பதோடு ரூ240 கோடி கூடுதலாகிறது
          அவர்கள் நன்று என்பதோடு மட்டுமே ஒப்பிடுகிறார்கள்.அதனால் MOU இலக்கு நிர்ணயிப்பு படி நாம் ரூபாய் 240 கோடி மட்டுமேஅதிகம் வருவாய் ஈட்டியிருக்கிறோம் என்கிறார்கள்.
          ஒட்டுமொத்த இறுதி ஸ்கோர் DPE வழிகாட்டுதல்படி Fair/பரவாயில்லை என்பது தான்அதற்காக நிர்ணயிக்கப்பட்ட ஸ்கோர் 3.9என்பதுதான்எனவே BSNL கம்பெனி பரவாயில்லை என்றஅடிப்படையையே கணக்கில் எடுத்துக் கொண்டு அதன்படி கூடுதல்வருமானம் ரூபாய் 1660 கோடி என்பதை ஏற்க வேண்டும்..  கம்பெனியின்வருடாந்திர கணக்கில் சென்ற ஆண்டை விட சேவைப் பிரிவில் 4.16சதவீதம் கூடுதல் வருமானம் ஈட்டியிருக்கிறோம்ஊழியர் நலச்செலவுகள்  3.06 சதவீதம் குறைந்துள்ளது என்பதைச் சொல்லுகிறது.
          மேலே விரிவாகக் கூறப்பட்ட கணக்குகளின் அடிப்படையில்லாபமே ஈட்டியிருக்கிறோம்.  நஷ்டம் என்ற கணக்கு சொத்துக்களின் மீதுகணக்கிடப்படும் தேய்மானம் என்ற தலைப்பின் கீழ் கணக்கிடப்பட்டதுமட்டுமே என்பதை ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்கிறார்கள்டமாரம்அடிக்கப்படுவது போல கம்பெனியின் நிலைமை ஒன்றும் அவ்வளவுமோசமானதாக இல்லை.  ரூபாய் 28 ஆயிரம் கோடி வருமானம்என்பதுவும்  2014 – 15 காலத்தில் கடன் ரூபாய் நான்காயிரத்து ஐநூறுகோடி மட்டுமே என்பதுவும் பகிரங்கமாக பதிவு செய்யப்பட்டஉண்மைகளாகும்.
கம்பெனியின் அறிக்கையின்படி தேய்மானம் ரூபாய் 8817 கோடிவாராக்கடன் தள்ளுபடி ரூபாய் 229 கோடிஇதர நஷ்டம் 300 கோடி;பில்லிங் தாவா வகையில் 269 கோடியாகும்.
          மேலும் எடுத்துக்காட்ட வேண்டிய சில உண்மைகள் உண்டுபில் இல்லாமல் மருத்துவ வசதி நிறுத்தப்பட்டதை ஊழியர்கள் பொறுத்துக்கொண்டதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 150 லிருந்து 200 கோடி ரூபாய்கம்பெனி மிச்சம் பிடித்து சேமிக்கிறது.  ஆனால் PLI என்ற வகையில்வெறும் அறுபது கோடி ரூபாய் வழங்க நிர்வாகம் தயாரில்லை.  எப்படிஎனில்BSNLEU சங்க காலத்தில் 2009 ல் PLI ரூ3500 மட்டுமேவழங்கப்பட்டதைக் கணக்கிட்டால் செலவு ரூ60 கோடிக்கு குறைவாகவேஇருக்கும்.
இன்றைய எதார்த்தம்
          மேலே விவரிக்கப்பட்டவைகளிலிருந்து ஒன்று தெளிவாகிறதுவெவ்வேறு மட்டைகளை வைத்துக் கொண்டு விளையாடுவது போலத்தோன்றினாலும்எதார்த்தத்தில் BSNLEU சங்கமும் நிர்வாகமும் ஓர்அணியில் நின்று பேட் செய்கின்றனஇவர்களை NFTE சங்கம்,  களத்தில்எதிர்ப்புறம் நின்று தீரத்துடன் சந்திக்கிறது,
PLI கமிட்டியில் நாம் முன் வைத்துள்ள வாதங்களாவது,
     *  PLI  போனஸ் என்பதை இலாபத்துடன் இணைத்து கணக்கிடக்கூடாது.
          *  PLI  போனஸ் என்பதை வருமானத்துடன் இணைத்துகணக்கிடக் கூடாது.
   * PLI  போனஸ் என்பதை உற்பத்தி அம்சங்களோடு மட்டுமே இணைத்துகணக்கிடப்பட   வேண்டும்
     * கணக்கீட்டின் அளவீடுகளில் Fair / பரவாயில்லை என்ற அளவீடுஇடம்பேற வேண்டும்.
இதன் அடிப்படையில் பரவாயில்லை என்ற அளவீட்டின்படி ரூ1660கோடி அதிக வருமானம் ஈட்டியதைக் கணக்கில் கொண்டாலே DOTஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்கிய ரூபாய் 3500 குறைந்த பட்சபோனஸாக பெற நாம் தகுதியுடையவர்கள் ஆவோம்.
பேச்சு வார்த்தைக் கதவுகளை அறைந்து மூடுவது / புறக்கணிப்பதுஎன்பது ஒருவகையான பலவீனம்.  விவாதத்தில் மறுதரப்பை ஒப்புக்கொள்ள வைக்கக் கூடிய வலுவான வாதங்கள் நம்மிடம் போதுமானதாகஇல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் பலவீனம்.
          நம் எதிரே இரண்டு வழிகள்தான் உள்ளன.  ஒன்று பேச்சுவார்த்தைமற்றொன்று கடுமையாகப் போராடுவது பேசுவது.


நம்மிடையே உள்ள அணுகுமுறை வேறுபாட்டைப் பயன்படுத்திநிர்வாகம் நம் அனைவரையும் முட்டாளாக்குவதை நாம் ஒருபோதும்அனுமதிக்கலாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக