புதன், பிப்ரவரி 10, 2016

கருணை அடிப்படை வேலை

கருணை அடிப்படை வேலை 

மரணமுற்ற ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்குவதில் உள்ள விதிகளைத் தளர்த்த வேண்டும் என நமது சங்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. JCM தேசியக்குழுக்கூட்டத்திலும் இப்பிரச்சினை விவாதிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பாக BSNL நிர்வாகம் 05/02/2016 அன்று புதிய உத்திரவொன்றைப்  பிறப்பித்துள்ளது. 
அதன்படி...
  • பணி செய்துகொண்டிருக்கும் போது ஏற்படும் மின்விபத்து..
  • தொலைபேசி மற்றும் கேபிள் பழுது நீக்கும்போது ஏற்படும் விபத்து..
  • பயங்கரவாத தாக்குதல்..
  • தொலைபேசி நிலையத்தில் தீ விபத்து 
  • மின் சாதனங்களைப் பழுது நீக்கும்போது  ஏற்படும் மின்விபத்து 

போன்றவற்றால் உயிர் இழக்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக நேரடியாக கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என BSNL நிர்வாகம் உத்திரவில் தெரிவித்துள்ளது. மேலும்  இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு தற்போதைய மதிப்பெண் வழங்கும் முறை பொருந்தாது எனவும் விளக்கமளித்துள்ளது.

மரித்தவர்களின் வாரிசுகளுக்கு பணி தரும் முறை மெல்ல மெல்ல மரித்து வரும் நிலையில்..  இப்பிரச்சினைக்கு உயிரூட்டி தீர்வு கண்ட நமது மத்திய மாநில சங்கங்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக