வெள்ளி, ஜனவரி 29, 2016

NFTE-BSNL,PUDUCHERRY
கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் 03/02/2016
இடம்:- பொதுமேலாளர் அலுவலகம், மாலை :-0530 மணி
ன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!
புதுவை மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் சேவைக்காக தொழிற்சங்கங்கள் முன் நிற்பது இன்றைய தேவையாகும். அதே நேரம் ஊழியர்களி நியாயமான கோரிக்கைகள் மீது நிர்வாகம் அலட்சியம் காட்டுவதும்,சங்கங்களை தேவை படும் பொழுது தொட்டுக்கொள்வது, மற்ற நேரங்களில் உபத்திரமாக பேசுவது என்பது நினைப்பதுதொடர்கிறது.
தரமற்ற அதிகாரி சிலரின் நடிப்பில், ஊழியர்கள் வதைப்பதை நியாப்படுத்துவதை நாம் ஏற்க முடியாது.நிர்வாகம் தன்னிச்சையாக எடுக்கும் முடிவை நாம் தண்டனித்து ஏற்க  முடியாது.அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். பிரச்சனை தீர்வு வேண்டும். சங்கம் உபத்திரமாக கருதுவது மாற்றப்படவேண்டும் என கோரி " ஆர்ப்பாட்டம்" நடத்திட மாவட்டசெயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.எனவே அனைவரும் கலந்துகொண்டு நமது உரிமைகுரலை உயர்த்திட வாரீர்.
1. கேபிள் பழுதுகள் நீக்கிட 6 மாதத்திற்க்கு முன் கருத்து கேட்பு கூட்டத்தில் ஏற்கபட்டபின்னரும் கான்டிராகட் விடவில்லை.ஊழியர்கள் 700-800 இணைப்புகளை பராமரிக்க தேவைஇருப்பதால் பழுது நீக்கிடப் படும் சிரமம் சொல்லண்ணாத வகையில் உள்ளது, 5 வருடங்களாக பாராமரிப்பு காண்டிராக்ட் இலலாத காரணத்தால் பிரச்சனை மோசமாகியுள்ளது.
2. சேவையை மேம்படுத்தும் ஒர்க்ஸ்கமிட்டி கூட்டம் சடங்காகி போனது.
3. வாடிக்கையாள்ர்களை அதிகாரிகள் பலரும் சந்திக்க மறுப்பது, இல்லாமல் செல்வது,ஊழியர்களை கை காட்டுவது தொடர்கதையாகி  போனதால் ஊழியர்-வாடிக்கையாளர் மோதலாகி வருவது வருத்தம் அளிக்கிறது.
4. ஊழியர்கள் டூல்ஸ்கேட்டால் கொலை குற்றம் போ பார்க்கப்படுகிறது.  சொந்த காசில் வாங்கி செய் என உத்திரவு போடப்படும் அவலம்.
5. சீருடை கேட்டு ஜன-15 ஏற்றும்  வழங்படாமல் இருப்பது வாடிக்கையாகி போனது.
6. ஊழியர்கள் விருப்ப மாற்றல் என்றால் பரிசீலிக்க கூட மறுப்பது தோடர்கிறது.அதிகாரிஎன்றால் வீட்டு வாடகைப்படிக்காக மட்டும் இடம் மாற்றுவது, ஊழியர் என்றால் கிள்ளுகீரை யாக நினைப்பது,
பாரபட்சம் காட்டுவது நிலையாகிபோனது
7. சம்பள பட்டியல் வழங்கு வதில்லை.
இப்படி தொடரும் ஊழியர் விரோத,சங்க விரோத நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுத்தால் சேவை காரணம் காட்டுவது தந்திரமாக மாறியுள்ளது.ஊழியர் நலன் புறக்கணித்து  சஙகம் செயல்பட முடியாது என நிர்வாகம் உணரட்டும் .நமது போராட்டகுரல்  ஓங்கி ஒலிக்கட்டும்
மா.செல்வரங்கம், மாவட்டசெயலர்

மாவட்ட பொதுக்குழு
நாள்-03/02/2016               --- சங்க அலுவலகம்               -மாலை 0630
தலைமை தோழர்.M.தண்டபாணி, மாவட்டத்தலைவர்
ஆய்படு பொருள்
v 7 வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்-பணிகள் திட்டமிடல்
v மாவட்ட சங்க போராட்டம் -அடுத்த நிலை திட்டமிடல்
மா.செல்வரங்கம், மாவட்டசெயலர்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக