இண்டோர் கிளை மாநாடு
உண்மை கிளம்புவதற்கு முன்னர் பொய் ஊரை சுற்றி வந்துவிடும் என்பது போல மாநாடு அறிவிக்க பட்ட உடன் காவல்துறை பொய்புகார் ,அவதூறு அறிக்கை ,அதற்கு சிலரின் வாட்சப் அறிக்கை என மிக பெரிய ஆரவாரம் அனைத்துக்கும் எதிராக உறுப்பினர்கள் தங்களது பெரும் பங்கேற்ப்பின் மூலம் பதில் அளித்துள்ளனர்.
இண்டோர் கிளை 30 உறுப்பினர்களில் 5 உறுப்பினர்களை வைத்து மாநில பொருளர் நடத்திய போலி மாநாட்டை நிராகரித்து ,முறையான மாநாட்டை நடத்திட நடைபெற்ற அனைத்து முயற்சிகளும் வீணான நிலையில் மாநிலச்சங்கம் நடத்திய இண்டோர் கிளை மாநாடு 09/06/2015 அன்று தோழர் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது.
தோழர் சென்னகேசவன் மாநில உதவி செயலர் சங்க கொடியேற்ற மாநாடு துவங்கியது .29 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
பார்வையாளராக 50க்கும் மேற்பட்ட தோழர்கள்\ கலந்து கொண்டனர்.
கடலூரில் இருந்து குழந்தைநாதன் உள்ளிட்ட ட்தோழர்கள் கலந்தது கொண்டனர்.
தோழர் செல்வரங்கம் வரவேற்புரை ,தோழர் காமராஜ்,மாவட்டசெயலர் துவக்க உரை க்கு பின்னர் ஆண்டறிக்கை,வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்க பட்டு ஏற்கப்பட்டது.நிர்வாகி தேர்தல் நடைபெற்று கீழ்கண்ட நிர்வாகிகள்
தேர்ந்த்தடுக்கப்பட்டனர்.
தலைவர் :-தோழர் ரகுபதி
உதவி தலைவர்கள் :- தோழியர் S.விஜயலட்சுமி
தோழர் S. சேகர்
தோழர் K.S. பழனிவேல்
செயலர் தோழர் V ஸ்ரீதரன்
உதவிசெயலர் தோழர் A.இளங்கோ
தோழியர் மீனா செந்தில்குமார்
பொருளர் தோழர்K. சுவாமிநாதன்
அமைப்புசெயலர்கள் தோழியர் தனலட்சுமி
தோழர் சதிஷ் குமார்
பின்னர் சிறப்புரை ஆற்றிய தோழர் ஸ்ரீதர் கடலூர் மாவட்ட செயலர் புதுவை அசோ கராஜனின் போலி அறிக்கை ,நிதி வழங்காமல் இருப்பது , கடலூரிலும் அவர்கள் செய்யும் சங்க முடக்கும் செயல் குறித்து விளக்கினார்.
தோழர் செனன கேசவன் மாநில சங்க உதவி செயலர் வேலை நிறுத்த கோரிக்கைள் , மாநாடு நடத்திட மாநில சங்க நிலைபாடு குறித்து விளக்கி தான் எடுத்த முயற்ச்சிகள் அனைத்தையும் விளக்கினார்.
தானே புதுவையில் பெரும் பான்மை என்று ஊர் முழுக்க ,கூட்டங்களில் முழங்கிய பின் உண்மையாயை உணர மறுத்து பல்வேறு அவதூறு களை இனி யாவது நிறுத்தட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக