திங்கள், மே 04, 2015

பேச்சுவார்த்தை முக்கிய அம்சங்கள்

தொலைத்தொடர்பு செயலர், மற்றும் CMD அவர்களுடன் வேலைநிறுத்த கோரிக்கை மீது 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை முக்கிய அம்சங்கள்.
·         1) நிதி உதவி:- ஊஸோ மூலம் ரூ1250 கோடி2012-13 க்கு வழங்கப்படும்.13-14,14-15 உட்பட உதவி தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.
·         அலைகற்றை ரூ6700 கோடியில் உரிமகட்டணத்தில் ரூ2000 கோடி சரி செய்யப்பட்டு  மேலும் ரூ800 கோடி வழங்கப்படும்.
·         வருமானவரிபிடித்தம் ரூ7000 கோடியில் கணக்கு சரி பார்க்கப்பட்டு ரூ4000 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
·         ஓய்வூதிய கொடை ரூ2400 கோடி கூடுதலாக செலுத்தியதை திரும்ப வழங்கிட DOE  மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
·         DOTபணிகளுக்கு BSNLக்குரூ400 கோடி வழங்க நடைமுறை வகுக்கப்பட்டு வருகிறது.
·         GPF பட்டுவாடா தொகை பல மாதம் தேக்கநிலையை சுட்டிகாட்டி காலதாமதம் தவிர்க்க கோரப்பட்டது.
·         சொத்துக்களை BSNL பெயருக்கு மாற்றிதருவது 98% முடிந்துள்ளது. BSNLதொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.       கிராமபுற சேவைக்கான ஈடு TRAIஐ மூலம் மட்டுமே வழங்கப்படும்.அரசு திட்டங்கள் எல்லாம் BSNL க்கு வழங்கப்படுகிறது.

2.       இயக்குநர் பதவிகள் நிரப்பிட உயர்முன்னுரிமையில் அரசுடன் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

3.       ஊதிய மாற்றத்தின் பொழுது எல்லாம் ஓய்வூதியம் மாற்றம் இருக்க வேண்டும் என்பதை பொதுத்துறை ஊதிய மாற்றகுழு அமைக்கபடும் பொழுது REFERENCE வழக்கப்படும்.

4.       2007 க்கு முன் /பின் பணிஓய்வு பெற்றவர்களின் 78.2% கிராக்கிப்படி இணைப்பு   அமைசரவைக்கு அனுப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

5.       நேரிடை ஊழியர்களின் 30% ஓய்வுதியகொடை BSNL முடிவு செய்யவேண்டும்.

6.       4ஜி செவை தொடங்கப்படும்.60% : 40% ஓய்வூதிய பங்கு சரி செய்திட,தீர்வு கண்டிட அமைசரவை குறிப்பு அரசுடன் விவாதிக்கப்படும்.31/03/2015 வரை நமது நிருவனம் 20000 பஞ்சாயத்துகளை இணைத்துள்ளது. BBNL 3000பஞ்சாயத்துகளை இணைத்துள்ளது.
7.       BSNL இணைப்பு தற்பொழுது இல்லை என்றாலும்  கடன்,46% பங்குவிற்பனை,ஊழியர் பிரச்சனைகள் என நமது தரப்பு வாதத்தை முன் வைக்கப்பட்டுள்ளது.
பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்றது. BSNL புத்தாக்கம் குறித்த புரிதலுடன் நடைபெற்றுள்ளது. சுமார் ரூ6000 கோடி ஜூன் மாதத்திற்க்குள் வழங்க ஏற்க்கப்பட்டுள்ளது.

இது துவக்கமே.முடிவல்ல! என்பதை புரிந்து ஒற்றுமையை முன்னெடுத்துசெல்ல வேண்டும். நம்மை காத்திட, நிறுவனம் காத்திட விழிப்புடன் செயல்படுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக