சனி, ஜூன் 28, 2014
JCM நிலைக்குழு STANDING COMMITTEE
JCM நிலைக்குழு
STANDING COMMITTEE
26/06/2014 அன்று நடைபெற்ற JCM நிலைக்குழு கூட்டத்தில் பின்வரும் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. நமது சங்கத்தின் சார்பில் தோழர்கள்
இஸ்லாம் மற்றும் C.சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- RM/GRD தோழர்களின் STAGNATION தேக்கநிலை தீர்வு எட்டப்படவில்லை. எனவே இயக்குனர் HR வசம் பிரச்சினை முன்வைக்கப்பட்டுள்ளது.
- போனஸ் வழங்குவது பற்றி அதற்காக அமைக்கப்பட்ட குழுவில் விவாதிக்கப்படும்.
- 01/01/2007 முதல் சம்பள மாற்ற நிலுவை வழங்குவது பற்றி DOTயிடம் இருந்து பதிலேதும் இல்லாததால் மீண்டும் DOTயை அணுகுவது.
- ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA இணைப்பு சம்பந்தமாக DOTக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும்.
- 78.2 சத IDA இணைப்பின் அடிப்படையில் ஊனமுற்ற தோழர்களுக்கு போக்குவரத்துப்படி மாற்றியமைக்கப்படும்.
- போட்டித்தேர்வு எழுதி பெற்ற பதவி உயர்வுகளை POST BASED PROMOTIONS நாலு கட்டப்பதவி உயர்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற கோரிக்கையை அதற்காக நியமிக்கப்பட்ட குழு பரிசீலனை செய்யும்.
- 7100 சம்பளத்தில் இருந்து 6500 சம்பளத்திற்கு இறக்கம் பெற்ற SR.TOA தோழர்கள் அந்தப்பதவி உயர்வை மறுதலித்து அடுத்த பதவி உயர்வை முதற்கட்டப்பதவி உயர்வாகப்பெறலாம். இது TTA/DRIVER மற்றும் LDC/TOA மாறுதல் செய்த தோழர்களுக்கும் பொருந்தும்.
- SC/ST தோழர்களுக்கு தகுதி மதிப்பெண்களில் தளர்வு செய்தல் பற்றி குழுவின் பரிந்துரை எதிர்பார்க்கப்படுகின்றது.
- LTC மற்றும் மருத்துவப்படிகளை திரும்ப தருதல் பற்றி DIRECTOR(HR) உடன் விவாதிக்கப்படும்.
- BSNLலில் நியமனம் பெற்ற தோழர்களுக்கு ஓய்வூதியப்பலனில் BSNL பங்காக அடிப்படைச்சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 2 சதம் பங்களிப்பு தருதல் சம்பந்தமான பரிந்துரை பற்றி முடிவெடுக்கப்படும்.
- TM பயிற்சி முடித்து பதவி உயர்வு பெறாத தோழர்களின் நிலை பற்றி எந்த முடிவும் எட்டப்படவில்லை.
- கருணை அடிப்படை வேலை சம்பந்தமாக மாற்றுத்திட்டங்களை உருவாக்குவது பற்றி சங்கங்களுடன் ஆலோசனை செய்யப்படும்.
வெள்ளி, ஜூன் 27, 2014
செய்திகள்
செய்திகள்
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு JAC நமது அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது அவர்களின் தலைமையில் 25/06/2014 அன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் இரண்டு சந்திப்புக்களை
மீண்டும் சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஓன்று.... BSNL புத்தாக்கம் பற்றி விவாதிக்க புதிய அமைச்சரைச்சந்திப்பது.
இரண்டு... ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA இணைப்பு சம்பந்தமாக DOT செயலரை சந்திப்பது.
NFTE கேரள மாநில மாநாடு சிறப்புடன் நடந்து முடிந்துள்ளது. புதிய மாநிலச்செயலராக தோழியர்.லத்திகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநிலச்செயலர் பொறுப்பிற்கு ஒரு தோழியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. நமது வாழ்த்துக்கள்.
அனைத்து ஊழியர்களுக்கும் மாதந்தோறும் ரூ.200/= பேசும் மதிப்பிலான இலவச SIM வழங்குவதற்கான அறிவிப்பு விரைவில்
வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
போன்மெக்கானிக் இலாக்காத்தேர்வில் SSLC என்னும் கல்வித்தகுதியை தளர்த்தவும், எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கும் முறையை விலக்கவும் கோரி நமது மத்திய சங்கம் BSNL நிர்வாகத்திற்கு கடிதம் அளித்துள்ளது. இதனிடையே தமிழக INTRANETல் வெளியிடப்பட்டிருந்த தேர்வு அறிவிப்பு காணாமல் போயே போச்சு.. காரணம் அறிந்தோர் கூறலாம்.
நடைபெற்ற BSNL BOARD வாரிய கூட்டத்தில் அரசு தரப்பு நியமன இயக்குனர் கலந்து கொள்ளாத காரணத்தினால் JTO/TTA புதிய ஆளெடுப்பு விதிகளுக்கு அனுமதி வழங்குவது பற்றி முடிவேதும் ஏற்படவில்லை.
வியாழன், ஜூன் 26, 2014
பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம்.
தோழர்.மூ.மகேந்திரன்,STS புதுவையில் NFTE சங்கம் கட்டி வளர்த்த்தில் மிக முக்கிய தோழர் ஆவார்.
போஸ் அணி தலமை ஆலோசகர் இருந்தவர், தோழர்
ராஜூவை ஆசானாக ஏற்றவர். 1980 போராட்டங்களில் களம் கண்டவர், கிளை, மாவட்ட பொறுப்புக்களை
ஏற்று செயல்பட்டவர்.விருப்பு வெறுப்பு அற்று மனதில் பட்ட விசயங்களை,ஆலோசனைகளை முன்
வைப்பவர். அனைரிடமும் அன்பாக பழகும் தன்மை, எளிமை என திகழ்ந்தவர். சங்க நிகழ்வுகள்
அனைத்திலும் முன் நிற்பவர். தன்னலம்
மறுப்பு, உதவும் குணம் NFTE சங்க உணர்வுடன் இருந்தவர். அவர் 30/06/2014 பணிஓய்வு பெற உள்ளார்..
மாநிலசங்கத்திற்க்கு ரூ500/ நன்கொடை வழ்ங்கியுள்ளார். அவரது பணி ஓய்வு சிறக்க
வாழ்த்துகிறோம்.
#########
தோழர் K.ராமநாதன்,SDE பணிஓய்வு
கடலூர் மாவட்டத்தில் டெக்னீசியன் ஆக பணி
துவங்கி, நெய்வேலியில் NFTE சங்க கிளை செயலர்,மாவட்ட பொருளர் என சிறப்பாக செயல்பட்டவர். முன்னோடி
தோழர்கள் கணேசன், ரகு,ரெங்கனாதன்,என்.கே.எஸ். என பலருடன் தொழிற்சங்க பணி
புரிந்தவர். தோழர் ஆர்.கே. யை தொடர்ந்து வலியுறுத்தி PI/RSA/TTA க்களுக்கு தகுதித்தேர்வு மூலம் JTO பெற்றிட,
நெய்வேலியில் மாநில கருத்தரங்கம் நடத்தி. PI/RSA/TTA பிரச்சனைகளுக்கு
தீர்வு கண்டவர், தானும் JTO தேர்வு எழுதி பதவி உயர்வு பெற்று
30/06/2014 அன்று பணிஓய்வு பெற உள்ளார்... மாநிலசங்கத்திற்க்கு ரூ1000/ நன்கொடை வழங்கியுள்ளார்,புதுவை,கடலுர்
மாவட்ட சங்கங்களுக்கு ரூ1000/ நன்கொடை வழ்ங்கியுள்ளார்.அவரது பணி ஓய்வு சிறக்க
வாழ்த்துகிறோம்.
########
தோழர்.வெங்கட்ராமன்,Sr.TOA
திருநெல்வேலி மாவட்டத்தில், பணி துவக்கி,
புதுவைக்கு மாற்றலில் வந்தார். நிர்வாக அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றியவர்,
நமது கிளை சங்க தலைவராக தற்பொழுது
இருந்து வரும் தோழர்.வெங்கட்ராமன்
30/06/2014 அன்று பணிஓய்வு பெற உள்ளார்... மாநிலசங்கத்திற்க்கு ரூ500/ நன்கொடை வழங்கியுள்ளார்.
அவரது பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம்.
புதன், ஜூன் 25, 2014
செவ்வாய், ஜூன் 24, 2014
செய்திகள்
செய்திகள்
மத்திய அமைச்சரவையின் பணி நியமனக்குழு APPOINTMENT COMMITTEE, BSNLக்கு புதிய CMDயாக முன்மொழியப்பட்ட தற்போதைய இயக்குனர்(CM) திரு.ஸ்ரீவத்சவா அவர்களின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கவில்லை. எனவே MTNL போலவே BSNL நிறுவனமும்
CMD இல்லாத நிறுவனமாக ஜூன் மாதத்திற்குப்பின்
காட்சி அளிக்கப்போகின்றது.
VIDEOCON தொலைத்தொடர்பு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு
11 சதம் முதல் 38 சதம் வரையிலான
சம்பள உயர்வு தருவதற்கு முடிவு செய்துள்ளது.
வரக்கூடிய BUDGET வரவு செலவு அறிக்கையில் தொலைத்தொடர்பு சேவைகள் மேம்பாட்டிற்காக கூடுதலாக 7000 கோடி நிதி உதவி அளிக்குமாறு தொலைத்தொடர்பு அமைச்சர்
நிதியமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்னும் 5 ஆண்டுகளில் அகன்ற அலைவரிசை BROAD BAND வருமானம் ஏறத்தாழ 8 சதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் தனி இணைப்பில் கிடைக்கும் வருமானம் ARPU குறைந்து வருகின்றது.
போன் மெக்கானிக் இலாக்காத்தேர்வு
போன் மெக்கானிக்
இலாக்காத்தேர்வு
தமிழகத்தில் 2013ம் ஆண்டிற்கான போன்மெக்கானிக் 50 சத காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- தேர்வு நடைபெறும் நாள்: 28/09/2014
- காலை 10 - 12.30 - இரண்டரை மணி நேரம்
- இரண்டு பிரிவுகள் கொண்ட ஒரு தேர்வுத்தாள் - SECTION -I & SECTION-II
- எளிய முறைத்தேர்வு - OBJECTIVE TYPE
- 100 மதிப்பெண்கள்.
- தவறான பதிலுக்கு 25 சத மதிப்பெண் கழிக்கப்படும். NEGATIVE MARKS.
- பொதுப்பிரிவு தோழர்கள் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 37ம் பெற வேண்டும்.
- SC/ST தோழர்கள் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 30ம் பெற வேண்டும்.
- கல்வித்தகுதி: 10ம் வகுப்புத்தேர்ச்சி
- தமிழகத்தில் மொத்தக்காலியிடங்கள்: 1413
- பொதுப்பிரிவு: 1101 - SC-208, ST =104
- சேலத்தில் மட்டும் காலியிடங்கள் இல்லை..
- உடல் ஊனமுற்றோர் காலியிடங்கள்: 79
- வயது: 01/07/2013 அன்று பொதுப்பிரிவு=40 OBC=43 SC=45 ST =45
- தகுதியுள்ளோர்: TMAN/GRD/RM/TSM தோழர்கள்..
தோழர்களே...
போன்மெக்கானிக் தேர்வு நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதுதான். ஆனால் தமிழக நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த தேர்வு அறிவிப்பால் எத்தனை தோழர்கள் பயன் பெறுவார்கள் என்பது பெரும் கேள்விக்குறி. காரணம் RM/GRD பதவிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக்குறைவு.
சேலத்தில் ஒரு சிறந்த மாநில செயற்குழு !
சேலத்தில்
ஒரு சிறந்த மாநில செயற்குழு !
20.06.2014 அன்று சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு, தேசியக்கொடியை தோழியர். லைலா பானு அவர்களும் சங்கக்கொடியை
தோழர். குன்னூர் இராமசாமி அவர்களும் ஏற்றிய பின்னர் துவங்கியது. தோழர். இலட்சம் அவர்கள்
தலைமையேற்றார். தோழர். பாலகுமார், தோழர். சென்னக்கேசவன்
வரவேற்புரையாற்றினர்.
சம்மேளன
அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்கள்
தோழர்கள். சேது, ஜெயபால், தமிழ்மணி ஆகியோர்
உணர்ச்சிப்பெருக்கோடு உரையாற்றினர்.
மாநிலச்செயலர்
தோழர். பட்டாபி அவர்கள் நாட்டின் நிலை, நமது
சங்கம், நிறுவனம் ஆகியன பற்றி ஒரு சிறந்த உறையாற்றினார். கிளை, மாவட்ட மாநாடுகளை காலத்தே நடத்த வேண்டிய அவசியத்தினை எடுத்துரைத்து, நடத்தாத கிளைகள்
மற்றும் மாவட்டங்களை விரைவில் நடத்திட பணித்தார்.
தோழர்.ஆர்.கே., இன்றைய புதிய சூழலில் தொழிலாளர்கள் ஒற்றுமை காக்கவும்,
தங்களைச் சுற்றியுள்ள குறுகிய எல்லைகளைத் தகர்த்திடவும் அறைகூவல் விடுத்தார்.
மிக
குறுகிய கால அவகாசத்தில், 300-க்கும் மேற்பட்ட தோழர்கள் வந்த போதும் சலிக்காமல்
உபசரித்து, மாநில செயற்குழுவினை வெகு சிறப்பாக
நடத்திய சேலம் தோழர்கள் மாநில சங்கம் மற்றும்
அனைத்து மாவட்டங்களின் பாராட்டுக்களை பெற்றனர்.
பாராட்டுக்கள்
தோழர்களே !
வெள்ளி, ஜூன் 13, 2014
சொசைட்டி செய்திகள்
12/06/2014 அன்று நடைபெற்ற முதல் இயக்குனர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
வட்டி விகிதம் 1% குறைத்து 14.5% ஆக உள்ளது.01/07/2014 முதல் அமுலாகும் .
தேர்தலுக்கு முன்னர் 1% குறைக்கப்பட்டது.
ஊழியர்களுக்கு ரூ 417 ம் மாதம்(5 லடசம்) குறைக்கப்படும்.
கல்வி கடன் ரூ 10,000 வழங்கப்படும்.
கட்டடம் கட்டிட்ட நடவடிக்கை துவக்கப்படும்.
தோழர்.விச்சாரே
ஜூன் 12
தோழர்.விச்சாரே
நினைவு தினம்
NFTEன் அகத்தியன் |
உள்ளத்தில் உயர்ந்தவன்..
தோழர்கள்..
எண்ணத்தில் நிறைந்தவன்..
செயலில் அயரா தேனீ ...
சொல்லில் தனி பாணி...
எத்தனையோ எளியோர்களை...
இளநிலை கணக்கு அதிகாரியாக்கிய
எழுத்தர் இனத்தின் தலைவன்...
வீழ்ந்தது.. NFTE.. என்னும் எக்காளம் மாற்றி
எழுந்தது...NFTE ..என இரும்பூதெய்த வைத்த..
வீழாத்தலைவன்..
விச்சாரே.. நினைவு போற்றுவோம்...
இரங்கல்
இரங்கல்
NFTE அகில இந்தியத்தலைவர்
தோழர்.இஸ்லாம் அகமது
அவர்களின் துணைவியார்
திருமதி.ரஷிதா பேகம்,
அவர்கள் உடல்நலக்குறைவால்
இன்று 12/06/2014 இயற்கை எய்தினார்
என்ற செய்தி கேட்டு துயர் கொள்கின்றோம்.
நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.
சமீபத்தில்தான் தோழர்.இஸ்லாம் அவர்களின் புதல்வி
உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
அடுத்தடுத்த சோகங்களை சந்தித்த
தோழர்.இஸ்லாம் அவர்களின் துயரத்தில்
நாமும் பங்கு பெறுவோம்.
புதன், ஜூன் 04, 2014
செய்திகள்
செய்திகள்
DOT காலத்தில் பதவி உயர்வு பெற்று BSNL உருவான 01/10/2000க்குப்பின் தங்களது ஆண்டு உயர்வுத்தொகை தேதிக்கு பதவி உயர்வு பெற விருப்பம் தெரிவித்தவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டு வந்தது.
கடந்த அகில இந்திய JCMல் இது விவாதிக்கப்பட்டு நிர்வாகத்தால் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதனால் உண்டாகும் நிலுவைப்பிடித்தத்தையும் நிறுத்தி வைக்க நிர்வாகம் இசைந்தது. ஆனால் JCM MINUTES கூட்டக்குறிப்பில் இது பற்றிக்குறிப்பிடப்படவில்லை.
எனவே இது பற்றித்தலையிட மத்திய சங்கத்தை
தமிழ் மாநில சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
JTO/TTA தோழர்கள் தொடுத்த வழக்கில் சென்னை CAT வழங்கிய தீர்ப்பை எதிர்த்து BSNL நிர்வாகம் மேல் முறையீடு செய்ய வேண்டும்
என BSNLEU சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
2014 முதல் காலாண்டில் இந்தியா 28 மில்லியனுக்கும் அதிகமான செல்போன் இணைப்புக்களைக் கொடுத்து சாதனை புரிந்துள்ளது. உலகில் வேறெங்கும் 3 மாதங்களில் இவ்வளவு இணைப்புக்கள் கொடுக்கப்பட்டதில்லை. இதே காலத்தில் சீனாவில் 19 மில்லியன் இணைப்புக்களே கொடுக்கப்பட்டுள்ளன.
BSNL வாடிக்கையாளர்கள் INTERNET வலைப்பின்னல் வசதி இல்லாமலே தங்களது செல்போனில் முகநூல் என்னும் facebookஐ பயன்படுத்தும் வசதி தேசத்தின் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும். இதற்காக BSNL U2opia நிறுவனத்துடன்
ஒப்பந்தம் செய்துள்ளது.
ஏப்ரல் 2014ல் பணி நிறைவு பெற வேண்டிய தற்போதைய BSNL CMD திரு.உபாத்யாய் அவர்களின் பதவிக்காலம்
ஜூன் 2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Monday, 2 June 2014
BRPSE
பொதுத்துறை விசாரிப்பு வாரியம்
நலிவடைந்து வரும் பொதுத்துறைகளைக் கண்காணிக்கும்
BRPSE என்னும் பொதுத்துறை மறுசீரமைப்பு வாரியம்
BSNLன் செயல்பாடுகளை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
BSNLன் தற்போதைய நிதி நிலை, அமைப்பு நிலை மற்றும் செயல்பாடு
BSNLன் வருங்காலம் பற்றிய பார்வை
BSNLன் சீரமைப்பு சம்பந்தமாக BRPSE செய்ய வேண்டிய உதவிகள்
ஆகியவை பற்றி DOTயிடம் விசாரித்துள்ளது.
BSNLன் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை குறித்து 21/12/2010லும் 29/11/2012லும் இருமுறை BSNL நிர்வாகத்தை அழைத்து BRPSE விசாரித்தது. தற்போது மூன்றாவது விசாரிப்பாகும்.
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை BSNLஐ விசாரிக்க மட்டுமே செய்யும் பொதுத்துறை மறுசீரமைப்பு வாரியம் தனது பெயரை பொதுத்துறை விசாரிப்பு வாரியம் என மாற்றிக்கொள்வது சாலச்சிறந்தது.
Sunday, 1 June 2014
செய்திகள்
நமது வழக்கமான மிக முக்கிய 9 கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தக்கோரி புதிய அமைச்சரிடம் அனைத்து சங்கங்களின் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஏப்ரல் 1 நம் எல்லோருக்குமே ஏமாற்றமாக இருந்தது. காரணம் எப்போது ஏறும் விலைவாசிப்படி இம்முறை குறைந்ததுதான். தற்போது விலைவாசிப்புள்ளிகள் கூடியுள்ளதால் 01/07/2014 முதல் கிடைக்க வேண்டிய IDA குறைந்த பட்சம் 2 சதத்திற்கு மேல் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
JTO/JAO தேர்வு எழுதுவதற்கான சேவைக்காலத்தை ஏற்கனவே ஒத்துக்கொண்டபடி 5 ஆண்டுகளாக மாற்றி உத்திரவு வழங்கக்கோரி நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
பதவிப்பெயர் மாற்றக்குழு DESIGNATION COMMITTEE ஜூன் இறுதியில் கூடி பதவிகளுக்கான பெயரை இறுதி செய்யலாம்.
BSNL ஊழியர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.200/- அளவில் பேசுவதற்கான இலவச SIM வழங்குவதற்கான உத்திரவு விரைவில் வெளியிடப்படலாம்.
மத்திய அரசைப்போலவே ஓய்வு பெற்ற தோழர்களுக்கு புற நோயாளி சிகிச்சைக்காக பணமாக கொடுப்பது பற்றி BSNL நிர்வாகம் ஆலோசித்து வருகின்றது.
ஞாயிறு, ஜூன் 01, 2014
சேலம் - மாவட்டச்செயற்குழு
சேலம் - மாவட்டச்செயற்குழு
சேலம் மாவட்டச்செயற்குழு |
நாள்: 05-06-2014 - வியாழக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல்
இடம்: கார்காத்த வேளாளர் சமூக மண்டபம் - சேலம்
தலைமை: தோழர். S.சின்னசாமி, மாவட்டத் தலைவர்
-:விவாதப்பொருள்:-
- அமைப்பு நிலை
- RGB தேர்தல் - ஒரு பார்வை
- மாநில செயற்குழு - சேலம்
- ஜபல்பூர் - அகில இந்திய மாநாடு
- கவுன்சில் - ஒர்க்ஸ் கமிட்டிக்கான பிரச்சனைகள்
- ஊழியர் பிரச்சனைகள் - தீர்வு
- புதிய உறுப்பினர் சேர்க்கை
- ஒலிக்கதிர் பொன்விழா - நன்கொடை விபரம்
- பணி நிறைவு பாராட்டு விழா
- கிளை மாநாடு மற்றும் மாவட்ட மாநாடு
- ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள்
- இன்னபிற தலைவர் அனுமதியுடன்
- பங்கேற்பு தோழர்கள் -
வாழ்த்துரை:
தோழர். M.சுப்பிரமணியன்
தொழிற்சங்க தலைவர் - சேலம்
தோழர். P.ராஜா
மாநில துணைத் தலைவர் - சேலம்
தோழர். K.மணி
மாவட்ட செயலர் - தருமபுரி
தோழர். A.சண்முக சுந்தரம்
மாநில உதவி செயலர் - TMTCLU - சேலம்
கருத்துரை:
தோழர். H.நூருல்லா
மாநிலத் தலைவர் - சேலம்
தோழர். P.சென்னகேசவன்
மாநில உதவி செயலர் - வேலூர்
தோழர். P.காமராஜ்
மாவட்ட செயலர் - புதுச்சேரி
சிறப்புரை:
தோழர். R.பட்டாபிராமன்
மாநில செயலர் - சென்னை
கிளைச்செயலர்கள்
மாவட்டச்சங்க நிர்வாகிகள்
JCM உறுப்பினர்கள்
பணிக்குழு உறுப்பினர்கள்
சேமநலநிதி உறுப்பினர்கள்
மற்றும் முன்னணி தோழர், தோழியர்கள்
தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
NFTE மாவட்டச்சங்கம்
சேலம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)