வெள்ளி, ஜனவரி 31, 2014

வெண்கொடி பறக்கும் விருதுநகர்..

வெண்கொடி  பறக்கும் 
விருதுநகர்..

விருதுநகர் மாவட்டச்சங்க நிர்வாகிகள் தேர்வு 
தேர்தல் இன்றி, மோதல் இன்றி
முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் முழுமை பெற்றுள்ளது.
கீழ்க்கண்ட தோழர்கள் மாவட்டச்சங்க நிர்வாகிகளாக 
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


மாவட்டத்தலைவர் : தோழர். தளவாய் பாண்டியன், STS/RYM 

உதவித்தலைவர்கள் : தோழர்கள் :        பிள்ளையார்,TM/RYM 
                                                                        ராகவன்,STS/APK 
                                                                        மாரியப்பன்,TMO/RYM 
                                                                        அய்யாவு, TM/APK 

மாவட்டச்செயலர்  தோழர். சக்கணன், TM/VGR 

உதவிச்செயலர்கள்  தோழர்கள் :      ஜாபர்சாதிக்சேட், STS/SVK  
                                                                    ரமேஷ், SRTOA/VGR 
                                                                    இராம்சேகர்,TM/VGR 
                                                                    செல்வராஜ்,TM/VGR 

மாவட்டப்பொருளர் தோழர்.சுந்தரமகாலிங்கம், STS/RYM 

அமைப்புச்செயலர்கள் தோழர்கள் :       பாஸ்கரன் TM/VGR 
                                                                         மன்னன் மார்த்தாண்டன் TM/RYM 
                                                                         வெங்கடேஷ்வரன் TTA/APK 
                                                                         சுந்தர்ராஜன் TM/SVK 


ஏக போக மீன் பிடிக்க ..
இது குத்தகை பெற்ற குட்டை அல்ல..
சேது சமுத்திரம் ..

என நெஞ்சம் நிமிர்த்திய 
விருதுநகர் தோழர்களுக்கு நமது பாராட்டுக்கள்.
புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்கள்.

செவ்வாய், ஜனவரி 28, 2014

புதுச்சேரி மாவட்ட சேமநல நிதி வாரிய கூட்டம்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES(BSNL)
PUDUCHERRY-SSA
புதுச்சேரி மாவட்ட சேமநல நிதி வாரிய கூட்டம்
புதுச்சேரி மாவட்ட சேமநல நிதி வாரிய கூட்டம் 27/01/2014 அன்று நடை பெற்றது. நமது சங்க சார்பில் தோழர் புஸ்பராஜ்  கலந்து கொண்டார்.
மாநில மட்ட சேமநலவாரிய கூட்ட அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அமுலாக்கம்,கண்ணாடி வாங்கிட ரூ800/=ஒய்வு கால அன்பளிப்பு ரூ2000/=போன்ற முடிவுகள் அமுலாக்கப்பட்டுள்ளன.
 ஊழியர் இறந்தால் அவரது குடும்ப உதவி தொகை ரூ15000 லிருந்து ரூ25000 ஆக உயர்த்திட பரிசீலிக்கப்படும்.
புதிய கணணி/அலைபெசி கடன் வழங்கிட விண்ணப்பம் கோரப்படும்.
மருத்துவ முகாம் நடத்தப்படும்.
7 தகுதிபடைத்த மாணவர்கள் ஸ்காலர்சிப் வழங்கப்படும்.
சேமநல நிதி பயன்கள் ஊழியர்களின்  நேரிடையாக வங்கி கணக்குக்கு அனுப்பிடப்படும்.
25 ஆண்டு பணிக்கான ஒய்வு கால அன்பளிப்பு ரூ750/= லிருந்து ரூ1000/= ஆக உயர்த்தி வழங்க பரிசீலீக்கப்படும்.
சீரிய முறையில் கலந்து ஆலோசனைகளை முன் வைத்த தோழர் புஸ்பராஜ் அவர்களை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது. 
கனராவங்கி கடன் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
சொசைட்டி கடன் ரூ 5 லட்சமாக உயர்த்தி பிப் முதல் வாரத்தில் கிடைக்கும்
ப.காமராஜ்,மாவட்ட செயலர், NFTE-BSNL.


LOCAL COUNCIL MEETING

தலமட்ட குழு கூட்டம் 29/01/2014 அன்று நடைபெற உள்ளது.
நிர்வாகம் 3 பிரச்சனைகளை முன் வைத்துள்ளது.
நமது சங்க சார்பில் தோழர்கள் மஹெஸ்வரன்,ஆறுமுகம் பார்வையாளராக கலந்து கொள்ள உள்ளனர்.
Agenda items with expalnatary notes

1)     Provision of Rent free SIM to the CSC Staff and Power Plant Staff  on Need basis,

The CSC is the front end Of BSNL to cater all needs of subscribers of BSNL service on the spot to their satisfaction. To Improve the Morale and boost their working the rent free SIM  may  be provided to all left out employees.
The power plant employees also need to contact the various out side agencies at the time of Power failure and they are need to work in add hours.For this the  rent free SIM is absolutly necessary  and request the same may be provided for better function.

2)     Supply of Toolskit/Powershoe/Rain coat/ Warm coat to TTA’s

The newly appointed and promoted TTA’s are not supplied with above  till date .
Some of the TTA’s are copleted the period of supply. Kindly take necessary measures to supply the same to eligilble. The Power shoe supplied to TTA’s working at Power Plant and BTS.
3)     Filling up of Supervisory duties of Clerical Cadre.

As per the reply to RTI the CGM office Lr no;-RTIA/1-1(1450)/2013 furnished that the Supervisory duties of Clerical Cadre post available as follows at Puducherry.
SSS-1,SS-5. It also reiterates  that the same may be filled as per the DOT lr no 27-4/87 TE II dated 18/03/1992. Kindly take necessary actions to fill the same at earliest.
4)      Abolition of Sunday duty to TM at RLU/RSU

The earlier GM requested the staff unions on good will to cooperate for few months to perform  indoor duties by out door TM till the remote alarm may be provided. No action to provide the same  till date even after 2 years. More over the out door TMs are also deputed on working days  for the leave period indoor duties eventhough the TTA/Indoor duties  available. The off on working days also created problems in attending the faults and duration. So the practice of outdoor TM for indoor duty may be abolised with alternate  arrangements.




5)     Tenure for the Udhaan/sales/BTS

The staff of Udhaan/sales/BTS were completed 4 years of service .Some of staff had completed 5 years service . Some were retired . So the need to reorganise the same. Willing  Good track record staff may be permitted to continue and new option  for the officals  who are un willing to continue.

6)     Vaccant Qrs  :- In regard to vaccant qrs the same may be alloted to needy staff without  any delay. This will fetch  revenye as well as satisfation from the staff also. More over the vaccant staff qrs may be intimated to EB office to avoid recurring fixed bill for the unused period.This will avoid considerable hardship and loss of money.

7)     Leave reserve to cash counters

The Leave reserve to cash counters   may be called for with suitable incentive  for the period of leave . More over the TM also may be used  on willing basis like other  SSAs. Non viable counters may be manned for a week during the pay dates. More over the cash counters  working at CSC may be shifted to Basement from 0800 to 2000 Hrs to avoid rush standing in front of the CSC.

8)     Rain coat to Left out TM’s
The rain coat  periodisity falls normally every 8 years and restricted to the TMs working at outdoor. The  TM Posted to indoor at the time of issue and later date they were transferred to outdoor  deprived of the benefit for the next 7 years if they will be in service.So the left out TMs  may be supplied with rain coat at earliest.

9)     Scrapping of unused/unwanted items
Kindly speedup the available unused/unwanted scrap for selling , This fetch revenue and aswell as protected from  slow  un noticed theft.

10)  Inclusion of staffside members to womencell.
The women cell may be reorgonised with members of recogonised non executive unions to give fare and confidence among staff side.

பணிஓய்வு

பணிஓய்வு  சிறக்கட்டும்
 புதுவை தோழர்.காத்தமுத்து,டெலிகாம் மெக்கானிக்31/01/2014 முதல் பணிஓய்வு பெறுகிறார். 28/12/83 மஸ்தூர், 02/04/94 டெலிகாம் மெக்கானிக், காலம் முதல் பணிஓய்வு பெறும் வரை நம்து சங்க பிடிப்புடன் செயல்பட்டவர். அனைத்து, மாநில, அ இ மநாடுகளில் கலந்துகொண்டவர்.கிளை சங்க நிர்வாகியாக செயல்பட்டவர்.
அவரதுபணிஓய்வு காலம் சிறக்க வாழ்த்துகிறோம்.
 .பணிஓய்வுக்கு முன் மாவட்ட ச்ங்க அலுவலகத்திற்க்கு ரூ2000 மதிப்புள்ள நாற்காலி மற்றும் மாநில சங்கத்திற்க்கு ரூ500/= நன்கொடை வழங்கியுள்ளார். அவருக்கு நமது நன்றிகள்.


news

SC/ST  தோழர்களின் நலனுக்கான 
 பாராளுமன்றக்குழு 

SC/ST தோழர்களின் நலனுக்கான பாராளுமன்றக்குழு  அவர்களது நீண்ட நாள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு குறிப்பு அனுப்பியுள்ளது. 32 பிரச்சினைகள் அதில் இடம் பெற்றுள்ளன . அதில் இரண்டு மிக முக்கிய பிரச்சினைகள் பற்றி நமது சங்கக்கருத்தினை பாரளுமன்றக்குழுவிற்கு தெரிவித்திடக்கோரி  நமது மாநிலச்செயலர் மத்திய சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மாநிலச்செயலர் எழுப்பியுள்ள கோரிக்கைகள் 
NEPP பதவி உயர்வில் சலுகை 

SC/ST ஊழியர்களுக்கு நாலு கட்டப்பதவி உயர்வில் சலுகைகள் அளிக்க வேண்டும் என்பது நமது நீண்ட நாள் கோரிக்கை. உச்சநீதி மன்றம் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அளித்த பல்வேறு தீர்ப்புகளை காரணம் காட்டி BSNLலில்  நாலு கட்டப்பதவி உயர்வில் SC/ST தோழர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என நிர்வாகம் தொடர்ந்து கூறி வருகின்றது.
இது ஏற்புடையதல்ல. இட ஒதுக்கீடு அளிக்க இயலாவிட்டாலும் நாலுகட்டப்பதவி உயர்வில் அவர்களுக்கு சலுகைகள் அளிக்கலாம். DOTயில் இருந்து BSNLக்கு வந்த ஊழியர்களுக்கு முதல் கட்டப்பதவி உயர்வு 4 ஆண்டுகளிலும்,  இரண்டாம் கட்டப்பதவி உயர்வு 7 ஆண்டுகளிலும் சலுகை முறையில் வழங்கப்படுவது போல் SC/ST  உழியர்களுக்கும் நாலு கட்டப்பதவி உயர்வில் ஓராண்டு சலுகை அளிக்கலாம். வணிகத்துறையில் இது போல் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கருணை அடிப்படை வேலையில் சலுகை

தற்போது BSNLலில் கருணை அடிப்படை வேலைக்கு மதிப்பெண் முறை பின்பற்றப்படுகின்றது. 55 மதிப்பெண் பெற்ற விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பரிசீலனைக்குப்பின் 55 மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பங்கள் கூட நிராகரிக்கப்படுகின்றன. இது நியாயமான  நடைமுறையன்று. இந்த மதிப்பெண் வழங்கும் முறையில் SC/ST தோழர்களுக்கு சலுகைகள் BSNLலில் வழங்கப்படவில்லை. இது குறித்து JCM தேசியக்குழுக்கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது.  உடனடியாக BSNLலில் கருணை அடிப்படை பணிக்கான தேர்வு முறைகளில் SC/ST  ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். 

உரிய நேரத்தில் மேற்கண்ட முக்கியப்பிரச்சினைகளை எடுத்துரைத்த மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்களுக்கு நமது நன்றிகள்.
கனரா வங்கிக்கடன் நீட்டிப்பு 

BSNL  ஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள்  வழங்குவதற்காக 
கனரா வங்கியுடன் 27/01/2014  அன்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

01/12/2013 முதல் 31/12/2014 வரை உடன்பாடு அமுலில் இருக்கும்.

தனிநபர் கடன் அதிகபட்சம் 10 லட்சம் வழங்கப்படும்.
தற்போதைய தனிநபர்கடன் வட்டி விகிதம் 12.95 சதம் ஆகும்.

வீட்டுக்கடன் 75 லட்சம் வரை வழங்கப்படும்.
வட்டி விகிதம் 10.2 சதம் ஆகும்.

சனி, ஜனவரி 18, 2014

அஞ்சலி







அஞ்சலி 





நமது அகில இந்திய சங்கத்தின் பொருளாளர் தோழர்  P L தோவா அவர்கள் இன்று 17-1-2014 இயற்கை எய்தினார் . அன்னாரின் மறைவிற்கு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம் 

புதன், ஜனவரி 08, 2014

OLIKKATHIR PONVIZHA 06-01-2014


 


 

 


 























QUPTHA -DEATH ANNIVERSARY

















கடலூர் ஒலிக்கதிர் பொன் விழா 06/01/2014

கடலூர் ஒலிக்கதிர் பொன் விழா 06/01/2014 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.50 ஆண்டு ஒலிக்கதிரின் வழிதடத்தை,ஒலிக்கதிரின் சிந்தனையை, மாண்பை விளக்கும் பல வண்ண தட்டிகள்,அதன் வரிகள் காலத்தை தாண்டி மனதை வருடும். அழகு மிளிர,கொள்ளை கொள்ளும் ஏற்பாடுகள், மாவட்டத்தில் எல்லையில்லா துன்பங்கள்,பெற்றிடுனும் ,சிலர் ஒதுங்கிட,தடுத்திட நிதி வழங்க மறுத்திட, என சோதனை வந்த பொழுதும் கண் துஞ்சாது பணி புரிந்து சோர்வில்லா இளைஞர் பட்டாளம் உழைத்திட வெற்றி பெற்ற ஒலிக்கதிர் பொன் விழா காலத்தை விஞ்சி நினைவுகள் நிற்க்கும்.
அணி பாரது, சங்க பேதம் மின்றி அனைவர்க்கும் பதாகை, விண்ணதிர சங்க கொடியேற்றம், தோழர் ஜெயபால்  குப்தா நினைவு அஞ்சலி,
தோழர் ஆர்.கே துவக்க உரை,மாநிலசெயலர் சிறிய,சீரிய உரை சிறப்புரை என தலைவர்களின் அணிவகுப்பு, சிறப்பு சேர்த்த அவர் தம் உரை, நிஜ நாடகம், கவிஅரங்கு எதிர் பார்ப்பை விஞ்சிய, வரவேற்புகுழு திணறும் அளவு தோழர்கள் பங்கேற்ப்பு, தோழர் தா.பாண்டியன் காலை முதல் கண்டு ரசித்து மாலை நிறைவு பேருரை நிகழ்த்திய பாங்கு என சிறப்புகளை பட்டியல் இட்டாலும்  நினைவை அகலாத கடலூர் ஒலிக்கதிர் பொன் விழா காலத்தை விஞ்சி நிற்கும்.
சின்னபையன் என எகடியம் செய்து ,விளித்தாலும் சின்னபையன் நான் அல்ல சீர்மிகும் ,விஸ்வரூபம் காட்டிய வாமனன், வாமனன் என நிரூபித்த எனது அன்புதோழன் ஸ்ரீதர் ,மற்றும் தோழர்களுக்கு நன்றி.









 


 
 


புதுவையில் இருந்து 8 தோழியர்கள் உட்பட்90 பேர் கலந்துகொண்டனர்.அனைவர்க்கும் நமது நன்றிகள்.