புதன், பிப்ரவரி 11, 2015

மாநில செயற்குழு கூட்டம் 10/02/2015

மாநில செயற்குழு கூட்டம் 10/02/2015
தோழர் லட்சம் தலைமை ஏற்றிட மாநில செயற்குழு கூட்டம் 10/02/2015 சிறப்புமிக்க ஏற்பாட்டில் செய்யப்பட்டு இருந்தது. மாநில அலுவலக மாவட்டசங்க தோழியர்கள் தேசியக்கொடி, சம்மேளனக்கொடி ஆகியவற்றை ஏற்றினர்.
சேலத்தில் சேர்வோம்,சென்னையில் அராஜகம் செயவொம் என திட்டமிட்டு, மியுசிய காவலர் அறைக்கு அருகில் அமர்ந்து ரிமொட் ஆட்டுவிக்க, தமிழக மாநில சங்க நலன் காத்திட மறந்து சென்னைக்கு நேர்ந்துவிட்ட சிலமாநில சங்க நிர்வாகிகள் மாநில செயற்குழு கூட்டத்தை சீர் குலைத்தனர். பாரதி வரியில் “ ஜவருக்கு நெஞ்சும், அரண்மனைக்கு வயிரும்என்பது போல செயல்பட்டனர். தலைமை பொது மேலாளரிடமும் , AITUC பொதுசெயலரிடமும் உச்சகட்ட அநாரிகமாக,சங்க மாண்புகளை குழி தோண்டி புதைத்து நடந்தனர். தலைமை பொது மேலாளர் உரை ஆற்ற முடியாமல் சென்ற அவலம் நிறைவேறியது. மாநில சங்கத்தை தங்களீடம் அடி பணிய செய்ய அராஜகத்தை அரங்கற்றினர். இந்த கட்டளையை நிறைவேற்ற  சென்னையில் இரவல் அராஜகவாதிகளை அதன் தலைமையிடமிருந்து பெற்று கூலிக்கு மாரடித்தனர்.சென்னை தலைமை நடத்திய இதேபாணி தமிழகத்தில் அவர் வரும் கூட்டங்களுக்கும்  திரும்ப நடக்கும். இரவு, பகல்,இரவு என தொடரும்.
அராஜகம் ஒரு வழிபாதையல்ல என்பதை சென்னைக்கு இரவல் போன மாநில சங்க நிர்வாகிகள் புரிந்துகொள்ளவேண்டும்.
அறிவார்ந்த மாநிலசெயலர் என மதி அற்றவர்கள் திட்டினாலும் அது உண்மை.
 எல்லையற்ற சகிப்புதன்மையை எளிதாக எடுத்துகொள்ளக்கூடாது.

-இன்னும் வரும்-

17/02/2015- dharna anti methane


சனி, பிப்ரவரி 07, 2015

மீத்தேன் எதிர்ப்பு போராட்டம்

பசுமையை பாழாக்கும் 
மக்கள் வாழ்வை வீணாக்கும் 
மீத்தேன் எரிவாயுத்திட்டத்தை  எதிர்த்து 

NFTE - TMTCLU 
சார்பாக  
18/02/2015 அன்று 
கோவில்களின் நகரம் குடைந்தையில் 
தோழர்.ஆர்.கே., 
தலைமையில் 
ஒரு நாள் அடையாள 
எதிர்ப்பு தர்ணா 

 

சிறப்புரை


தோழர். மூர்த்தி 
AITUC தமிழ்மாநில பொதுச்செயலர்

தோழர். சுப்பராயன் 
AITUC தமிழ்மாநிலத்தலைவர் 

மற்றும் தலைவர்கள்...

தோழர்களே...
சோறுடைத்த சோழ மண்டலம் 
பாழடைந்து போகலாமா?

காவிரியில் குளித்த உழவன் 
கண்ணீரில் குளிக்கலாமா?

ஆள்வோரின் கண்மூடித்தனத்தால் 
வயல்வெளிகள்  மண்மூடிப் போகலாமா?

போராடும் மக்களுக்கு நாம் 
பேராதரவு தர வேண்டாமா?

கொடுமைகள் கண்டு கொதித்திடுவோம்..
குடைந்தையில் உணர்வாய் கூடிடுவோம்..

வாரீர்.. தோழர்களே...

மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் 18/02/215 கும்பகோணம்

மீத்தேன்  எதிர்ப்பு  போராட்டம் 18/02/215
கும்பகோணம் 


வெள்ளி, பிப்ரவரி 06, 2015

அஞ்சலி




NFTE  
திருச்சி மாவட்டத்தலைவர் 
அன்புத்தோழர் 
S .சுந்தரவேல் 
அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற 
கொடிய செய்தி கேட்டு 
மனம் மிக வருந்துகின்றோம்.

திருச்சி NFTE  இயக்கத்தின் 
முன்னணித் தளபதியாய்  விளங்கியவர்.
அனைவரிடமும் அன்புடன் பழகுபவர்.
அவரது மறைவிற்கு 
நமது மனங்கசிந்த 
அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.

Thursday, 5 February 2015

அஞ்சலி 

FNTO சங்கத்தின் மூத்த தலைவரும் 
FNTO லைன்ஸ்டாப்  சங்கத்தின் முன்னாள் மாநிலச்செயலரும் 
முன்னாள் மாநில கூட்டு ஆலோசனைக்குழு உறுப்பினரும் 
கூட்டுப்போராட்டங்களில் நம்மோடு கரம் கோர்த்து நின்றவரும் 
தோழர்கள்.குப்தா,ஜெகன் ஆகியோரோடு அன்பு செலுத்தியவருமான 

அருமைத்தோழர்.
A.S. செய்யது அலி 

அவர்கள் உடல்நலக்குறைவால் 
நேற்று 05/02/2015 இயற்கை எய்தினார்.

நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
நல்லடக்கம் மதுரையில் இன்று 06/02/2015 நடைபெறும்.


சனி, ஜனவரி 31, 2015

STR NEW BRANCH AT CUDALLORE

புதிய  கிளை  துவக்கவிழா 

கடலூர்  புதுவை பராமரிப்பு  பகுதி  இணைந்த  புதிய  கிளை  30/01/2015 அன்று  தோழர்  பாலகுரு  தலைமையில்  தோழர்  சௌந்தராஜன்  கொடி ஏற்ற 
விழா துவங்கியது .தோழர்  சண்முகராஜ்  வரவேற்ப்புரை ,அஞ்சலி உரை க்கு பின்னர்  தோழர் ஸ்ரீ தர்  கடலூர்  மாவட்ட செயலர்  துவக்க உரை  நிகழ்த்தினார் .தோழர்கள்   தமிழ்மணி ,காமராஜ் ,ரங்கராஜ் மோகன்குமார் ,சுந்தரபாபு , அன்பழகன் மாவட்டசெயலர்  உரைக்குபின்னர்  புதிய  நிர்வாகிகள்  தேர்ந்தடுக்கப்பட்டனர் .
தலைவராக  தோழர்  பாலகுரு,செயலராக ராஜேந்திரன் ,பொருளாராக கனகராஜ்  நிர்வாகிகள்  தேர்ந்தடுக்கப்பட்டனர் . வாழ்த்துக்கள் 

CUDDALLORE FORUM CONVENTION