செவ்வாய், ஜூலை 08, 2014

dharna


செய்திகள்

செய்திகள் 

IDA உத்திரவு
01/07/2014 முதல் 2.9 சதம் உயர்ந்துள்ள IDA உயர்விற்கான உத்திரவு DPE இலாக்காவால் 03/07/2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
BSNL உத்திரவு விரைவில் வெளிவரும்.

தர்ம தரிசனம் 
ஊழியர்கள் பிரச்சினை தீர்விற்காக வாரந்தோறும் புதன்கிழமை  
02.30 முதல் 04.30 வரை மாநிலம் மற்றும் மாவட்ட மட்டங்களில்  தொழிற்சங்கப்பிரதிநிதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சந்திக்க வேண்டும் என மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. காலம் காலமாக நடந்து வந்த ஒரு நடைமுறையைக்கூட அதிகாரிகளுக்கு 
தற்போது நினைவு படுத்த வேண்டியுள்ளது. 

ஒப்பந்த ஊழியர்கள் 
ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தினத்தில் சம்பளப்பட்டுவாடா மற்றும் உரிய சலுகைகளை தவறாமல் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு வழக்கம்போல் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்களும் வழக்கம் போல் இல்லாமல் இருந்தால் சரி.

அஞ்சலி 
திருச்சி மாவட்டத்தின் மூத்த தோழர்.வெங்கடேசன் அவர்கள் மறைவிற்கு நமது இதயங்கசிந்த அஞ்சலியை உரித்தாக்குகின்றோம். 
தல விருட்சங்கள் தலை சாயும் காலமிது.. 
நாம் வேர்களாய்.. விழுதுகளாய் நின்று இயக்கம் காப்போம்..

Sunday, 6 July 2014

எல்லோருக்கும்  இலவச SIM

அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு JAC எழுப்பிய கோரிக்கையின் அடிப்படையில் அனைத்து BSNL ஊழியர்களுக்கும் இலவச SIM வழங்க BSNL நிர்வாகம் 01/07/2014 அன்று உத்திரவிட்டுள்ளது. அதன்படி 

  • மாதந்தோறும் ரூ.200/= அளவிற்கு TALK TIME பேசலாம்.
  • SSA அளவில் CUG வசதி அளிக்கப்படும்.
  • STD வசதி கிடையாது.
  • தனியார் தொலைபேசிகளை தொடர்பு கொள்ள முடியாது.
  • SIM CARD விலையை ஊழியர்களே செலுத்த வேண்டும்.
  • இந்த வசதி BSNL சேவை தரும் பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். MTNL சேவை தரும் பகுதிகளில் கிட்டாது.

சனி, ஜூலை 05, 2014

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

NFTE-PUDUCHERRY-SSA
பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

நாள்08/07/2014 மாலை0530 மணி பொதுமேலாளர் அலுவலகம்


மாவட்ட நிர்வாகமே!

v சூழல் மாற்றலை காலதாமதம் செய்யாதே!

v விதிவிலக்கு என்றபெயரில் சலுகை வழங்காதே!

v 4 வருடம் முடித்த அனவருக்கும் புதிய மாற்றல் கொள்கைஅடிப்படையில் மாற்றல் வழங்கு!

v விதிகளின்படி மாற்றல் வழங்கு! 

v விருப்ப மாற்றல்களில் பாரபட்சம் காட்டாதே1

மாற்றல் பிரச்சனையில் தொடரும் காலதாமதத்தை தவிர்த்திட போராடுவோம்!!அனைவரும் கலந்துகொண்டு வெற்றிகரமாக்கிடவேண்டுகிறோம்,
. ப காமராஜ்,மாவட்டசெயலர்,


வெள்ளி, ஜூலை 04, 2014

NATIONAL JCM ISSUES




M தேசியக்குழு
NFTE எழுப்பியுள்ள பிரச்சினைகள்

ஆகஸ்ட் 2014ல் நடைபெறவுள்ள 
JCM தேசியக்குழுவில் விவாதிப்பதற்காக 
NFTE சார்பில் கீழ்க்கண்ட பிரச்சினைகள் 
JCM செயலரிடம் கொடுக்கப்பட்டுள்ளன.

  • சிரமமிக்க பகுதிகளுக்கு மாற்றல் செய்யப்பட்ட தோழர்கள் ஓராண்டு அல்லது ஈராண்டு சேவை முடித்தவுடன் தங்களது சொந்தப்பகுதிக்கு மாற்றல் செய்யப்படவேண்டும்" என மாற்றல் கொள்கை TRANSFER POLICY திருத்தப்பட வேண்டும்.
  • BSNL நன்னடத்தை விதிகள் 55(I ) மற்றும் 55(II)(b) ஆகியவை DOTயில் இருந்து BSNLலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தோழர்களுக்குப் பொருந்தாது என்ற விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
  • 2007லில் இருந்து ஊதியம் உயர்த்தப்பட்டதால் தற்போது பிடிக்கப்படும் ஆயுள் காப்பீட்டுச்சந்தா உயர்த்தப்பட்டு ஆயுள் காப்பீட்டுத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும். 
  • தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியைக்கணக்கில் கொண்டு TM/TTA/SR.TOA பதவிகளில் இரண்டாம் சீரமைப்பு SECOND RESTRUCTURING அமுல்படுத்தப்பட வேண்டும்.
  • இன்றைய தேவைகளைக் கணக்கில் கொண்டு சகல கலா திறமை கொண்ட பதவிகள் MULTI TASKING STAFF உருவாக்கப்பட வேண்டும். 
  • விடுப்பை காசாக்கும் LEAVE ENCASHMENT திட்டம் LICக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற திட்டங்கள் ஆயுள் காப்பீடு இணைந்ததாக மற்ற பொதுத்துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. எனவே BSNL ஊழியர்களுக்கும் ரூ.1 லட்சத்திற்கும் குறையாத அளவில் ஆயுள் காப்பீடு இணைந்த திட்டமாக மாற்றப்படவேண்டும்.
  • தேசிய மொழி அதிகாரிகள் தேவையின் அடிப்படையில் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்படவேண்டும்.
  • TM/TTA/JTO/JAO போன்ற பதவிகளுக்கான இலாக்காத்தேர்வில் தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் NEGATIVE MARKS வழங்கப்படுகின்றன. இத்தகைய எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கும் முறை நீக்கப்பட வேண்டும்.

FREE SIM to ALL BSNL EMPLOYEES


புதன், ஜூலை 02, 2014

20/06/2014 அன்று நடைபெற்ற மாநில செயற்குழு கூட்ட ஒர்க்ஸ் கமிட்டி குறித்த கருத்தரங்கில் ஒர்க்ஸ் கமிட்டி செயல்பாடு, முடிவுகள் அமுலாக்கம், மாதம் தோறும் கூட்டம், முடிவுகள் வெளியீடு குறித்து விவாதிக்கப்பட்டு
மேம்படுத்த நிர்வாகத்தை கோரி தீர்மானம் எடுக்கப்பட்டது.

மாநில நிர்வாகத்தை சந்தித்து 01/07/2014 ல் மாநிலசெயலர் விவாதித்த அடிப்படையில் மாநில நிர்வாகம் உத்திரவு வெளியிட்டுள்ளது.

"மாநிலச் செயலர் தோழர் பட்டாபி, மாநில உதவிச் செயலர் தோழர் முரளி,CGM அலுவலக மாவட்ட செயலர் தோழர் மனோஜ் ஆகியோர் 1-07-2014 அன்று CGM அவர்களை சந்தித்தனர்.
சந்திப்பின் போது மாவட்டங்களில் காலத்தே ஒர்க்ஸ் கமிட்டி நடத்தவும், ஒர்க்ஸ் கமிட்டி பயனுள்ள மன்றமாக மாற்ற வேண்டிய அவசியத்தையும்,  ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனை 
For orders click here Works Commitee order by CGM, "

மாநிலச்செயலர்... CGM உடன் ஓர் சந்திப்பு...

மாநிலச் செயலர் தோழர் பட்டாபி, 
மாநில உதவிச் செயலர் தோழர் முரளி,
CGM அலுவலக மாவட்ட செயலர் தோழர் மனோஜ் 
ஆகியோர் 01-07-2014 அன்று CGM அவர்களை சந்தித்தனர்.

சந்திப்பின் போது மாவட்டங்களில் காலத்தே ஒர்க்ஸ் கமிட்டி நடத்தவும், ஒர்க்ஸ் கமிட்டி பயனுள்ள மன்றமாக மாற்ற வேண்டிய அவசியத்தையும்,  ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனை, மாவட்ட மட்டங்களில் அமுலாக்க படாத தொழிலாளர் நலச் சட்டம் குறித்தும் அதனை முன்னிறுத்தி 
ஜூலை 17 அன்று நடைபெறும் தர்ணா போராட்டம் குறித்தும், 
GPF நிதி ஒதுக்கீடு தாமதம் மற்றும் போதிய நிதி ஒதுக்குதல் 
குறித்த அழ்ந்த கருத்துக்களை CGM முன் வைத்தனர்.

ஒர்க்ஸ் கமிட்டி, ஒப்பந்த ழியர் நல உத்தரவு அமுலாக்கம் 
குறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு 
அமுல்படுத்தும் வழிகாட்டும் கடிதம் எழுதிடவும், 
ஜூலை மாத GPF நிதி ஒதுக்கீட்டில் ஜூன் மாத பற்றாக்குறைக்கு 
கூடுதல் நிதி பெற்றுத்தரவும் CGM உறுதியளித்துள்ளார்.