ஞாயிறு, ஜூன் 01, 2014

சேலம் - மாவட்டச்செயற்குழு

சேலம் - மாவட்டச்செயற்குழு 
சேலம்  
மாவட்டச்செயற்குழு 


நாள்: 05-06-2014 - வியாழக்கிழமை 
நேரம்: காலை  10 மணி முதல்  
இடம்: கார்காத்த வேளாளர் சமூக மண்டபம் - சேலம்

தலைமை: தோழர். S.சின்னசாமி, மாவட்டத் தலைவர் 

-:விவாதப்பொருள்:-

  • அமைப்பு நிலை 
  • RGB தேர்தல் - ஒரு பார்வை 
  • மாநில செயற்குழு - சேலம் 
  • ஜபல்பூர் - அகில இந்திய மாநாடு 
  • கவுன்சில் - ஒர்க்ஸ் கமிட்டிக்கான பிரச்சனைகள் 
  • ஊழியர் பிரச்சனைகள் - தீர்வு 
  • புதிய உறுப்பினர் சேர்க்கை 
  • ஒலிக்கதிர் பொன்விழா - நன்கொடை விபரம்
  • பணி நிறைவு பாராட்டு விழா 
  • கிளை மாநாடு மற்றும் மாவட்ட மாநாடு 
  • ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் 
  • இன்னபிற தலைவர் அனுமதியுடன்  

- பங்கேற்பு தோழர்கள் -

வாழ்த்துரை: 
  
தோழர்.  M.சுப்பிரமணியன்  
தொழிற்சங்க தலைவர் - சேலம்

  தோழர்.  P.ராஜா   
மாநில துணைத் தலைவர் - சேலம்

தோழர்.  K.மணி  
மாவட்ட செயலர் - தருமபுரி 

தோழர்.  A.சண்முக சுந்தரம்   
மாநில உதவி செயலர்  - TMTCLU - சேலம்

கருத்துரை:  
  
தோழர்.  H.நூருல்லா  
மாநிலத் தலைவர் - சேலம்

  தோழர்.  P.சென்னகேசவன்   
மாநில உதவி செயலர் - வேலூர் 

தோழர்.  P.காமராஜ் 
மாவட்ட செயலர் - புதுச்சேரி 

  சிறப்புரை:  
  
தோழர்.  R.பட்டாபிராமன்   
மாநில செயலர்  - சென்னை 

  கிளைச்செயலர்கள் 
மாவட்டச்சங்க நிர்வாகிகள் 
JCM உறுப்பினர்கள் 
பணிக்குழு உறுப்பினர்கள் 
சேமநலநிதி உறுப்பினர்கள்
மற்றும் முன்னணி தோழர், தோழியர்கள்   
தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

தோழமையுடன்... 

NFTE  மாவட்டச்சங்கம் 
சேலம்.

சனி, மே 31, 2014

தோழர் செல்வம்பணி ஓய்வு பாராட்டு விழா



கடலூரில்  NFTE மாவட்ட தலைவர்/TMTCLU மாநில செயலர் தோழர் செல்வம் மற்றும் தோழியர் ரேவதி ஆகியோரின் பணி ஓய்வு பாராட்டு விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. விழாவிற்கு தோழர்கள் சிரில் அறக்கட்டளை பொறுப்பாளர் சீனிவாசன் மற்றும் துரை தலைமை வகித்தனர்.தோழர் ஸ்ரீதர் மாவட்டசெயலர் முன்னிலை வகித்தார்.  தோழர்  ரவிச்சந்திரன்வரவேற்ப்புரைநிகழ்த்தினார்.தோழர்கள் தமிழ்மணி,கடலூர் ரகு,சம்மேளன செயலர் ஜெயராமன்,மாநில அமைப்பு செயலர் அன்பழகன்,DGM (F),DGM (CFA ),DGM (CM ),BSNLEU தலைவர்கள்,மதுரை சேது,TMTCLU மாநில பொருளர் குடந்தை விஜய்
பாண்டி காமராஜ்,மாநிலதுணைசெயலர் கோவை ராபட்ஸ்,மாநிலசெயலர்தோழர்பட்டாபி,
அன்புத்தலைவர்R.Kஆகியோர்கள்கலந்து
கொண்டனர்.நமது மாவட்டத்திலிருந்து தோழர்கள் ஆரூர்சிவா, கூடூர் குணா,TMTCLU மாவட்ட தலைவர் தோழர் நாடி, TMTCLU தஞ்சை பகுதி தோழர் பொம்மையன்,தோழர் நடராஜன் ஆகியோர்கள்கலந்துகொண்டனர்.கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட தோழர்களும் 
தோழியர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர் ,,,







சனி, மே 24, 2014

அகில இந்திய மாநாடு

அகில இந்திய  மாநாடு

அகில இந்திய  மாநாடு வரும்  அக்டோபர் 10 முதல் 

13 வரை  ஜபல்பூரில்  நடைபெற  உள்ளது .


வெள்ளி, மே 23, 2014

நமது NFTE கூட்டணி..மகத்தான வெற்றி

சென்னைக்கூட்டுறவு சங்க இயக்குனர்கள் தேர்தல்...
நமது NFTE கூட்டணி...வரலாற்று சிறப்புமிக்க...
 ...! வெற்றி...!வெற்றி...!         

20-05-2014 செவ்வாய் கிழமை அன்று  நடைபெற்ற சென்னைக்கூட்டுறவு சங்க 
இயக்குனர்கள் தேர்தலில் 21 இடங்களையும் 
நமது NFTE  தலைமையிலான 
அணி வெற்றி பெற்றுள்ளது.

இயக்குனர்கள் தேர்தல் முடிவுகள்

தமிழ்நாடு

மொத்த வாக்குகள் : 127
மொத்த இடங்கள் : 10
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 10

K. அசோகன், சென்னை : 70
A. ஞானசேகர், திருச்சி : 67
A. குல்சார் அஹமது, ஈரோடு : 69
P. இளங்கோவன், மதுரை : 70
V. கிருஷ்ணமூர்த்தி, கடலூர் : 69
V. நாகராஜா, பெங்களூர் : 70
S. பார்த்திபன், சென்னை : 70
R. ராஜேந்திரன், தஞ்சாவூர் : 71
P. சண்முகம், திருநெல்வேலி : 68
S. வீரராகவன், வேலூர் : 75

சென்னை தொலைபேசி 

மொத்த வாக்குகள் : 68
மொத்த இடங்கள் : 8
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 8

V. பாபு : 40
V. பாஸ்கர் : 39
T.V. பீமாராவ் : 50
P. D. சந்திரபாபு : 41
K. சிதம்பரம்பிள்ளை : 41
A. கிருஷ்ணமூர்த்தி : 39
K. ரகுநாதன் : 41
R. திரிசங்கு : 42

பொது பிரிவு ( மகளிர் இட ஒதுக்கீடு) 

மொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )
மொத்த இடங்கள் : 2
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 2

பிரேமா ஜீவானந்தம், திருச்சி : 106
M. செல்வி, சென்னை : 114


பொது பிரிவு ( SC / ST இட ஒதுக்கீடு) 




மொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )
மொத்த இடங்கள் : 1
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 1

G. ராஜ்குமார், வேலூர் : 107

வெற்றி பெற்ற 21 இயக்குனர்கள் கூடி
புதிய நிர்வாகிகளை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.

தலைவர் : தோழர். S. வீரராகவன் 

      துணை தலைவர் : தோழர். K. ரகுநாதன் 

பொருளர் : தோழர். R. திரிசங்கு 

நிர்வாகிகள் தேர்வுக்கு பின் நடைபெற்ற 

இயக்குனர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள். 

  • வட்டி உடனடியாக 1% சதவீதம் குறைக்கப்படும்.
  • உறுப்பினர்கள் நலன் கருதி பெங்களூர்-ல் ஒரு கிளை துவக்கப்படும்.
  • கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளுக்கு உதவிட 12 கமிட்டிகள் அமைக்கப்படும். 
  • மத்திய பதிவாளரின் ஒப்புதலுக்குப்பின் இந்த கமிட்டி அமுல்படுத்தப்படும்.          

வெற்றி பெற்ற இயக்குனர்களுக்கும் மற்றும் 
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் 
நமது NFTE-BSNL புதுவை  மாவட்ட சங்கத்தின் 
நல் வாழ்த்துக்கள்......................!

செய்திகள்

செய்திகள் 

JTO மற்றும் TTA பதவிகளுக்கான புதிய ஆளெடுப்பு விதிகள் 
BSNL  வாரிய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்தி மொழிபெயர்ப்பாளர்களாக தற்காலிகப்பதவி உயர்வில் 
பணி புரியும் தோழர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பது பற்றி 
BSNL வாரிய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
BSNL BOARD  வாரிய கூட்டம் ஜுன் 6ந்தேதி நடைபெறும்.

போன் மெக்கானிக் இலாக்கா தேர்வை உடனடியாக நடத்தக்கோரி நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியதன் அடிப்படையில் விரைவில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டு BSNLன் வருமானம் 2.5 சதம் உயர்ந்துள்ளதாகவும், 
செல் வருமானம் 5 சதம் உயர்ந்துள்ளதாகவும்  
புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 

மாதம் ரூ.2000/=க்கு மேல் தொலைபேசிக்கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி பில்களை நேரடியாக 
அவர்களது இருப்பிடத்திற்கு கொண்டுபோய் கொடுக்கவும், 
காசோலையை நேரடியாக பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யுமாறு 
மாநில CGMகளை CMD கேட்டுக்கொண்டுள்ளார். 
இந்தப்பணிக்கு தொலைபேசி வருவாய்ப்பிரிவில் பணி புரியும் SR.TOA தோழர்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்துவதில் உள்ள தாமதத்தைக்களையக்கோரி AIBSNLPWA  ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பாக தோழர்.முத்தியாலு தலைமையில் DOT செயலரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஆவண செய்வதாக DOT  செயலர் உறுதியளித்துள்ளார்.

தோழர். K.T.K.தங்கமணி



19-05-2014 திங்கட்கிழமை அன்று 
தமிழ்நாடு AITUC அலுவலகத்தில்
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர்
தோழர்.தா.பாண்டியன் அவர்கள் தலைமையில் 
அவர்களின்
நூற்றாண்டு துவக்கவிழா மற்றும் அவரது 
திருவுருவ படத்திறப்புவிழா நடைபெற்றது.

AITUC மாநில செயலர் தோழர்.T.M.மூர்த்தி 
மற்றும் பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் 
பங்கேற்றனர். நமது NFTE தொழிற்சங்கம் சார்பாக 
மாநில செயலர் தோழர். பட்டாபிராமன்
அகில இந்திய அமைப்பு செயலர்
தோழர்.S.S.கோபாலகிருஷ்ணன் 
புதுவை மாவட்ட செயலர் தோழர்.காமராஜ் 
சேலம் மாவட்ட செயலர் 
தோழர்.பாலகுமார் மற்றும் 
சேலம் மாவட்ட தலைவர் தோழர்.சின்னசாமி 
ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

விழாவில் தோழர். K.T.K. தங்கமணி அவர்களை 
பற்றி தினம் ஒரு செய்தி  முக நூலில் அறிந்து கொள்ள
" KTK-100" எனும் சமூக வலைத்தளம் துவக்கப்பட்டது.

ஓயாது உழைத்த உத்தமர்... K.T.K புகழ் பாடுவோம்...