
ஞாயிறு, மே 25, 2014
சனி, மே 24, 2014
அகில இந்திய மாநாடு
அகில இந்திய மாநாடு
அகில இந்திய மாநாடு வரும் அக்டோபர் 10 முதல்
13 வரை ஜபல்பூரில் நடைபெற உள்ளது .
அகில இந்திய மாநாடு வரும் அக்டோபர் 10 முதல்
13 வரை ஜபல்பூரில் நடைபெற உள்ளது .
வெள்ளி, மே 23, 2014
நமது NFTE கூட்டணி..மகத்தான வெற்றி
சென்னைக்கூட்டுறவு சங்க இயக்குனர்கள் தேர்தல்...
நமது NFTE கூட்டணி...வரலாற்று சிறப்புமிக்க...
...! வெற்றி...!வெற்றி...!
20-05-2014 செவ்வாய் கிழமை அன்று நடைபெற்ற சென்னைக்கூட்டுறவு சங்கஇயக்குனர்கள் தேர்தலில் 21 இடங்களையும்நமது NFTE தலைமையிலானஅணி வெற்றி பெற்றுள்ளது.
இயக்குனர்கள் தேர்தல் முடிவுகள்
தமிழ்நாடு
மொத்த வாக்குகள் : 127
மொத்த இடங்கள் : 10
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 10
K. அசோகன், சென்னை : 70
A. ஞானசேகர், திருச்சி : 67
A. குல்சார் அஹமது, ஈரோடு : 69
V. கிருஷ்ணமூர்த்தி, கடலூர் : 69
V. நாகராஜா, பெங்களூர் : 70
S. பார்த்திபன், சென்னை : 70
R. ராஜேந்திரன், தஞ்சாவூர் : 71
P. சண்முகம், திருநெல்வேலி : 68
S. வீரராகவன், வேலூர் : 75
மொத்த வாக்குகள் : 68
மொத்த இடங்கள் : 8
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 8
V. பாபு : 40
V. பாஸ்கர் : 39
T.V. பீமாராவ் : 50
P. D. சந்திரபாபு : 41
K. சிதம்பரம்பிள்ளை : 41
A. கிருஷ்ணமூர்த்தி : 39
K. ரகுநாதன் : 41
R. திரிசங்கு : 42
பொது பிரிவு ( மகளிர் இட ஒதுக்கீடு)
மொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )
மொத்த இடங்கள் : 2
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 2
பிரேமா ஜீவானந்தம், திருச்சி : 106
M. செல்வி, சென்னை : 114
பொது பிரிவு ( SC / ST இட ஒதுக்கீடு)
மொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )
மொத்த இடங்கள் : 1
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 1
G. ராஜ்குமார், வேலூர் : 107
வெற்றி பெற்ற 21 இயக்குனர்கள் கூடி
புதிய நிர்வாகிகளை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
தலைவர் : தோழர். S. வீரராகவன்
துணை தலைவர் : தோழர். K. ரகுநாதன்
பொருளர் : தோழர். R. திரிசங்கு
நிர்வாகிகள் தேர்வுக்கு பின் நடைபெற்ற
இயக்குனர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
நிர்வாகிகள் தேர்வுக்கு பின் நடைபெற்ற
இயக்குனர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
- வட்டி உடனடியாக 1% சதவீதம் குறைக்கப்படும்.
- உறுப்பினர்கள் நலன் கருதி பெங்களூர்-ல் ஒரு கிளை துவக்கப்படும்.
- கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளுக்கு உதவிட 12 கமிட்டிகள் அமைக்கப்படும்.
- மத்திய பதிவாளரின் ஒப்புதலுக்குப்பின் இந்த கமிட்டி அமுல்படுத்தப்படும்.
வெற்றி பெற்ற இயக்குனர்களுக்கும் மற்றும்
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும்
நமது NFTE-BSNL புதுவை மாவட்ட சங்கத்தின்
நல் வாழ்த்துக்கள்......................!
செய்திகள்
செய்திகள்
JTO மற்றும் TTA பதவிகளுக்கான புதிய ஆளெடுப்பு விதிகள்
BSNL வாரிய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்தி மொழிபெயர்ப்பாளர்களாக தற்காலிகப்பதவி உயர்வில்
பணி புரியும் தோழர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பது பற்றி
BSNL வாரிய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
BSNL BOARD வாரிய கூட்டம் ஜுன் 6ந்தேதி நடைபெறும்.
போன் மெக்கானிக் இலாக்கா தேர்வை உடனடியாக நடத்தக்கோரி நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியதன் அடிப்படையில் விரைவில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஆண்டு BSNLன் வருமானம் 2.5 சதம் உயர்ந்துள்ளதாகவும்,
செல் வருமானம் 5 சதம் உயர்ந்துள்ளதாகவும்
புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
மாதம் ரூ.2000/=க்கு மேல் தொலைபேசிக்கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி பில்களை நேரடியாக
அவர்களது இருப்பிடத்திற்கு கொண்டுபோய் கொடுக்கவும்,
காசோலையை நேரடியாக பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யுமாறு
மாநில CGMகளை CMD கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தப்பணிக்கு தொலைபேசி வருவாய்ப்பிரிவில் பணி புரியும் SR.TOA தோழர்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்துவதில் உள்ள தாமதத்தைக்களையக்கோரி AIBSNLPWA ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பாக தோழர்.முத்தியாலு தலைமையில் DOT செயலரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆவண செய்வதாக DOT செயலர் உறுதியளித்துள்ளார்.
தோழர். K.T.K.தங்கமணி

19-05-2014 திங்கட்கிழமை அன்று
தமிழ்நாடு AITUC அலுவலகத்தில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர்
தோழர்.தா.பாண்டியன் அவர்கள் தலைமையில்
அவர்களின்
நூற்றாண்டு துவக்கவிழா மற்றும் அவரது
திருவுருவ படத்திறப்புவிழா நடைபெற்றது.
மற்றும் பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள்
பங்கேற்றனர். நமது NFTE தொழிற்சங்கம் சார்பாக
மாநில செயலர் தோழர். பட்டாபிராமன்
அகில இந்திய அமைப்பு செயலர்
தோழர்.S.S.கோபாலகிருஷ்ணன்
புதுவை மாவட்ட செயலர் தோழர்.காமராஜ்
சேலம் மாவட்ட செயலர்
தோழர்.பாலகுமார் மற்றும்
சேலம் மாவட்ட தலைவர் தோழர்.சின்னசாமி
ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
பற்றி தினம் ஒரு செய்தி முக நூலில் அறிந்து கொள்ள
" KTK-100" எனும் சமூக வலைத்தளம் துவக்கப்பட்டது.
ஓயாது உழைத்த உத்தமர்... K.T.K புகழ் பாடுவோம்...
வியாழன், மே 22, 2014
CGM உடன் சந்திப்பு
ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகள்
CGM உடன் சந்திப்பு
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி, TMTCLU மாநிலத்தலைவர் தோழர்.ஆர்.கே., TMTCLU மாநிலச்செயலர் தோழர்.செல்வம், தோழர்கள்.தமிழ்மணி, முரளி,காமராஜ் ஆகியோர்,
மே 17 தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒப்பந்த ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தையொட்டி தமிழக முதன்மைப் பொதுமேலாளரை
சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
"ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள் தொழிற்சங்க வரையறைக்குள் வராது" என்ற வழக்கமான பல்லவி பாடப்பட்டாலும்,
CGM பொறுமையுடன் நமது கோரிக்கைகளை செவிமடுத்துள்ளார்.
ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினையில் ஒப்பந்தக்காரர்கள் என்ற இடைத்தரகர்கள் இருந்தாலும், முதன்மை முதலாளி
PRINCIPAL EMPLOYER என்ற முறையில் BSNLலில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டபூர்வ சலுகைகளை உரிமைகளை அளிக்க வேண்டியது
BSNL நிர்வாகத்தின் கடமையாகும்.
BSNL நிர்வாகம் தனது கடமையைச்செய்யும் என நம்புவோம்.
நாமும் ஒப்பந்த ஊழியருக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்
தோழர். KTK.தங்கமணி
மே - 2014
தோழர். KTK.தங்கமணி
அவர்களின் நூற்றாண்டு
![]() |
ஓயாது உழைத்த உத்தமர் |
கல்வி இருந்தும் பணிவு கொண்டார் ...
செல்வம் இருந்தும் எளிமை கொண்டார்
வீரம் இருந்தும் விவேகம் கொண்டார்...
குணத்தில் தங்கமானார்...
கொள்கையில் நிறைகுடமானார்..
கதராடை மட்டுமே அணிவார்...
காலுக்கு செருப்பின்றி நடப்பார்..
கருப்பட்டிக்காப்பி குடிப்பார்..
செல்வ செழிப்பில் பிறந்திருந்தாலும்..
செல்லம் சோப்பில் துணி துவைப்பார்..
உழைப்பாளி மக்களுக்காக
ஓயாது உழைத்த உத்தமர்
KTK புகழ் பாடுவோம்...
19/12/2014 அன்று AITUC அலுவலகத்தில் நடைபெற்ற 100 வது ஆண்டு துவக்க விழாவில் பட்டாபி,கோபாலக்ரிஷ்ணணன் ,புதுவை காமராஜ் ,சேலம் பாலு,சின்னசாமி ,உட்பட பலர் கலந்து கொண்டனர் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)