வெள்ளி, ஜூன் 21, 2013

மாநிலசெயற்குழு—25/06/2013

மாநிலசெயற்குழுகூட்டம் 25/06/2013

 வேலூர்,ஆற்காடு ரோடு, KGN மண்டபத்தில் 

நடைபெறும்.அனைவரும் வருக!

TTA பயிற்சி வகுப்பு

நமது மாவட்ட்தில் நமது சங்க தோழர்கள் S. பசுபதி,

S.விஜயராகவன், A.D.S.சுப்ரமணி, .K. அருண் ஆகியோர்,

 TTA பயிற்சி வகுப்புக்கு 24/06/2013 முதல் செல்ல 

உள்ளனர். அவர்களுக்கு நம்து வாழ்த்துக்கள்

திங்கள், ஜூன் 10, 2013

78.2 IDA இணைப்பு

78.2 IDA இணைப்பு 
வாராது வந்த மாமணி

இன்று 10/06/2013  BSNL  அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 
78.2 சத IDA இணைப்பிற்கு ஒப்புதல்  அளித்து DOT  உத்திரவிட்டுள்ளது. 

01/01/2007 ஊதிய நிர்ணயத்தில் 68.8 சத IDA என்பதற்குப்பதிலாக 78.2 சத IDA என்பது கணக்கில் எடுக்கப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.

உத்திரவு தேதியான 10/06/2013ல் இருந்து இது அமுலுக்கு வரும்.

 நிலுவை வழங்கப்பட மாட்டாது.
BSNL தனது சொந்த நிதியில் இருந்து இந்த நிதிச்சுமையை ஏற்கவேண்டும்.
 இது சம்பந்தமாக நிதி உதவி வழங்கப்பட  மாட்டாது.

கால தாமதம் ஆனாலும் 
78.2 சத இணைப்பைப் பெறுவதற்கு 
உறுதியுடன் இணைந்து செயல்பட்ட 
அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் 
நமது வாழ்த்துக்கள்.
-------------------------------------------------------
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக்  கூலி  தரும்.

78.2% IDA merger oredrs issued


வெள்ளி, ஜூன் 07, 2013

DOT APPROVED 78.2% IDA MERGER

Com Islam  Our President Reports that DOT approved 78.2 as per  the decision of BSNL.. Let us wait for further communication


வராது ,வராது ,என்று  சொன்னாலும்  பெறுவோம்  என்ற நம்பிக்கையுடன் 
செயல்பட்ட மத்திய,மாநில  சங்கத்திற்கு நன்றிகள் 

வியாழன், ஜூன் 06, 2013

நல்ல விமர்சனம் மட்டுமே தேவை.

நல்ல விமர்சனம் மட்டுமே தேவை.
                                   
தமிழ் மாநில செயலரை  தவறாக விமர்சிப்பது தொடர்கிறது.
யாரையோ திருப்திப்படுத்திட, விமர்சித்திட தேவை சிலருக்கு இருந்திடலாம் .
தமிழ் மாநில சங்கத்தை, அதன் மாண்பை காத்திடவேண்டும்.  தஞ்சை தரணியில்எண்ணற்ற போராட்டங்களை தோழர் ஆர்.கே, எஸ்.எஸ்.கே தலைமையில் நடத்தி,பங்கேற்று மஸ்தூர், காவிரி நீர், போஸ்டல் போராட்டம் என பலவற்றுக்குசிறை சென்றவர், குற்றப்பத்திரிக்கை, தண்டனை, சென்சுர் என பெற்றவர்.ஒரு மெமோவுக்கே ஒடி ஒளிந்தவர் அல்ல.
குற்ற பத்திரிக்கை பெறாமலேய சங்க பணி பார்த்த தலைவரல்ல.

போராட்ட குணம், உறுதிப்பாடு, மாண்பு, பிறரை தவறாக பேசாதகுணம்,
அடுத்தவர் சொத்தை கொள்ளை அடிக்கத் தெரியாதவர், பொய்,
புனைசுருட்டு செய்து அடுத்தவரை கெடுக்க நினைக்காதவர், சங்கத்தைஒரு வியாபாரமாக  செய்யாமல், தவமாக செய்பவர். இத்தனைகுணங்களையும் பரிசீலித்து தேர்வு  செய்யப்பட்டவர் மாநிலசெயலராகவந்தவர்.  அடுத்தவரின்  தயவில் மாநில செயலராக  வர விரும்பியவரல்ல.
இனிமேலும்  இது போல எழுதாமல், மாநில செயலரை
விமர்சனம் செய்யாமல்  இருப்பது நலம்.

வியாழன், மே 30, 2013

வேலூர் மாவட்டசங்க போராட்டம்

பேர்ணாம்பட்டு  பகுதியில்  நமது  ஊழியர்களுக்கு  மிகவும்  தொல்லை  கொடுத்துவந்த  பிரச்னைக்குரிய  அதிகாரி  மாற்றல்  செய்யப்பட்டதையடுத்து  மாவட்டச்செயலரின்  உண்ணாவிரதம்  வெற்றிகரமாக  முடித்துக்கொள்ளப்பட்டது.  பொதுமேலாளர்  உத்தரவிட்டபிறகும்,  நிதமும்  இரவு  10  மணிவரை  பணீயாற்ற   அந்த அதிகாரியால் நிர்பந்திக்கப்பட்ட பெண் ஊழியருக்கும் 0900 - 1700 பணி வழங்கி உத்தரவிடப்பட்டது.  பிரச்னையில்  தலையிட்டு  சுமுக  தீர்வுக்கு  உதவிட்ட  மாநிலச்செயலருக்கு  நன்றி  !

முதன்  முதலாக  மாவட்டசெயலர் அல்லிராஜா  நீண்டகாலத்திற்கு  பிறகு காலவரையற்ற  உ ண்ணா  விரத போராட்டம் இருந்து ,பிரச்சனை  தீர்வு  காண ப்பட்டது ,மாநில சங்கத்திற்கும்  நன்றி 

வேலூர்  மாவட்டசங்க போராட்டம்  வெற்றியுடன்

  முடிவடைந்துள்ளது SDE  மாற்றப்பட்டார் .

ஊழி ய ர்   general duty க்கு  கொண்டு வரப்பட்டார் 

.வேலூர்  மாவட்டசங்க த்திற்கு  வாழ்த்துக்கள்