
சனி, ஏப்ரல் 13, 2013
வெள்ளி, ஏப்ரல் 05, 2013
-BSNLEUதிருட்டுப்பூனை
போராடிப்பெற்ற போனசை திருடிய பூனை
பதவி உயர்வைப் பாழ்படுத்திய பூனை
5 நாள் வேலையை அடியோடு அழித்த பூனை
பரிட்சை இல்லாமல் பதவி உயர்வு என்று பாசாங்கு விட்ட பூனை
மருத்துவப்படியை மரிக்க வைத்த பூனை
78.2 IDA இணைப்பை இழுத்தடிக்கும் பூனை
5 ஆண்டுக்கு ஒரு சம்பள உயர்வு என்று அள்ளி விட்ட பூனை
மாற்றல் விதிகளால் ஊழியரை மிரட்டி தன் சங்கத்திற்கு மாற வைத்த பூனை
தொழிலாளர் உரிமைகளை காற்றில் பறக்க விட்ட பூனை
தொழிற்சங்க மரியாதையை மண்ணோடு மண்ணாக்கிய பூனை
இன்று
நம்மைப் பார்த்து வெட்கங்கெட்டு கேட்கின்றது...
"எட்டு ஆண்டுகள் இருண்ட காலமா?
பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமா" ? என்று..
60 ஆண்டுகளாக..
உடன் கொல்லும் வியாதியாக
நம்முடன் வாழ்ந்து..
முன்னேற்றங்களை முடக்கி,
கண்ணை மூடி.. கண்மூடித்தனமாக விமர்சனம் மட்டுமே செய்யத்தெரிந்த
ஒரிஜினல் குருட்டுப்பூனைக்கு..
8 ஆண்டுகளாக ஏகப்பட்ட சலுகைகளை,
உரிமைகளைத் திருடிய
அங்கீகார, அகங்கார திருட்டுப்பூனைக்கு
NFTE ஐ விமர்சனம் செய்ய ஏது அருகதை?
தோழர்களே ..
ஏப்ரல் 16ல்..
கட்டுவோம் கடைசி மணியை..
நன்றி காரைக்குடி வலைத்தளம்
JTO - தேர்வு
JTO - தேர்வு
வயது மற்றும் கல்வித்தகுதிக்கான விளக்கங்கள்
CORPORATE அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
CORPORATE அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
INSTRUMENT மற்றும் INSTRUMENTATIONல்
பெற்ற DIPLOMAவும்
மற்ற DIPLOMA கல்வித்தகுதிக்கு இணையாக கருதப்படும்.
வயது வரம்பு - JTO காலியிடங்கள் உள்ள
ஒவ்வொரு ஆளெடுப்பு ஆண்டின் - RECRUITMENT YEARன்
ஜூலை முதல் தேதி அன்று கணக்கிடப்படும்.
எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட
வழக்கின் அடிப்படையில் மேற்கண்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக
கூடுதலாக 7 முதல் 10 நாட்கள் அவகாசம் அளிக்கவும்
BSNL உத்திரவிட்டுள்ளது.
வியாழன், ஏப்ரல் 04, 2013
செவ்வாய், ஏப்ரல் 02, 2013
காரைக்குடி வலைத்தளம்--நன்றி
விலைவாசிப்படி
ஏப்ரல் 1 - 2013 முதல் விலைவாசிப்படி
IDA 3.4 சதம் கூடியுள்ளது.
மொத்தப்புள்ளிகள் 74.9 சதம்.
SENIOR 78.2 IDA வருவது ஒருபுறம் இருக்கட்டும்.
மற்றுமோர் ..
JUNIOR 78.2 IDA வருவதற்கு இன்னும் 3.3 சதமே பாக்கியுள்ளது.
மூன்று மாதத்திற்கு ஒரு விலைவாசிப்படி
யாரையும் கேட்காமல் ஊழியர் கரங்களில் முழுதாய் கிடைக்கின்றது
நல்ல வேளை...
அபியின் ஆகாய சாதனைகளில் இன்னும் இது சேரவில்லை.
நிற்க..
01/10/2011 முதல் IDA 50 சதத்தை தாண்டி விட்டது.
ஏறத்தாழ இரண்டு வருடங்கள் ஓடி விட்டன.
இன்னும் 50 சத IDA இணைப்பு என்னும் கருத்து வலுப்பெறவில்லை.
அடுத்த ஊதிய உடன்பாடு நம்பூதிரி மீது சத்தியமாக 2017ல்தான்.
பாவம்... அபி வகையறாவிற்கு
IDA இணைப்பு பற்றியெல்லாம் நினைக்கவே நேரம் இருக்காது.
எனவே 50 சத IDA இணைப்பு என்னும் கோரிக்கையை
நமது சங்கத்தின் சார்பாக உரமேற்ற வேண்டும்.
78.2 சத IDA இணைப்பில்
தும்பை விட்டோம்.
இப்போது
வாலைப்பிடித்து தொங்குகின்றோம.
இம்முறையாவது
50 சத IDA இணைப்பில்
வாலைப்பிடிக்காமல்...
தும்பைப் பிடிப்போம்...
அதையும்
துரிதமாகப் பிடிப்போம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)