புதன், ஏப்ரல் 27, 2016

இடது... SORRY

                             இடது... SORRY 



உங்களுக்குத் தெரியுமா?

எந்த ஒரு சங்கம்..
FNTO சங்கத்தை அழித்ததோ..

எந்த ஒரு சங்கம்..
FNTO சங்கத்தின் சின்னத்தை அபகரித்ததோ.. 

அந்த ஒரு சங்கம்..
FNTO சங்கத்திடம் தங்களுக்கு ஆதரவு கோரியுள்ளது...

தங்களிடம் ஆதரவு கோரியவர்களிடம்...
FNTO  சங்கம் அமைதியாக மறுப்பை சொல்லி விட்டது...

FNTO சங்கத்திடம் இவர்கள் ஆதரவு கோரிய மர்மம் என்ன?
வேறு எதுவுமில்லை...
NFTE சங்கத்தை அழிக்க வேண்டுமாம்...

இடது சாரிகள்  என தங்களைச் சொல்லிக்கொள்ளும் 
இவர்களுக்கு... இடது சாரி ஒற்றுமையைக் கட்டுவதோ...
ஊழியர் பிரச்சினையைத் தீர்ப்பதோ நோக்கமல்ல...
மாறாக...
சகல சங்கங்களையும் சரிக்கட்ட வேண்டும்...
சரிப்படவில்லையென்றால் தீர்த்துக்கட்ட வேண்டும்...

கடந்த 3 ஆண்டுகளாக நமது செயல்பாடு கண்டு 
இவர்கள் அஞ்சுகிறார்கள்...
பிரச்சினையைத் தீர்ப்பது அவர்கள் பணியல்ல...
பிரச்சினையை வளர்ப்பதுதானே அவர்கள் பாணி...
எனவே பிரச்சினைகளைத் தீர்க்கப் பாடுபடும் 
NFTEஐக் கண்டு இவர்கள் அஞ்சுவது இயற்கையே...

இதோ...
காற்று இன்று நம் பக்கம் வீசுகிறது....
கலகக்காரர்கள்  நெஞ்சில்... 
கலக்கம் பிறக்கிறது...

மே 10ல்... 
இணைந்த கரங்கள் எழும்...
எரிந்து விழும் சாம்பலிலும்.. 
எழுந்து வரும்... 
பீனிக்ஸ் பறவையாக...

-மத்திய சங்க இணையதளச்செய்தியின் தமிழாக்கம்
-

circle leadres Meeting



வெள்ளி, ஏப்ரல் 15, 2016

78.2 - வீட்டு வாடகைப்படி




78.2 - வீட்டு வாடகைப்படி



தற்போது 68.8 சத நிர்ணய அடிப்படையில் 

வழங்கப்பட்டு வரும் வீட்டு வாடகைப்படியை 

78.2 சத நிர்ணய அடிப்படையில் வழங்கிடக்கோரி 

நமது சங்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. 

78.2 சத இணைப்பு அமுல்படுத்தப்படும் போது 

இதனை அமுல்படுத்த BSNLEU சங்கம் வழக்கம் 

போல் தவறி விட்டது. இருப்பினும் நமது சங்க 

முயற்சியால் இப்பிரச்சினை 

JCM தேசியக்குழுவில் விவாதிக்கப்பட்டது. 

10/03/2016 அன்று நடைபெற்ற JCM கூட்டத்தில் 

இப்பிரச்சினை  மீண்டும் வலியுறுத்தப்பட்டது
நிர்வாகம் இதனால் உண்டாகும் செலவினத்தைக் 

கணக்கிட்டு உரிய முடிவெடுப்பதாக உறுதி 

அளித்திருந்தது. தற்போது செலவு தொகை 

எவ்வளவு என்பது கணக்கிடப்பட்டு விட்டது. எனவே

 விரைந்து முடிவெடுக்க நமது சங்கம் நிர்வாகத்தை 

வலியுறுத்தியுள்ளது.


78.2 சத IDA இணைப்பின் அடிப்படையில் வீட்டு 


வாடகைப்படி வழங்க நிர்வாகம் மறுத்து டதாகவும்..

 தாங்கள் அதை அமைதியாக 

ஏற்றுக்கொண்டதாகவும் BSNLEU சங்கம் கூறியதை 

தோழர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.


125 வது அம்பேத்கர்

 சென்னையில்  இன்று 1504016   125 வது  அம்பேத்கர்  பிறந்தநாள் விழா, SEWA BSNL சங்க அலுவலகம்  திறப்பு விழா ,கொடிகம்பம்  ,கல்வெட்டு திறப்பு,என நிகழ்ச்சிகளை  சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .மாநில தலைமை  போதுமேலாளர் உள்ளிட்ட  அதிகாரிகள்,பல நிறுவன தொழிற்சங்க தலைவர்கள் ,SEWA BSNL நிர்வாகிகள் ,அதிகாரிகள்  நமது சங்க தோழர்கள்  மனோஜ் ,முரளிதரன் ,காமராஜ் பங்கேற்றனர்...கூ ட்டுறவு  சங்க தலைவர் வீரராகவன், கலந்துகொண்டு உரையாற்றினர், 
தமிழகம்  மற்றும்  CGM அலுவலக தோழர்கள், தோழியர்கள்   என  நூற்றுக்கணகான ,ஊழியர்கள் ,அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாரத ரத்னா  அம்பேத்கர்  புகழ் ,,ஆற்றிய  பணி நினைவு கூறப்பட்டது.

புதன், ஏப்ரல் 13, 2016

செய்திகள்

செய்திகள்

 2007ம் ஆண்டு   TTA ஆளெடுப்பில் 
பணி நியமனம் பெற்ற அனைவரையும்   
22/05/2016 நடைபெறவுள்ள JTO போட்டித்தேர்வுக்கு
 தற்காலிகமாக அனுமதிக்குமாறு BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 

2007ம் ஆண்டிற்கான TTA  காலியிடங்களுக்கு தேர்வு பெற்றிருந்த போதிலும், பல தோழர்கள் பயிற்சி முடித்து 01/07/2008க்குப்பின்தான் பணி நியமனம் பெற்றனர். அத்தகைய தோழர்கள் ஆந்திராவில் நீதி மன்றம் சென்றனர். ஆந்திர நீதிமன்றம் அவர்களை தேர்வுக்கு அனுமதிக்குமாறு நிர்வாகத்திற்கு உத்திரவிட்டது. நீதிமன்ற உத்திரவை அனைத்து தோழர்களுக்கும் அமுல்படுத்திட நமது சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. தற்போது அனைவரும் 
தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
===============================================
விதி 8 - RULE 8ன் கீழ் மாற்றலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோழர்கள் தங்களது விருப்ப மாற்றலை ERP மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என CORPORTE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.
===============================================
BSNL அதிகாரிகளுக்கான
POST PAID  செல் இலவச உபயோக அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
B பிரிவு அதிகாரிகள் மாதம் ரூ.700/- வரையிலும்...
A பிரிவு அதிகாரிகள் மாதம் ரூ800/-வரையிலும்...
இலவசமாகப் பேசிக்கொள்ளலாம்.

அனைத்து அதிகாரிகளுக்கும்  STD வசதியும்...
தேசம் முழுவதும் இலவசமாக ஊர்சுற்றும் ROAMING வசதியும் உண்டு...
===============================================
தமிழகத்தில் DELOITTE குழு பரிந்துரைகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. 08/04/2016 அன்று அனைத்து அதிகாரிகள் அமைப்புக்களையும்  மாநில நிர்வாகம் சந்தித்துள்ளது. தற்போதைய 17 SSA  - மாவட்டங்களை 
10 வணிகப்பகுதிகளாக BUSINESS AREAவாக  மாற்றும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. DELOITTE சம்பந்தமாக ஊழியர் சங்கங்களுடன் கலந்தாலோசனை நடைபெறவில்லை. தேர்தலுக்குப்பின் கலந்தாலோசனைக்கூட்டம்  நடைபெறலாம்.

ஞாயிறு, ஏப்ரல் 10, 2016

SEWA -BSNL -NFTE AGREEMENT

நமது சங்கம்  SC--ST  BSNL SEWA  சங்கம்   உடன்பாடு  கண்டது.. சென்ற 3 தேர்தலில்  BSNLEUஉடன்  இருந்து  வாக்குகளை  பெற்று  கொடுத்த  SC/ST சங்கம்  கண்ட  பலனை ?  தோழர்  பெருமாள்  அ  இ  தலைவர்  அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.


 ஒப்பந்தம் கண்ட  தலைவர்களுக்கு  நன்றி 

சனி, ஏப்ரல் 09, 2016

புதுச்சேரி மாவட்ட சங்க விழா

புதுச்சேரி  மாவட்ட சங்க  விழா 
அம் பே த்கர்  125 ஆண்டு  பி ற ந்த நாள்  விழா 
95  வது   தோ ழர் .குப்தா பி ற ந்த நாள்  விழா 

புகைபடங்ககள்