வெள்ளி, பிப்ரவரி 26, 2016
புதன், பிப்ரவரி 24, 2016
ஊதிய இழப்பு
ஊதிய இழப்பு
01/01/2007க்குப்பின் BSNLலில் பணி நிரந்தரம் பெற்ற
TTA தோழர்களுக்கு அவர்களது ஊதிய இழப்பைச்
சரிக்கட்ட ஒரு கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை
நமது சங்கத்தின் முயற்சியால் வழங்கப்பட்டது.
ஆனால் மற்ற பகுதி ஊழியர்களுக்கு இது
மறுக்கப்பட்டது. மற்றவர்களுக்கும் ஆண்டு
உயர்வுத்தொகை வழங்கக்கோரி
நிர்வாகத்தை நமது சங்கம் வலியுறுத்தி வந்தது.
தற்போது BSNL நிர்வாகக்குழு 01/01/2007 முதல்
07/05/2010 வரை பணி நியமனம் பெற்ற
மற்ற பகுதி ஊழியர்களுக்கும் ஒரு ஆண்டு
உயர்வுத்தொகை வழங்குவதற்கு பரிந்துரை
செய்துள்ளது.
BSNL வாரியத்தின் ஒப்புதலுக்குப்பின் இது
அமுல்படுத்தப்படும்.
01/01/2007க்குப்பின் TTA தவிர மற்ற பதவிகளில்
பணி நியமனம் இல்லாததால்
கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற
தோழர்கள் இச்சலுகையை அனுபவிப்பார்கள்.
செவ்வாய், பிப்ரவரி 23, 2016
PROGRAMMES
AITUC 41வது அகில இந்திய மாநாடு
கோவையில் 25/02/2016 முதல் 28/02/2016 வரை
நடைபெறுகின்றது.
NFTE விரிவடைந்த மத்திய செயற்குழு
மார்ச் 1 மற்றும் 2 தேதிகளில்
பாட்னாவில் நடைபெறுகின்றது.
மத்திய தொழிற்சங்கங்கள் பங்கேற்கும்
அகில இந்திய எதிர்ப்பு நாள்
மார்ச் 10 அன்று நடைபெறுகின்றது.
34வது JCM தேசியக்குழுக்கூட்டம்
மார்ச் 10 அன்று நடைபெறுகின்றது.
34வது JCM தேசியக்குழுக்கூட்டம்
மார்ச் 10 அன்று நடைபெறுகின்றது.
தமிழகத்தேர்தல் பிரச்சாரத்துவக்க விழா
சேலத்தில் மார்ச் 15 அன்று நடைபெறுகின்றது.
காரைக்குடியில் தேர்தல் பிரச்சாரத்துவக்க விழா
மார்ச் 22 அன்று நடைபெறுகின்றது.
அகில இந்தியத்தலைவர்
தோழர்.இஸ்லாம் சிறப்புரையாற்றுகிறார்.
திங்கள், பிப்ரவரி 22, 2016
TEPU அகில இந்திய சங்கத்தின் மாநாடு
TEPU அகில இந்திய சங்கத்தின் மாநாடு 21,22/02/2016 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.
அ இ செயலர் தோழர் சந்தேஸ்வர் சிங் , ஆர்.கே ர
R.பட்டாபி, மதிவாணன், SSG,காமராஜ்,ஜெயராமன் ,சுப்பராயன்,குமார், ஆகியோர் பொது அரங்கில் கலந்து கொண்டனர். தோழர் ஆர்கே, தோழர்சி சிங் வாழ்த்துரை வழங்கினர்.
கீழ்க்கண்ட தோழர் கள் நிர்வாகிகளாக தேர்ந்தடுக்கப்பட்டனர்.
தோழர். பாணி கிரஹி தலைவராகவும்,
தோழர்:- செல்லப்பாண்டியன் ,செயல் தலைவராகவும்,
தோழர்:- சுப்புராமன் செயலராகவும்,
தோழர்: விஜயகுமர்ர் இணை செயலராகவும்,
தோழர் கண்ணதாசன் , கரு ர் ,பொருலராகவும் , தேர்ந்தடுக்கபட்டனர்,
அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
அ இ செயலர் தோழர் சந்தேஸ்வர் சிங் , ஆர்.கே ர
R.பட்டாபி, மதிவாணன், SSG,காமராஜ்,ஜெயராமன் ,சுப்பராயன்,குமார், ஆகியோர் பொது அரங்கில் கலந்து கொண்டனர். தோழர் ஆர்கே, தோழர்சி சிங் வாழ்த்துரை வழங்கினர்.
கீழ்க்கண்ட தோழர் கள் நிர்வாகிகளாக தேர்ந்தடுக்கப்பட்டனர்.
தோழர். பாணி கிரஹி தலைவராகவும்,
தோழர்:- செல்லப்பாண்டியன் ,செயல் தலைவராகவும்,
தோழர்:- சுப்புராமன் செயலராகவும்,
தோழர்: விஜயகுமர்ர் இணை செயலராகவும்,
தோழர் கண்ணதாசன் , கரு ர் ,பொருலராகவும் , தேர்ந்தடுக்கபட்டனர்,
அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
செய்திகள்
செய்திகள்
உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல்
7வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில் போட்டியிடும் சங்கங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01/03/2016.
நமது NFTE சங்கத்தின் சார்பில் தேர்தலில்
போட்டியிட விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடனடியாகத் தேர்தல் அதிகாரிகளை
நியமிக்குமாறு மாநில நிர்வாகங்களை டெல்லி
CORPORATE அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------
வங்கிக்கடன்
UNION வங்கி போன்ற வங்கிகள் நமக்கு கடன் கொடுப்பதற்கு
கடுமையான நிபந்தனைகளை விதித்த காரணத்தினால் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுல்படுத்தப்படவில்லை. இன்னும் இரண்டு வாரங்களில் கூடுதல் சலுகைகளுடனும், கடுமையான நிபந்தனைகள் இல்லாமலும் இரண்டு வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் என
டெல்லி நிர்வாகம் நமது சங்கத்திடம் தெரிவித்துள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------
GPF...
22/02/2016க்குப்பின் GPF நிதி ஒதுக்கீடு நடைபெறும் என்று நம்பப்படுகிறது. ஆயினும் GPF சம்பந்தமாக CORPORATE அலுவலகம் கேட்டிருந்த சில விவரங்களை அனுப்பாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------
BSNL நேரடி ஊழியர் ஓய்வூதியப்பலன்கள்
BSNLலில் நேரடி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கான
புதிய ஓய்வூதியத்திட்டம் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.
இதனிடையே 18ந்தேதி டெல்லியில்
NFTE மற்றும் AIBSNLEA சங்கங்களிடம்
இத்திட்டம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும்,
BSNL தனது பங்காக 3 சத பங்களிப்பைச்செய்வதாகவும்..
ஒவ்வொரு ஆண்டும் பங்களிப்பு சதவீதம் பரிசீலிக்கப்படும்
எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
15 ஆண்டுகளாக ஓய்வூதியப்பலன்களோ,
பாதுகாப்போ இல்லாமல் BSNL நேரடி ஊழியர்கள்
நிராதரவாய் BSNLலில் பணிபுரியும் நிலை
நமது சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் 3 சதப்பங்களிப்பு குறைவென்றும்...
நிர்வாகம் கூடுதல் பங்களிப்பு
CONTRIBUTION அளிக்க வேண்டும்
எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இப்பிரச்சினை மார்ச் 4 அன்று கூடவுள்ள
BSNL வாரியக்கூட்டத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------
JTO இலாக்காத்தேர்வு
JTO இலாக்காத்தேர்வை எதிர்த்து ஏற்கனவே
இராஜஸ்தான் மாநிலத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில்..
கேரளா மற்றும் ஒரிசா மாநிலங்களிலிருந்தும்
சில தோழர்கள் வழக்கு மன்றத்தை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.
இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும்.
இருந்தபோதும் நமது மத்திய சங்கம் சம்பந்தப்பட்ட
தோழர்களை சந்தித்து சிக்கலைத் தீர்ப்பதற்கு முயன்று வருகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









