சனி, அக்டோபர் 17, 2015

CM தேசியக்குழு கூட்ட முடிவுகள்

JCM தேசியக்குழு கூட்ட முடிவுகள் 

JCM தேசியக்குழு 16/10/2015 அன்று டெல்லியில்
 மனிதவள இயக்குநர் திருமதி.சுஜாதா ராய் 
அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

1.  மின்விபத்து மற்றும் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின்   குடும்பங்களுக்கு கருணை அடிப்படை பணிகளில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தப்பட்டது. மேலும் தற்போதுள்ள அளவுகோல்களைத் தளர்த்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நிர்வாகம் சாதகமாக பரிசீலிக்க ஒத்துக்கொண்டுள்ளது.

2. 01/01/2007 முதல் 07/05/2010 வரை பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு TTA  தோழர்களுக்கு வழங்கப்பட்டது போலவே ஒரு ஆண்டு உயர்வுத்தொகை வழங்கும் முடிவு பரிசீலிக்கப்படும்.

3. அகன்ற அலைவரிசை பழுது நீக்கும் பணி சோதனை அடிப்படையில் சில குறிப்பிட்ட நகரங்களில் தனியாருக்குத்  தாரை வார்க்கப்படும்.

4. 78.2 சத IDA இணைப்பில் 01/01/2007 முதல் நிலுவை வழங்குவது பற்றி மீண்டும் நினைவூட்டல் கடிதம் DOTக்கு  அனுப்பப்படும்.

5.CASUAL ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவது  பற்றி 
BSNL வாரியக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

6. ஊழியர்களின்  வாடகை இல்லா குடியிருப்புத்தொலைபேசியில் 
இரவுநேர இலவசங்களை  அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

7. TTA ஆளெடுப்பு விதிகளில் திருத்தம் பற்றி  ஊழியர் தரப்பு இரண்டு    வாரங்களுக்குள் தங்களது கருத்துக்களை அளிக்க வேண்டும்.

8. DELOITTE குழு அமுலாக்கத்தில்  மாவட்டங்கள் இணைக்கப்படும் போது BUSINESS AREA எனப்படும் வியாபார வட்டத்தில் சம்பளம் மற்றும்  நிர்வாகப் பொறுப்புக்களும்,  ஊழியர் மாற்றங்கள் SSA அளவிலும் இருக்கும்.

9. MDF மற்றும் பழுது பதியும் தொலைபேசிகளை கட்டணமில்லா தொலைபேசி சேவையாக மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும்.

10.இலாக்காத் தேர்வுகள்  அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. திருத்தங்கள் இருந்தால் மீண்டும் வெளியிடப்படும்.

11.சீருடை சம்பந்தமாக புதிய கொள்கை உருவாக்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.

12.CORPORATE  அலுவலகப் பணியாளர்களுக்கு தலைமையகப்படி  
HQ ALLOWANCE வழங்குவது ஏற்கப்படவில்லை.

13. தவறுதலாக  வழங்கப்பட்ட பட்டுவாடாவை மீண்டும் பிடித்தம் செய்யக்கூடாது என்ற உச்ச  நீதிமன்ற உத்திரவின் அடிப்படையில் அத்தகைய பிடித்தங்கள் இருந்தால் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

14. பணி நிறைவு பெறும் தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம் பணி நிறைவு நாளன்றே வழங்குவது, TA மற்றும் மருத்துவ முன்பணம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.

15. விதி 8ன் கீழ் ஊழியர்களுக்கு மாற்றல் வழங்குவதற்கு நிர்வாகத்தால் தடையாணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று நிர்வாகத்தரப்பு கூறியுள்ளது.

16. மிகுதி நேரப்படியை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் எனவும்  ஏனைய படிகள் உயர்வு பற்றி பரிசீலிக்க இயலாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

17. JCM நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்ட  பிரச்சினைகள் அமுலாக்கம் பற்றி 19/10/2015 அன்று கூட்டம் நடைபெறும்.

18. பதவிகளின் பெயர் மாற்றப் பரிந்துரை BSNL நிர்வாகக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. விடுபட்ட கேடர்களுக்கும் பெயர் மாற்றுதல் பற்றி பரிசீலிக்கப்படும்.

தோழர்களே...
JCM கூட்டத்தில் போனஸ் வழங்குவது,
 JAO ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள்
 மேற்கொள்வது ஆகியவையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 
பல முடிவுகள் ஆகட்டும் பார்க்கலாம் 
என்ற பாணியிலேயே உள்ளன. 

குறிப்பாக போனஸ் வழங்குவதில் நிர்வாகம் தொடர்ந்து ஊழியரை ஏமாற்றுவது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
OFFICIATING JTO - நிரந்தரம் 

JTO ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதையொட்டி  JTO பதவியில் நெடுங்காலமாக OFFICIATING  செய்து வரும் TTA தோழர்களை நிரந்தரம் செய்வது பற்றி டெல்லி தலைமையகம் மாநில நிர்வாகங்களுக்கு சில  குறிப்பிட்ட  வழிகாட்டுதல்களை வழங்கியதோடு அவை 31/10/2015க்குள்  முடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

  • 31/03/2016 அன்று JTO  காலியிடங்கள் கணக்கீடு செய்தல்.
  • தற்போது OFFICIATING  செய்து வரும் TTA தோழர்களின் எண்ணிக்கை கணக்கீடு.
  • தேவையான  JTO காலியிடங்களின்  கணக்கீடு.
  • மேற்கண்ட தோழர்கள் PHASE I பயிற்சிக்கும் களப்பயிற்சிக்கும்  FIELD TRAINING அனுப்புதல்.
  • PHASE I பயிற்சி மற்றும்  களப்பயிற்சி முடித்தவர்களை நிரந்தரப்படுத்துதல்.

JTO  OFFICIATING  தோழர்களின் நிரந்தரம் பற்றிய பிரச்சினை தற்போதுதான்  நிரந்தரமான தீர்வை நோக்கி நடைபோடுகிறது. 

செவ்வாய், அக்டோபர் 13, 2015

மாவட்ட செயற்குழு கூட்டம் 12/10/2015

NFTE-BSNL, PUDUHERRY
சுற்றறிக்கை:- எண்1/-தேதி 13/10/2015
மாவட்ட செயற்குழு கூட்டம் 12/10/2015 ல் மாவட்டத்தலைவர் தோழர் தண்டபாணி தலைமையில் நடை பெற்றது. கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
·         19/10/2015 திண்டிவனம் கிளைசெயலர் கருத்தரங்கில் பெருவாரியாக கல்ந்தகொள்ள வேண்டும்..
·         சேவை குறித்த கூட்டம் நிர்வாகம்,சங்கங்கள் கலந்து கொள்வது
·         போனஸ் தார்ணா போராட்டம் வெற்றிகரமாக்குவது,
·         வைப்பு நிதி பயன்பாடு குறித்து கமிட்டி அமைக்கப்பட்ட்து.
·         மாவட்ட சங்க செயல்பாடு சிறக்க  சிறப்பு அழைப்பாளர் பதவிகள் உருவாக்கிட ஏற்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்துடன் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள்
1)    4 வருடம் முடித்த சேல்ஸ் பகுதி ஊழியர்களின் விருப்ப அடிப்படையில் மாற்றல்.
2)    டெலிகாம் மெக்கானிக் பணியாற்றும் இடங்கள் தேவை குறித்து முழுமையாக பரிசீலிக்கவேண்டும்.
3)    கிராமபுறத்தில் பில் கட்டும் வசதி.
4)   DE  அலுவலகத்திற்க்கு எழுத்தர் வசதி.
5)    சீருடை ஜன-2015 ல் ஏற்க்கப்பட்டும் காலதாமதம்.
6)   அனைத்து ஊழியர்களுக்கும் மாநில கூட்டுஆலோசனைக்குழு முடிவுப்படி பேக் வழங்குதல்.
7)    வில்லியனுர்/கண்டமங்கல்ம் பகுதிகளுக்கு TM/TTA நியமனம்.
8)    தோழர் மணி  TM விருப்ப மாற்றல் மற்றும் TM விருப்ப மாற்றல்கள்.
9)   சங்க அலுவலக கணிப்பொறி வழங்குதல்.
10)  விடுமுறை பணிக்கு மிகுதிநேர படி காலதாமதம்- பட்டுவாடா.
தோழமை , வாழ்த்துக்களுடன்,

மா.செல்வரங்கம்,மாவட்டசெயலர்.

சனி, அக்டோபர் 10, 2015

மாவட்ட செயற்குழு

NFTE-PUDUCHERRY SSA

மாவட்ட செயற்குழு
12/10/2015 மாலை 0500 மணி சங்க அலுவலகம்
தலைமை:-  தோழர் . M. தண்டபாணி, மாவட்டத்தலைவர்,
வரவேற்புரை: தோழர் . M. செல்வரஙகம், மாவட்டசெயலர்
துவக்க உரை :- தோழர் . P.காமராஜ், அ. இ. சிறப்பு அழைப்பாளர்,
ஆய்படு பொருள்

வாழ்த்துரை:- தோழர் .K.அசோகராஜன், மாநில பொருளர்,

v  அக்-19-திண்டிவனம், -இணைந்த மாவட்ட செயற்குழு ,
v  கிளை செயலர் கருத்தரங்கம்.
v  நிரந்தர வைப்பு –சம்பந்தமாக
v  சேவை மேம்பாடு
v  உறுப்பினர் சரிபார்ப்பு-உறுப்பினர் சேர்ப்பு
v  இதர தலைவர் அனுமதியுடன்,
தோழமை வாழ்த்துகளுடன்
M. செல்வரஙகம், மாவட்டசெயலர்

அனைவரும் வருக!

வியாழன், அக்டோபர் 08, 2015

செய்திகள்

செய்திகள் 

தமிழகத்தில் 02/06/2013 அன்று நடந்த JTO இலாக்காத் தேர்வில் ST காலியிடங்களில்  7 தோழர்கள் வெற்றி பெற்றதாக  தமிழக நிர்வாகம் அறிவித்துள்ளது. வெற்றி பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

09/10/2015 முதல்  GPF நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

பதவி பெயர் மாற்றத்தில் அதன் குழுவின் பரிந்துரை  அமுல்படுத்தப்பட வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
திறந்த நிலைப்பல்கலைக் கழகங்கள் மூலம் பெறப்பட்ட +2 படிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.


JTO ஆளெடுப்பு விதிகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு விரைவில் உத்திரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் சாதிச்சான்றிதழ் பிரச்சினையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர்.அந்தோணிச்சாமி, SS அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த மத்திய சங்கமும் தமிழ் மாநில சங்கமும்  முயன்று வருகின்றன.

ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்துவது சம்பந்தாகவும், தனி  TOWER CORPORATION அமைப்பது சம்பந்தமான பிரச்சினையில் அரசால் அமைக்கப்படும் அமைச்சர்கள் குழுவில் BSNL சார்பாக அதிகாரிகளை சேர்த்திடக் கோரியும்   DOT செயலரை நமது கூட்டமைப்புத்தலைவர்கள் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

TM பதவிகளில் ST  பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடி மட்ட ஊழியர்களின் STAGNATION - ஆண்டு உயர்வுத்தொகை தேக்க நிலை  பற்றி விரைந்து முடிவெடுக்க நமது சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

BUSINESS AREA CONSOLIDATION

 நமது மாவட்ட நிர்வாக அமைப்பு  SSA விலிருந்து  Business area  ஆக மா றும் பொழுது  ஏற்படும்  மாறுதல்கள்  ,பிரச்சனைகளை  குறித்து  இந்த உத்திரவு  குறித்தும்  முழுமையாக  பரிசீலிக்கவேண்டும் 


ஞாயிறு, அக்டோபர் 04, 2015

BONUS DEMO 06-09-2015

NFTE-PUDUCHERRY–SSA
அக் -6-2015
அட்ஹாக் போனஸ் கோரி ஆர்ப்பாட்டம்
இடம்:-பொதுமேலாளர் அலுவலகம்      மாலை 0500 மணி

·      போனசை லாபத்துடன் இணைக்காதே !
·      PRP/PMS நிபந்தனைகளைபுகுத்தாதே !
·      குறைந்த பட்ச போனஸ் மறுக்காதே !
·      60 % க்கு கீழ் போனஸ் மறுக்காதே!
·      FAIR என்பதை உருவாக்கு !
·      ஒப்பந்தம் உருவாக்கும் வரை
அனைவருக்கும் போனஸ் வழங்கு !

என கோரி போரம் சார்பாகஆர்ப்பாட்டம்நடைபெறும். அனைவரும் கலந்துகொண்டு வெற்றிகரமாக்குவோம்.
M.செல்வரங்கம் , மாவட்டசெயலர்.