செவ்வாய், செப்டம்பர் 01, 2015
போனஸ் குழுக்கூட்டம்
போனஸ் குழுக்கூட்டம்
31/08/2015 அன்று தலைநகர் டெல்லியில்
போனஸ் குழுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துளிகளில் சில...
- NFTE சார்பில் தோழர்.இஸ்லாம் அவர்களும், BSNLEU சார்பில் தோழர்.அபிமன்யு அவர்களும் கலந்து கொண்டனர்.
- பண்டிகைக்காலம் நெருங்குவதால் தற்காலிக போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
- உற்பத்தியோடு இணைக்கப்பட்ட போனஸ் PRODUCTIVITY LINKED BONUS என்ற பதங்களையே கடிதப்போக்குவரத்தில் குறிப்பிடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- உற்பத்தியோடு இணைக்கப்பட்ட போனஸ் என்பது தொழிலாளருக்கு மட்டுமே பொருந்தும். அதிகாரிகளுக்குப் பொருந்தாது.
- போனஸ் அடைவதற்கான இலக்கு TARGET என்பது மிகவும் கடினமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை CFA தரைவழித் தொலைபேசிப்பிரிவுடன் பேசி மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
- இலக்கு குறியீடுகளில் FAIR என்ற குறியீடு இல்லாதது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- போனஸ் சம்பந்தமாக இன்னும் உரிய விளக்கம் அளிக்காத DOT யின் செயல்பாடு கண்டிக்கப்பட்டது.
- போனஸ் குழுக்கூட்டங்களை இழுத்தடிக்காமல் உரிய இடைவெளியில் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திங்கள், ஆகஸ்ட் 31, 2015
இலட்சம் வாழ்க... வாழ்க.. வாழ்க..
31/08/2015
பணி நிறைவு வாழ்த்துக்கள்
தங்கம் நிகர் தலைவன் அவன்
தரத்தில் உயர் மனிதன் அவன்
தோழமை போற்றிய உடன்பிறப்பு அவன்
உடன்பிறவாத் தோழன் அவன்...
கைகளுக்குள் கட்டுண்ட கதிரவன் அவன்
கரை வேட்டி கம்யூனிஸ்ட் அவன்
கையில் கதிர் அரிவாள் ஏந்தும் உழவன் அவன்..
நித்தமும் சூரியனை வணங்கும் பக்தன் அவன்..
பூவின் இடத்தில் பொன்னானவன் அவன்..
நூறின் இடத்தில் லட்சமானவன் அவன்..
சப்பைக்கட்டு அறியாத சண்டமாருதம் அவன்
சபைக்கட்டு அறிந்த சபாநாயகன் அவன்..
கம்பத்தின் கதாநாயகன் அவன்
தமிழகத்தின் தலைநாயகன் அவன்
இராமனிடம் நேசம் கொண்ட லட்சுமணன் அவன்.
ஈரேழு மாநிலத்திலும் ஈடாகா லட்சம் அவன்...
காலங்களில் நூறு கண்டு
கலைகளில் ஆயிரம் கண்டு
கடமைகளில் லட்சம் கண்டு
இலட்சம்
வாழ்க... வாழ்க.. வாழ்க..
அன்புடன் வாழ்த்தும்
NFTE BSNL
காரைக்குடி மாவட்டச்சங்கம்.
வியாழன், ஆகஸ்ட் 27, 2015
வாழ்த்துகிறோம்.
வாழ்த்துகிறோம்.
அமைப்பு பிரச்சனை என சிலர் முட்டுகட்டை போட்டாலும், சிலர் பக்(கா)க பலமாக நின்றாலும் நிர்வாகம் 6 மாதகாலத்திற்க்கு தோழர்கள் P.N பெருமாள் தலைவராகவும், ND ராம் செயலராகவும் கொண்ட பட்டியலை அங்கீகரித்துள்ளது. 30/03/2016 க்குள் மாநாடு நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தடுக்க நிர்வாகம் கூறியுள்ளது.
தோழர்கள் P.Nபெருமாள் , மற்றும் ND ராம் அவர்களை வாழ்த்துகிறோம்.
STRIKE MEETING 26/08/2015
சிறப்பு கூ ட்டம் 26/08/2015
வேலை நிறுத்த ஆயத்த சிறப்பு கூ ட்டம் 26/08/2015 அன்று நடை பெற்றது.
போரம் தலைவர் காமராஜ் தலைமை ஏற்க சுப்பிரமணியன்
வரவேற்புரை நல்கினார் .
தோழர்கள் பிர்லின் இசக்
தஞ்சை நடராஜன் மாநில உதவிசெயலர் ,NFTE,
பாபு ராத கிருஷ்ணன் BSNLEU மாநிலசெயல்ர் ஆகியோர் உரை
ஆற்றினார்கள்.
100 தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் .
திங்கள், ஆகஸ்ட் 24, 2015
மாவட்ட செயற்குழு கூட்ட முடிவுகள் மாவட்ட மாநாட்டை வரும் செப் 28 (அ) 29 தேதிகளில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. சார்பாளர் கட்டணம் ரூ100/- அனைவரும் சார்பாளர்கள் என தீர்மானிக்கப்பட்டது. வெளிப்புறக்கிளைக்கு தோழர்கள் தனுசுராமன்,கிருஸ்ணன், குமணன், உட்புறக்கிளைக்கு தோழர்கள் ஸ்ரீதர்,ஹரிஹரன், சுவாமிநாதன், க்ருப்ஸ் கிளைக்கு தோழர்கள் நாகலிஙம், பெரியண்ணசாமி, காசிநாதன் ஆகியோர் சார்பாளர்கள் கட்டணம் வசூலிக்க,சார்பாளர்கள் பெயர் பதிவுசெய்து ,கிளைசெயலர் மூலமாக அனுப்ப பொறுப்பாக செயல்படவேண்டும்.. மாநாட்டுக்கு / மாவட்ட சங்கத்திற்க்கு நன்கொடை ரூ500/ வசூலிக்கலாம் என்ற தோழர் ராஜாமணி ஆலோசனை ஏற்க்கப்பட்டு உறுப்பினர்களிடம் நன்கொடை கோர திட்டமிடப்பட்டது. மாநாட்டு வழிகாட்டும் குழுவாக தோழர்கள் மகேஸ்வரன், ஹரிஹரன்,தண்டபாணி, செல்வரஙம் புஸ்பராஜ், தங்கமணி,ராஜாமணி,கிளைசெயளர்கள் கிருஸ்ணன்,நாகலிஙம், ஸ்ரீதர், மாவட்டசெயலர் காமராஜ் மற்றும் அசோகராஜன் செயல்படுவாரகள். தோழர்கள் மகேஸ்வரன் ,ஹரிஹரன் பதவி விலகல் கடிதம் ஏற்க்கப்படவில்லை, தோழர் காமராஜ் உள்ளிட்ட தோழர்கள் குழு சென்று மீண்டும் அவர்களை சென்று சந்திப்பது என தீர்மானிக்கப்பட்டது. தோழர் டி.குணசேகரன் மாவட்ட மாநாட்டுக்கு சாப்பாட்டு செலவு ரூ10,000/=பொறுப்பை ஏற்றுகொண்டார், வழங்கியுள்ளார்.அவரை செயற்குழு பாராட்டுகிறது. செப் 2 அ இ வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடத்திட தொலைபேசியக கூட்டங்கள், சிறப்புக்கூட்டம், உள்ளிட்ட இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திட திட்டமிடப்பட்டது. தோழர்கள் எஸ்.சந்திரபாலன், டி.குணசேகரன் பணிஓய்வு பாராட்டு நடத்தப்பட்டது. அஞ்சல் அட்டை இயக்கம் வெற்றிகரமாக நடத்திட தீர்மானிக்கப்பட்டது. செய்திகள் 1) தோழர்கள் G.மனோகரன், K.முரளி, K.சரவணன் ஆகியோர் TTA போட்டிதேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். அவர்களை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது. 2) டெல்லி மாநிலசெயலர்கள் கூட்டமுடிவு அடிப்படையில் உறுப்பினர் சரிபார்ப்புக்கு தயாராகவேண்டும். 3) மாநில செயற்குழுகூட்டம் செப்23 தேதியில் மயிலாடுதுறையில் நடைபெறும்.
மாவட்ட செயற்குழு கூட்ட முடிவுகள்
v மாவட்ட மாநாட்டை வரும் செப் 28 (அ) 29 தேதிகளில்
நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. சார்பாளர் கட்டணம் ரூ100/- அனைவரும்
சார்பாளர்கள் என தீர்மானிக்கப்பட்டது.
v வெளிப்புறக்கிளைக்கு தோழர்கள்
தனுசுராமன்,கிருஸ்ணன், குமணன், உட்புறக்கிளைக்கு தோழர்கள் ஸ்ரீதர்,ஹரிஹரன், சுவாமிநாதன், க்ருப்ஸ்
கிளைக்கு தோழர்கள் நாகலிஙம், பெரியண்ணசாமி, காசிநாதன் ஆகியோர் சார்பாளர்கள் கட்டணம்
வசூலிக்க,சார்பாளர்கள் பெயர் பதிவுசெய்து ,கிளைசெயலர் மூலமாக அனுப்ப பொறுப்பாக செயல்படவேண்டும்..
v மாநாட்டுக்கு / மாவட்ட சங்கத்திற்க்கு நன்கொடை
ரூ500/ வசூலிக்கலாம் என்ற தோழர் ராஜாமணி ஆலோசனை ஏற்க்கப்பட்டு உறுப்பினர்களிடம்
நன்கொடை கோர திட்டமிடப்பட்டது.
v மாநாட்டு வழிகாட்டும் குழுவாக தோழர்கள்
மகேஸ்வரன், ஹரிஹரன்,தண்டபாணி, செல்வரஙம் புஸ்பராஜ், தங்கமணி,ராஜாமணி,கிளைசெயளர்கள்
கிருஸ்ணன்,நாகலிஙம், ஸ்ரீதர், மாவட்டசெயலர் காமராஜ் மற்றும் அசோகராஜன் செயல்படுவாரகள்.
v தோழர்கள் மகேஸ்வரன் ,ஹரிஹரன் பதவி விலகல்
கடிதம் ஏற்க்கப்படவில்லை, தோழர் காமராஜ் உள்ளிட்ட தோழர்கள் குழு சென்று
மீண்டும் அவர்களை சென்று சந்திப்பது என தீர்மானிக்கப்பட்டது.
v தோழர் டி.குணசேகரன் மாவட்ட மாநாட்டுக்கு
சாப்பாட்டு செலவு ரூ10,000/=பொறுப்பை ஏற்றுகொண்டார், வழங்கியுள்ளார்.அவரை
செயற்குழு பாராட்டுகிறது.
v செப் 2 அ இ வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடத்திட
தொலைபேசியக கூட்டங்கள், சிறப்புக்கூட்டம், உள்ளிட்ட இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திட
திட்டமிடப்பட்டது.
v தோழர்கள் எஸ்.சந்திரபாலன், டி.குணசேகரன்
பணிஓய்வு பாராட்டு நடத்தப்பட்டது.
v அஞ்சல் அட்டை இயக்கம் வெற்றிகரமாக நடத்திட தீர்மானிக்கப்பட்டது.
செய்திகள்
1)
தோழர்கள் G.மனோகரன், K.முரளி, K.சரவணன் ஆகியோர் TTA போட்டிதேர்வில் வெற்றிபெற்றுள்ளனர்.
அவர்களை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது.
2)
டெல்லி மாநிலசெயலர்கள் கூட்டமுடிவு அடிப்படையில் உறுப்பினர்
சரிபார்ப்புக்கு தயாராகவேண்டும்.
3)
மாநில செயற்குழுகூட்டம் செப்23 தேதியில் மயிலாடுதுறையில் நடைபெறும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



