திங்கள், ஆகஸ்ட் 31, 2015

இலட்சம் வாழ்க... வாழ்க.. வாழ்க..




31/08/2015
பணி நிறைவு வாழ்த்துக்கள் 

தங்கம் நிகர் தலைவன் அவன்
தரத்தில் உயர் மனிதன் அவன் 

தோழமை போற்றிய உடன்பிறப்பு அவன் 
உடன்பிறவாத் தோழன் அவன்...

கைகளுக்குள் கட்டுண்ட கதிரவன் அவன் 
கரை வேட்டி கம்யூனிஸ்ட் அவன் 

கையில் கதிர் அரிவாள் ஏந்தும் உழவன்  அவன்..
 நித்தமும் சூரியனை வணங்கும் பக்தன்   அவன்.. 

பூவின் இடத்தில் பொன்னானவன் அவன்.. 
நூறின் இடத்தில் லட்சமானவன் அவன்..

சப்பைக்கட்டு அறியாத சண்டமாருதம் அவன் 
சபைக்கட்டு அறிந்த சபாநாயகன் அவன்..

கம்பத்தின் கதாநாயகன் அவன் 
தமிழகத்தின் தலைநாயகன் அவன் 

இராமனிடம் நேசம் கொண்ட லட்சுமணன் அவன்.
ஈரேழு  மாநிலத்திலும்  ஈடாகா லட்சம் அவன்...

காலங்களில்   நூறு கண்டு 
கலைகளில் ஆயிரம் கண்டு 
கடமைகளில்  லட்சம் கண்டு 
இலட்சம் 
வாழ்க... வாழ்க.. வாழ்க..

அன்புடன் வாழ்த்தும் 
NFTE   BSNL 
காரைக்குடி மாவட்டச்சங்கம்.

வியாழன், ஆகஸ்ட் 27, 2015

வாழ்த்துகிறோம்.


வாழ்த்துகிறோம்.

 அ.இ.சங்கத்தின் மாநாடு 30/09/2014 தேதிகளில் சோலாப்பூர் மஹா ராஸ்டிரா  என்ற இடத்தில் நடை பெற்றது.
அமைப்பு பிரச்சனை என சிலர் முட்டுகட்டை போட்டாலும், சிலர் பக்(கா)க பலமாக நின்றாலும் நிர்வாகம் 6 மாதகாலத்திற்க்கு தோழர்கள் P.N பெருமாள் தலைவராகவும், ND  ராம் செயலராகவும் கொண்ட பட்டியலை அங்கீகரித்துள்ளது. 30/03/2016 க்குள் மாநாடு நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தடுக்க நிர்வாகம் கூறியுள்ளது.
தோழர்கள் P.Nபெருமாள் , மற்றும் ND ராம் அவர்களை வாழ்த்துகிறோம்.

STRIKE MEETING 26/08/2015

சிறப்பு  கூ ட்டம்  26/08/2015 

வேலை நிறுத்த ஆயத்த சிறப்பு  கூ ட்டம்  26/08/2015 அன்று நடை பெற்றது.

போரம்  தலைவர்  காமராஜ்  தலைமை ஏற்க  சுப்பிரமணியன் 

 வரவேற்புரை  நல்கினார் .

தோழர்கள்  பிர்லின் இசக் 

 தஞ்சை  நடராஜன் மாநில  உதவிசெயலர் ,NFTE,

பாபு ராத கிருஷ்ணன்  BSNLEU  மாநிலசெயல்ர்  ஆகியோர்  உரை 

ஆற்றினார்கள்.

100 தோழர்கள்  பங்கேற்று  சிறப்பித்தனர் .

திங்கள், ஆகஸ்ட் 24, 2015

மாவட்ட செயற்குழு கூட்ட முடிவுகள்  மாவட்ட மாநாட்டை வரும் செப் 28 (அ) 29 தேதிகளில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. சார்பாளர் கட்டணம் ரூ100/- அனைவரும் சார்பாளர்கள் என தீர்மானிக்கப்பட்டது.  வெளிப்புறக்கிளைக்கு தோழர்கள் தனுசுராமன்,கிருஸ்ணன், குமணன், உட்புறக்கிளைக்கு தோழர்கள் ஸ்ரீதர்,ஹரிஹரன், சுவாமிநாதன், க்ருப்ஸ் கிளைக்கு தோழர்கள் நாகலிஙம், பெரியண்ணசாமி, காசிநாதன் ஆகியோர் சார்பாளர்கள் கட்டணம் வசூலிக்க,சார்பாளர்கள் பெயர் பதிவுசெய்து ,கிளைசெயலர் மூலமாக அனுப்ப பொறுப்பாக செயல்படவேண்டும்..  மாநாட்டுக்கு / மாவட்ட சங்கத்திற்க்கு நன்கொடை ரூ500/ வசூலிக்கலாம் என்ற தோழர் ராஜாமணி ஆலோசனை ஏற்க்கப்பட்டு உறுப்பினர்களிடம் நன்கொடை கோர திட்டமிடப்பட்டது.  மாநாட்டு வழிகாட்டும் குழுவாக தோழர்கள் மகேஸ்வரன், ஹரிஹரன்,தண்டபாணி, செல்வரஙம் புஸ்பராஜ், தங்கமணி,ராஜாமணி,கிளைசெயளர்கள் கிருஸ்ணன்,நாகலிஙம், ஸ்ரீதர், மாவட்டசெயலர் காமராஜ் மற்றும் அசோகராஜன் செயல்படுவாரகள்.  தோழர்கள் மகேஸ்வரன் ,ஹரிஹரன் பதவி விலகல் கடிதம் ஏற்க்கப்படவில்லை, தோழர் காமராஜ் உள்ளிட்ட தோழர்கள் குழு சென்று மீண்டும் அவர்களை சென்று சந்திப்பது என தீர்மானிக்கப்பட்டது.  தோழர் டி.குணசேகரன் மாவட்ட மாநாட்டுக்கு சாப்பாட்டு செலவு ரூ10,000/=பொறுப்பை ஏற்றுகொண்டார், வழங்கியுள்ளார்.அவரை செயற்குழு பாராட்டுகிறது.  செப் 2 அ இ வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடத்திட தொலைபேசியக கூட்டங்கள், சிறப்புக்கூட்டம், உள்ளிட்ட இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திட திட்டமிடப்பட்டது.  தோழர்கள் எஸ்.சந்திரபாலன், டி.குணசேகரன் பணிஓய்வு பாராட்டு நடத்தப்பட்டது.  அஞ்சல் அட்டை இயக்கம் வெற்றிகரமாக நடத்திட தீர்மானிக்கப்பட்டது. செய்திகள் 1) தோழர்கள் G.மனோகரன், K.முரளி, K.சரவணன் ஆகியோர் TTA போட்டிதேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். அவர்களை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது. 2) டெல்லி மாநிலசெயலர்கள் கூட்டமுடிவு அடிப்படையில் உறுப்பினர் சரிபார்ப்புக்கு தயாராகவேண்டும். 3) மாநில செயற்குழுகூட்டம் செப்23 தேதியில் மயிலாடுதுறையில் நடைபெறும்.

மாவட்ட செயற்குழு கூட்ட முடிவுகள்

v  மாவட்ட மாநாட்டை வரும் செப் 28 (அ) 29 தேதிகளில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. சார்பாளர் கட்டணம் ரூ100/- அனைவரும் சார்பாளர்கள் என தீர்மானிக்கப்பட்டது.

v  வெளிப்புறக்கிளைக்கு தோழர்கள் தனுசுராமன்,கிருஸ்ணன், குமணன், உட்புறக்கிளைக்கு தோழர்கள் ஸ்ரீதர்,ஹரிஹரன், சுவாமிநாதன், க்ருப்ஸ் கிளைக்கு தோழர்கள் நாகலிஙம், பெரியண்ணசாமி, காசிநாதன் ஆகியோர் சார்பாளர்கள் கட்டணம் வசூலிக்க,சார்பாளர்கள் பெயர் பதிவுசெய்து ,கிளைசெயலர் மூலமாக அனுப்ப பொறுப்பாக செயல்படவேண்டும்..

v  மாநாட்டுக்கு / மாவட்ட சங்கத்திற்க்கு நன்கொடை ரூ500/ வசூலிக்கலாம் என்ற தோழர் ராஜாமணி ஆலோசனை ஏற்க்கப்பட்டு உறுப்பினர்களிடம் நன்கொடை கோர திட்டமிடப்பட்டது.

v  மாநாட்டு வழிகாட்டும் குழுவாக தோழர்கள் மகேஸ்வரன், ஹரிஹரன்,தண்டபாணி, செல்வரஙம் புஸ்பராஜ், தங்கமணி,ராஜாமணி,கிளைசெயளர்கள் கிருஸ்ணன்,நாகலிஙம், ஸ்ரீதர், மாவட்டசெயலர் காமராஜ் மற்றும் அசோகராஜன்  செயல்படுவாரகள்.

v  தோழர்கள் மகேஸ்வரன் ,ஹரிஹரன் பதவி விலகல் கடிதம் ஏற்க்கப்படவில்லை, தோழர் காமராஜ் உள்ளிட்ட தோழர்கள் குழு சென்று மீண்டும்  அவர்களை சென்று சந்திப்பது என தீர்மானிக்கப்பட்டது.

v  தோழர் டி.குணசேகரன் மாவட்ட மாநாட்டுக்கு சாப்பாட்டு செலவு ரூ10,000/=பொறுப்பை ஏற்றுகொண்டார், வழங்கியுள்ளார்.அவரை செயற்குழு பாராட்டுகிறது.

v  செப் 2 அ இ வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடத்திட தொலைபேசியக கூட்டங்கள், சிறப்புக்கூட்டம், உள்ளிட்ட இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திட திட்டமிடப்பட்டது.
v  தோழர்கள் எஸ்.சந்திரபாலன், டி.குணசேகரன் பணிஓய்வு பாராட்டு நடத்தப்பட்டது.

v  அஞ்சல் அட்டை இயக்கம் வெற்றிகரமாக நடத்திட தீர்மானிக்கப்பட்டது.

செய்திகள்

1)       தோழர்கள் G.மனோகரன், K.முரளி, K.சரவணன் ஆகியோர் TTA போட்டிதேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். அவர்களை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது.
2)       டெல்லி மாநிலசெயலர்கள் கூட்டமுடிவு அடிப்படையில் உறுப்பினர் சரிபார்ப்புக்கு தயாராகவேண்டும்.
3)       மாநில செயற்குழுகூட்டம் செப்23 தேதியில் மயிலாடுதுறையில் நடைபெறும்.



TTA exam results

TTA இலாக்காத்தேர்வு முடிவுகள் 

07/06/2015 அன்று நடைபெற்ற 
TTA இலாக்காத்தேர்வு 
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் உள்ள  439 காலியிடங்களுக்கு 
74 தோழர்கள் மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர். 
இரண்டு தோழர்களின் முடிவுகள் 
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

புதுவை மாவட்டத்தில்  3 தோழர்கள்  வெற்றி பெற்றுள்ளனர் )       தோழர்கள்  G.மனோகரன், K.முரளி, 

K. சரவணன் ஆகியோர் TTA போட்டிதேர்வில்

வெற்றிபெற்றுள்ளனர். அவர்களை மாவட்ட 

சங்கம் பாராட்டுகிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

அஞ்சலி

 அஞ்சலி 
நமது சம்மேளனத்தின்  தலைவராகவும் , தந்தி பிரிவு தலைவராகவும், செயல்பட்டு  மே வங்க , கல்கத்தா மாநில முன்னணி தலைவராகவும் திகழ்ந்த  தோழர்  பாவல்   இன்று  21/08/2015 மறைந்தார் . அவருக்கு நமது  ஆழ்ந்த  அஞ்சலி

கூட்டுறவு சங்க போலிகள் போராட்டம்

சென்னை ஊழியர் சங்க கூட்டுறவு சங்க செயல்பாட்டில் தலையிடுவது, BSNLEU  சங்க கட்டுபாடில் சென்ற காலம் போல வைத்திருப்பது என்பது நமது சங்க கருத்துக்கு ஏற்புடையதல்ல. அதன் தேர்ந்தடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அதன் முழு செயல்பாட்டுக்கு பொறுப்பு ஆவார்கள். பல சங்க ஊழியர்கள் பங்கேற்று  நடத்தும்  அமைப்பில் ஓரு சங்க தலையீடு ,அச்சுறுத்தல் என்பது நோக்கமுடையது.

  • 16% மட்டுமே வட்டி என்பதை மறைத்து 16.5% என் பொய் பிரச்ச்சாரம் செய்வது காலம் காலமாக இவர்களது வாடிக்கை. 5 லட்சம் கடன் உயர்வு காரணமாக ICICI வங்கியில் கடன் பெற்ற பொழுது 16.5% வட்டியை உயர்த்திய பொழுது அமைதி காத்து, ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி ஏற்று கொண்ட்து ஏன் ? கடன் செலுத்தியபின் வட்டியை 2  % குறைத்த பொழுது நிர்வாகம் நலிந்துவிடும் என பேசி வட்டியை குறைக்க கூடாது என பேசியவர்கள்(நடவடிக்கை குறிப்பு) இன்று அவரே வட்டி குறைக்க மனு கொடுத்து, புகைப்படம் எடுத்து, சாகவாசமாக  நாடகம் நடத்தியுள்ளனர்.
  • THRIFT FUND  வட்டி 8% மிருந்து 9 % ஆக உயர்த்தியதை, முடிவை அனைத்து பகுதியிலும் அனைவரும் சுற்ற்றிக்கை அனுப்பியதை மறைத்து, புதிய கண்டுபிடிப்பாக கூறுவது நோக்கமுடையது.
  • பொதுவான RGB கையழுத்து பெறுவதாக , சங்கமற்று கையழுத்து பெறுவதாக கூறி,  கையழுத்து பெற்றவர்கள் அதை ஒரு சங்க  போராட்டமாக ஏமாற்றுவது ஏன்? அதில் கூட பல நூறு கையழுத்து கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அல்ல.  சென்னையில் இதை சங்க  போராட்டமாக ஏன் நடத்துவதில்லை?  சென்னயில் மாற்று கருத்தா?
  • தேர்தலுக்கு முன் 6 ஆண்டுகாலம் இருந்தபொழுது ஏதும் செய்யமுடியாதவர்கள், இன்று மனை பற்றிபேசுவது வெறும் பொழுது போக்கு மட்டுமே.
  • இவை எல்லாம் தமிழ்நாட்டிற்க்கு மட்டுமே. உறுப்பினர் சங்க தேர்தலுக்கு தயார் செய்யும் பொய் பிரச்சாரம் துவக்கமே இது ஆகும். சங்கதேர்தலுக்கு வேறும் ஏதும் இல்லை என்பதால் இது கையில் எடுக்கப்பட்டுள்ளது.
  • சங்க கூட்டுறவு சங்க செயல்பாட்டை தேர்ந்தடுக்கப்ப்ட்ட RGB, இயக்குநர்கள் இயக்கட்டும்.ரிமோட் கண்ட்ரோல் முறை மற்றும் அச்சுறுத்தல் தேவையற்றது. BSNLEU சங்க தலையீடு திட்டமிட்ட நோக்கத்துடன் செய்யப்படுவதை தவிர்ப்போம்.