சனி, மே 30, 2015

அசோகராஜனின் அராஜகம்,

அசோகராஜனின் அராஜகம், அத்துமீறல்
புதுவை மாவட்ட மாநாடு முடிந்து தோழர் காமராஜ் மாவட்டசெயலர் 

பொறுப்பேற்றதுமுதல் ஒத்துழையாமை துவக்கப்பட்ட்து.மாறுபட்ட கருத்து 

என்றமுறையில் பொய்செய்திகளை திட்டமிட்டு பேசுவது, திரித்து கூறுவது 

என அவரது லீலை தொடங்கியது. மதுரை மாநாட்டுக்கு முன்னரே மாநாடு ரசீது புத்தகங்களை பெற்று வசூல் செய்தவர் இன்றுவரை 

ஒப்படைக்கமறுத்து வரும் நல்லவர். மாவட்ட சங்கபணத்தை ரூ1,55000/ தர மறுத்து ஊருக்கு உபதேசம் செய்து வருபவர். பலமுறை மாவட்ட 

செயற்குழுவில் பல தோழர்கள் சுட்டிகாட்டியபின்னும் நல்லவர் வேசம் கட்டும் வல்லவர். இவர் மாநில பொருளர் பொறுப்பில்  தொடர்வது முறையற்ற செயல் என் புதுவையில் இவர் காதுபட பேசினாலும் எதையும் தாங்கும் தாரளமன்ம் படைத்தவர்.
உறுப்பினர் தேர்தலில் நமது சங்கம் தோற்க்கடிக்க கடலூர் போல புதுவையிலும் திட்டமிட்டு தனி வசூல், தனிபயணம்,இறுதியில்14 வாக்குகள் வீணடிக்கப்பட்டு 10 வாக்குகளில் நமது சங்கம் தோற்க்கடிக்க நல்ல பணி ஆற்றியவர்.
மாவட்டசங்கத்திற்க்கு நன்கொடை அளிக்காதே என அன்பு அட்வைஸ் சங்கவைரவிழாவிற்க்கு நிதி தரக்கூடாது என கூட்டம் போட்டு முடிவு செய்து அமுல்படுத்திய யோக்கியவான்.
இண்டோர் கிளை மாநாட்டை அறிவித்த தேதியில், நேரத்தில் நடத்தாமல், மாவட்ட செயலர் அறியாமால் 5 பேர் மட்டும் வைத்து பட்டியல் போட்டு முன்கூட்டியே கையேழுத்து பெற்ற நோட்டை பயன் படுத்திய சங்க விரோத உத்தம தியாகி.
6 மாத காலாமாக மாநிலசெயலர் மாநாடு முறையாக நடக்கவில்லை மாநாடு நடத்துங்கள் பல கடிதம் முன்னால் கிளை செயலருக்கு எழுதியும் முன்னேற்றமில்லை. 21 உறுப்பினர்கள்,நாங்கள் மாநாடு எதிலும் கலந்துகொள்ளவில்லை நிர்வாகிபட்டியலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என கடிதம் மாநிலசெயலருக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.
இண்டோர் கிளை மாநாடு நடத்த மாநிலசெயலர் வழங்கிய இமெயில் கடிதத்தை போர்ஜரி என வர்ணித்து மாவட்டசெயலர் காமராஜ் மீது
மாநில பொருளர் என்ற பதவியை பயன்படுத்தி, மாநிலசெயலர் அறியாமல், மாநிலசங்க போர்வையில் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்க்ளுக்கு புகார் கடிதம் கொடுத்துள்ளார். நகலை மாநிலசெயலர், நிர்வாகம் ஆகியோருக்கு கொடுத்து மாவட்டசெயலர் மீது  கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரியுள்ள நல்ல மனம் படைத்தவர்.
சேலத்தில் தோழர் நூருல்லா மாநில தலைவர்  மீது நில அபகரிப்பு மத்தியசங்க போர்வயில் புகார் கடிதம் கொடுத்து பணிஓய்வுக்கு முன் கைது செய்ய ஆலாய் பறந்த்தவர்களின் வழி வந்தவர்கள் அல்லவா
இதை மட்டுமே செய்யமுடியும்.

காவல்துறை வரட்டும். சந்திக்க காத்திருப்போம்.

வெள்ளி, மே 29, 2015

RETIREMENT 2015 MAY

பணி ஓய்வு  வாழ்த்துகிறோம் 


தோழர்  சந்திரபாலன் ,TM

 தோழர் குணசேகரன் ,TM

புதன், மே 27, 2015

SEP 2 NATIONAL STRIKE

செப் 2 நாடு  தழுவிய  வேலைநிறுத்தம் 
SEP 2-2015 STIRKE CLICK

jJUNE 10 DHARNA

சேலம் மாவட்ட மாநாடு

  • 27-5-15 சேலம் மாவட்ட மாநாடு மிகப் பிரம்மாண்டமான வகையில் 4 மாத திட்டமிடுதலுடன் நடந்தேறியது. இளைஞர் குழாமும் அனுபவம் மிக்க மூத்தவர்களும் கரம் கோர்த்து புதிய வரலாற்றை படைத்தனர். ஊரெங்கும் செந்தோரணங்கள், நமது மாட்சிமை தாங்கிய தட்டிகள், தோழர் குப்தாவின் பேசும்படம்.. தோழமை மற்றும் நகர தொழிற்சங்க தலைவர்கள் ,GM உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்தினர். தோழர்கள் ஆர்.கே, சேது, காமராஜ், சென்னகேசவன், ராபர்ட்ஸ், நடராஜன், ராஜா, மணி, வெங்கட்ராமன்,ஸ்ரீதர், விஜய், எம்.எஸ்,பட்டாபி என தலைவர்கள் கருத்துரை, சிறப்புரையாற்றினர். மாநில சங்க சுற்றறிக்கைகள் 100 புத்தக வடிவில் சேலம் மாவட்ட தோழர்கள் கொணர்ந்து பயன் நிறைந்த பணி ஒன்றை ஏராள பொருட்செலவில் செய்துள்ளனர். தோழர் ஆர்.கே வெளியிட, எம்.எஸ் பெற்றார். தோழர்கள் எஸ். சின்னசாமி, சி.பாலகுமார், எஸ். காமராஜ் மீண்டும் தலைவர், செயலர், பொருளர் பொறுப்புகளை சுமக்கின்றனர். 600க்கும் மேற்பட்ட தோழர்கள் கூடியதும், தோழமை ததும்ப உபசரிப்பு, அமைதியான மாநாடு என்பதும் பாராட்டிற்குரியது. தோழர் பாலகுமார் மற்றும் பொறுப்பாளர்கள் டீம் வெல்லட்டும்.எம்.எஸ், கஜேந்திரன், தேவராஜன், வெங்கட், ராஜா என்ற மூத்தோர் குழாம் துணைநின்று தோள் கொடுக்கட்டும்
செய்திகள் 

  • 01/06/2015 முதல் சேவை வரி SERVICE TAX 12.36 சதத்திலிருந்து 14சதமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை தனியாக வசூல் செய்யப்பட்ட கல்வி வரி தற்போது 14 சத வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும். போகிற போக்கில் செலவில் பாதி சேவை வரி என்று ஆனாலும் ஆச்சரியமில்லை.

  • ITI இரண்டாண்டு கல்வித்தகுதி உள்ள தோழர்கள் எந்த பாடப்பிரிவை  எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலும்,  9020 சம்பள விகிதத்தில் நியமனம் செய்யப்பட்ட 5ஆண்டுகள் சேவை உள்ள  SPORTS ASSISTANTS விளையாட்டு வீரர்களும்   TTA இலாக்காத்தேர்வு எழுதலாம் என BSNL தலைமையகம் விளக்கமளித்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்காமல் நேரடியாக பெறப்பட்ட பட்ட வகுப்புகள் செல்லாது எனவும் BSNL விளக்கமளித்துள்ளது. 

  •  GPF முன்பணம் வழங்குவது உள்ளிட்ட  அனைத்து  GPF சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் DOT CELLக்கு அனுப்பிட வேண்டும் என DOT  நமது  BSNL  உருவான 15 ஆண்டுகளுக்குப்பின் பிரச்சினையை எழுப்பியுள்ளது.  முன்பணம் வழங்கும் அதிகாரம் DOT க்கு சென்றுவிட்டால் மேலும் பிரச்சினைகள் உருவாகும் என நமது சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. .

  • மருத்துவபில்கள் பட்டுவாடா செய்வதில் கடும் தாமதம் நிலவுவதால் பல மருத்துவமனைகள் BSNL ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தயங்குகின்றன. நமது ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தரமுள்ள மருத்துவமனைகளின் பில்களை உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும் எனவும் தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் BSNL நிர்வாகம் மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

  • 7.5 லட்சம் வங்கி ஊழியர்களுக்கு 15 சத ஊதிய உயர்வு அளிப்பதற்கான இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 30 மாத நிலுவைத்தொகையும் வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும்

  • இந்தியாவில் அகன்ற அலைவரிசை இணைப்புக்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தொட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.


  • தமிழகத்தின் CGM ஆக தற்போது பொறுப்பில் உள்ள                 திரு. G.V .ரெட்டி அவர்கள் 30/09/2015 அன்று பணி நிறைவு செய்கின்றார். எனவே அவரது இடத்தில் பணி புரிய தற்போது சென்னையில் PGM ஆகப்பணிபுரியும்  திருமதி.பூங்குழலி அவர்களுக்கு தமிழ்நாடு வட்டத்திற்கு மாற்றல் வழங்கப்பட்டுள்ளது.