9-7-15 ஜூலை 8 தர்மபுரி விழா: தர்மபுரியின் சிறந்த தலைவர் தோழர்
முனியனின் பணிசிறப்பு பாராட்டுவிழா தோழர் விமலா
தலைமையில் திரளான தோழர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.
அனைத்து சங்கதலைவர்களும் தோழர்களும்,நமது இயக்க அனைத்து
தலைவர்களும் பாராட்டி உரையாற்றினர்.
பிற்பகல் நிகழ்வாக மாநில சங்க சார்பில் சிந்தனை பகிர்வு சிறப்பு
அரங்கம் அதற்கே உரிய தோழர்களின் அமர்வுடன் நடந்தேறியது.
தோழர் லட்சம் தலைமையில் தோழர்கள் மணி, நடராஜன்
வரவேற்புரையாற்றினர். தோழர் சேது அமர்வை துவக்கி வைத்தார்.
தோழர்கள் இந்திரஜித், ஜெயராமன், ஜெயபால் பாவேந்தர்
குறித்தும், தோழர்கள் தமிழ்மணி, காமராஜ் பாபசாகேப் அம்பேத்கார்
குறித்தும், தோழர் அசோகராஜன் WFTU வரலாற்று தேவை குறித்தும்
கருத்து செறிந்த உரை தந்தனர். முன்னதாக தஞ்சை தோழர்
பெருங்கவி இக்பால் தலைமையில் நடந்த கவிப்பொழிவில் கவி
சீனிவாசன், இளஞ்சிட்டுக்கள் பாலு,விஜய் தமிழ் பெய்தனர். விழாவின்
அவசியம் குறித்தும் அம்பேத்கார், பாரதிதாசன் மேன்மை
குறித்தும் WFTUவில் தனக்கு ஏற்பட்ட நேரடி அனுபவம் குறித்தும்
தோழர் ஆர் கே நிறைவுரை செய்து இருந்த தோழர்களை
உற்சாகப்படுத்தினார். தோழர் முரளி நன்றி பாராட்டினார். பொருட்
செலவை சிரமமாக கருதாது சிறக்க ஏற்பாடுகளை தோழர்கள்
மணி, முனியன் மற்றும் தர்மபுரி தோழர்கள் செய்து புதிய வரலாற்று
பக்கம் ஒன்றை நமக்கு சேர்த்துள்ளனர். மாவட்டங்களிலிருந்து
பங்கேற்ற தலைவர்கள், தோழர்களுக்கு நன்றி ! வாழ்க !