சனி, மே 31, 2014

தோழர் செல்வம்பணி ஓய்வு பாராட்டு விழா



கடலூரில்  NFTE மாவட்ட தலைவர்/TMTCLU மாநில செயலர் தோழர் செல்வம் மற்றும் தோழியர் ரேவதி ஆகியோரின் பணி ஓய்வு பாராட்டு விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. விழாவிற்கு தோழர்கள் சிரில் அறக்கட்டளை பொறுப்பாளர் சீனிவாசன் மற்றும் துரை தலைமை வகித்தனர்.தோழர் ஸ்ரீதர் மாவட்டசெயலர் முன்னிலை வகித்தார்.  தோழர்  ரவிச்சந்திரன்வரவேற்ப்புரைநிகழ்த்தினார்.தோழர்கள் தமிழ்மணி,கடலூர் ரகு,சம்மேளன செயலர் ஜெயராமன்,மாநில அமைப்பு செயலர் அன்பழகன்,DGM (F),DGM (CFA ),DGM (CM ),BSNLEU தலைவர்கள்,மதுரை சேது,TMTCLU மாநில பொருளர் குடந்தை விஜய்
பாண்டி காமராஜ்,மாநிலதுணைசெயலர் கோவை ராபட்ஸ்,மாநிலசெயலர்தோழர்பட்டாபி,
அன்புத்தலைவர்R.Kஆகியோர்கள்கலந்து
கொண்டனர்.நமது மாவட்டத்திலிருந்து தோழர்கள் ஆரூர்சிவா, கூடூர் குணா,TMTCLU மாவட்ட தலைவர் தோழர் நாடி, TMTCLU தஞ்சை பகுதி தோழர் பொம்மையன்,தோழர் நடராஜன் ஆகியோர்கள்கலந்துகொண்டனர்.கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட தோழர்களும் 
தோழியர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர் ,,,







சனி, மே 24, 2014

அகில இந்திய மாநாடு

அகில இந்திய  மாநாடு

அகில இந்திய  மாநாடு வரும்  அக்டோபர் 10 முதல் 

13 வரை  ஜபல்பூரில்  நடைபெற  உள்ளது .


வெள்ளி, மே 23, 2014

நமது NFTE கூட்டணி..மகத்தான வெற்றி

சென்னைக்கூட்டுறவு சங்க இயக்குனர்கள் தேர்தல்...
நமது NFTE கூட்டணி...வரலாற்று சிறப்புமிக்க...
 ...! வெற்றி...!வெற்றி...!         

20-05-2014 செவ்வாய் கிழமை அன்று  நடைபெற்ற சென்னைக்கூட்டுறவு சங்க 
இயக்குனர்கள் தேர்தலில் 21 இடங்களையும் 
நமது NFTE  தலைமையிலான 
அணி வெற்றி பெற்றுள்ளது.

இயக்குனர்கள் தேர்தல் முடிவுகள்

தமிழ்நாடு

மொத்த வாக்குகள் : 127
மொத்த இடங்கள் : 10
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 10

K. அசோகன், சென்னை : 70
A. ஞானசேகர், திருச்சி : 67
A. குல்சார் அஹமது, ஈரோடு : 69
P. இளங்கோவன், மதுரை : 70
V. கிருஷ்ணமூர்த்தி, கடலூர் : 69
V. நாகராஜா, பெங்களூர் : 70
S. பார்த்திபன், சென்னை : 70
R. ராஜேந்திரன், தஞ்சாவூர் : 71
P. சண்முகம், திருநெல்வேலி : 68
S. வீரராகவன், வேலூர் : 75

சென்னை தொலைபேசி 

மொத்த வாக்குகள் : 68
மொத்த இடங்கள் : 8
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 8

V. பாபு : 40
V. பாஸ்கர் : 39
T.V. பீமாராவ் : 50
P. D. சந்திரபாபு : 41
K. சிதம்பரம்பிள்ளை : 41
A. கிருஷ்ணமூர்த்தி : 39
K. ரகுநாதன் : 41
R. திரிசங்கு : 42

பொது பிரிவு ( மகளிர் இட ஒதுக்கீடு) 

மொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )
மொத்த இடங்கள் : 2
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 2

பிரேமா ஜீவானந்தம், திருச்சி : 106
M. செல்வி, சென்னை : 114


பொது பிரிவு ( SC / ST இட ஒதுக்கீடு) 




மொத்த வாக்குகள் : 195 ( தமிழ்நாடு மற்றும் சென்னை )
மொத்த இடங்கள் : 1
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் : 1

G. ராஜ்குமார், வேலூர் : 107

வெற்றி பெற்ற 21 இயக்குனர்கள் கூடி
புதிய நிர்வாகிகளை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.

தலைவர் : தோழர். S. வீரராகவன் 

      துணை தலைவர் : தோழர். K. ரகுநாதன் 

பொருளர் : தோழர். R. திரிசங்கு 

நிர்வாகிகள் தேர்வுக்கு பின் நடைபெற்ற 

இயக்குனர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள். 

  • வட்டி உடனடியாக 1% சதவீதம் குறைக்கப்படும்.
  • உறுப்பினர்கள் நலன் கருதி பெங்களூர்-ல் ஒரு கிளை துவக்கப்படும்.
  • கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளுக்கு உதவிட 12 கமிட்டிகள் அமைக்கப்படும். 
  • மத்திய பதிவாளரின் ஒப்புதலுக்குப்பின் இந்த கமிட்டி அமுல்படுத்தப்படும்.          

வெற்றி பெற்ற இயக்குனர்களுக்கும் மற்றும் 
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் 
நமது NFTE-BSNL புதுவை  மாவட்ட சங்கத்தின் 
நல் வாழ்த்துக்கள்......................!

செய்திகள்

செய்திகள் 

JTO மற்றும் TTA பதவிகளுக்கான புதிய ஆளெடுப்பு விதிகள் 
BSNL  வாரிய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்தி மொழிபெயர்ப்பாளர்களாக தற்காலிகப்பதவி உயர்வில் 
பணி புரியும் தோழர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பது பற்றி 
BSNL வாரிய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
BSNL BOARD  வாரிய கூட்டம் ஜுன் 6ந்தேதி நடைபெறும்.

போன் மெக்கானிக் இலாக்கா தேர்வை உடனடியாக நடத்தக்கோரி நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியதன் அடிப்படையில் விரைவில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டு BSNLன் வருமானம் 2.5 சதம் உயர்ந்துள்ளதாகவும், 
செல் வருமானம் 5 சதம் உயர்ந்துள்ளதாகவும்  
புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 

மாதம் ரூ.2000/=க்கு மேல் தொலைபேசிக்கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி பில்களை நேரடியாக 
அவர்களது இருப்பிடத்திற்கு கொண்டுபோய் கொடுக்கவும், 
காசோலையை நேரடியாக பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யுமாறு 
மாநில CGMகளை CMD கேட்டுக்கொண்டுள்ளார். 
இந்தப்பணிக்கு தொலைபேசி வருவாய்ப்பிரிவில் பணி புரியும் SR.TOA தோழர்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்துவதில் உள்ள தாமதத்தைக்களையக்கோரி AIBSNLPWA  ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பாக தோழர்.முத்தியாலு தலைமையில் DOT செயலரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஆவண செய்வதாக DOT  செயலர் உறுதியளித்துள்ளார்.

தோழர். K.T.K.தங்கமணி



19-05-2014 திங்கட்கிழமை அன்று 
தமிழ்நாடு AITUC அலுவலகத்தில்
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர்
தோழர்.தா.பாண்டியன் அவர்கள் தலைமையில் 
அவர்களின்
நூற்றாண்டு துவக்கவிழா மற்றும் அவரது 
திருவுருவ படத்திறப்புவிழா நடைபெற்றது.

AITUC மாநில செயலர் தோழர்.T.M.மூர்த்தி 
மற்றும் பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் 
பங்கேற்றனர். நமது NFTE தொழிற்சங்கம் சார்பாக 
மாநில செயலர் தோழர். பட்டாபிராமன்
அகில இந்திய அமைப்பு செயலர்
தோழர்.S.S.கோபாலகிருஷ்ணன் 
புதுவை மாவட்ட செயலர் தோழர்.காமராஜ் 
சேலம் மாவட்ட செயலர் 
தோழர்.பாலகுமார் மற்றும் 
சேலம் மாவட்ட தலைவர் தோழர்.சின்னசாமி 
ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

விழாவில் தோழர். K.T.K. தங்கமணி அவர்களை 
பற்றி தினம் ஒரு செய்தி  முக நூலில் அறிந்து கொள்ள
" KTK-100" எனும் சமூக வலைத்தளம் துவக்கப்பட்டது.

ஓயாது உழைத்த உத்தமர்... K.T.K புகழ் பாடுவோம்...

வியாழன், மே 22, 2014

CGM உடன் சந்திப்பு

ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகள் 
CGM உடன் சந்திப்பு 

மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி, TMTCLU மாநிலத்தலைவர் தோழர்.ஆர்.கே., TMTCLU மாநிலச்செயலர்  தோழர்.செல்வம்,  தோழர்கள்.தமிழ்மணி, முரளி,காமராஜ் ஆகியோர், 
 மே 17 தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒப்பந்த ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தையொட்டி தமிழக முதன்மைப் பொதுமேலாளரை  
சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

 "ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள் தொழிற்சங்க வரையறைக்குள் வராது" என்ற வழக்கமான பல்லவி பாடப்பட்டாலும், 
CGM பொறுமையுடன் நமது கோரிக்கைகளை செவிமடுத்துள்ளார். 
ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினையில் ஒப்பந்தக்காரர்கள் என்ற இடைத்தரகர்கள் இருந்தாலும், முதன்மை முதலாளி 
PRINCIPAL EMPLOYER என்ற முறையில் BSNLலில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டபூர்வ சலுகைகளை உரிமைகளை அளிக்க வேண்டியது 
BSNL நிர்வாகத்தின் கடமையாகும். 
BSNL நிர்வாகம் தனது கடமையைச்செய்யும் என நம்புவோம். 
நாமும் ஒப்பந்த ஊழியருக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்

தோழர். KTK.தங்கமணி

மே - 2014
தோழர். KTK.தங்கமணி
அவர்களின் நூற்றாண்டு

ஓயாது உழைத்த உத்தமர்

கல்வி இருந்தும் பணிவு கொண்டார் ... 
செல்வம் இருந்தும் எளிமை கொண்டார் 
வீரம் இருந்தும் விவேகம்  கொண்டார்...
குணத்தில் தங்கமானார்...
கொள்கையில் நிறைகுடமானார்..
கதராடை மட்டுமே அணிவார்...
காலுக்கு செருப்பின்றி நடப்பார்..
கருப்பட்டிக்காப்பி குடிப்பார்..
செல்வ செழிப்பில் பிறந்திருந்தாலும்..
செல்லம் சோப்பில் துணி துவைப்பார்..
உழைப்பாளி மக்களுக்காக 
ஓயாது உழைத்த உத்தமர் 
KTK புகழ் பாடுவோம்...
19/12/2014 அன்று AITUC அலுவலகத்தில் நடைபெற்ற  100 வது  ஆண்டு  துவக்க விழாவில்  பட்டாபி,கோபாலக்ரிஷ்ணணன் ,புதுவை காமராஜ் ,சேலம் பாலு,சின்னசாமி ,உட்பட பலர் கலந்து  கொண்டனர் .

தோழர். உமாநாத்

சுதந்திரப்போராட்ட வீரரும் 
சிறந்த பொதுவுடைமைவாதியும் 
நீண்ட கால தொழிற்சங்கவாதியும் 
முன்னாள் சட்டமன்ற 
நாடாளுமன்ற உறுப்பினரும் 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 
மூத்த தலைவருமான 
தோழர். உமாநாத் 
அவர்கள் 
மறைவிற்கு நமது அஞ்சலி.

திங்கள், மே 12, 2014

ஆ ர் ப் பா ட் ட ம்

17/05/2014 – சனிக்கிழமை மாலை 0500 மணி-ங்ம் அலுவலகம்
மாநிலந்தழுவிய  
கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
 அடிமட்ட ஊழியர்களின் அன்புத்தலைவன்.தோழர். ஜெகன் பிறந்த நாளில்,உலகை உள்ளங்கையில் அடக்கிய  உலகத்தொலைத்தொடர்பு தினத்தில், NFTE    இளைஞர்தினத்தில்,அன்றாடக்கூலிகளாய்உழைத்து ஓயும் ஒப்பந்த ஊழியர்களின்    பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரிஅனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும் 
ஆ ர் ப் பா ட் ட ம்
கோரிக்கைகள்
BSNL.. நிர்வாகமே...
·                     குறைந்த பட்ச ஊதியம் ரூ.10,000/= வழங்கு..
·                     ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை கொடு..
·                     மாதந்தோறும் 5ம்தேதிக்குள் சம்பளம் வழங்கு..
·                     வங்கிக்கணக்கில் சம்பளப்பட்டுவாடா செய்..
·                     ஊதியப்பட்டியல் PAY SLIP வழங்கு..
·                     EPF கணக்கை அனைவருக்கும் துவக்கு..
·                     ESI மருத்துவ அட்டை வழங்கு...
·                     EPF SLIP சேமநலநிதி பிடித்தப்பட்டியல் வழங்கு..
·                     அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கு..
·                     அனைவருக்கும் ஆயுள் காப்பீடு வசதி செய்..
·                     குறைந்த பட்சம் 4 மணி நேர வேலை வழங்கு..
·                     தொழில்நுட்ப பணி புரிபவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கு..
·                     ஒப்பந்த ஊழியர் நலன் பேண சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்..

P.காமராஜ்               A.நடராஜன்                M,சரவணன்
மாவட்டசெயலர்,NFTE  மாவட்டகன்வீனர்           மாநில உதவிசெயலர்


சனி, மே 03, 2014

LOCAL COUNCIL,PUDUCHERRY-SSA -AGENDA

1)    Closure /Reroute    the telephone lines of   RLU/RSU Bader  sahib St ,Rainbow Nagar and Thattanchavady
2)    Change of modular at required  BTS ,particularly Bahoor.
3)     Periodicity chart of Power shoe,Chappals,Tools bag, etc
4)    Supply of sales  executive Bag  for the missing period.
5)    Posting of JAO at csc.
6)    Shifting of IMPCS cash counter to ground floor for better subscribers utility.
7)    20%HRA to all employees of TCM,TKN,KKM,KDG.TBI ,BAH,KIU,KRK AND TVK .
8)    Cycle shed to Moolakulam Exge.
9)    Supply of uniforms to the eligible staff at earliest.
10)                      Rotational  transfer of TM cadre from  Rural
11)                      Rotational transfer to Clerical cadre.
12)                      Calling option to TD Natesan nagar and Rainbow nagar.
13)                      Calling option to cash counters and other area before  rotational transfer of clerical duties.

14)                      Provision of WI Fi modem to all telephone exges for outdoor visit testing.